அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம் பற்றிய ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது. கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது. முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments