இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாண வர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாண வர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பி.எட். படிப்பில் இருப்பதைப் போல இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய தாள் சேர்க்கப்படும்.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணியிலோ, பட்டதாரி ஆசிரியர் பணியிலோ சேர முடியும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளி லும், தனியார் பள்ளிகளிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப் படுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு பி.எட். மாணவர்களை படிக்கும் காலத்தி லேயே தகுதித்தேர்வுக்கு தயார் படுத்தும் வண்ணம் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான சிறப்பு தாள் ஒன்றை சேர்த்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இந்த புதிய முயற்சி, பி.எட். மாணவ-மாணவிகள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பிலும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறும்போது, தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய பாடத்தை இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் (ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு) சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழ கத்தின் ஆலோசனை பெறப்படும் என்றார்.

Comments