ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் தேர்வு ஹால்டிக்கெட், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த தேர்வு முடிவு நகல், பணிநியமன ஆணையை காண்பித்து சான்றை பெற்று செல்கின்றனர்.வரும் 30ம் தேதி வரை ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 2014–ம் ஆண்டு மே மாதம் தான் தொடங்க வேண்டும். முன் கூட்டியே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 2014–ம் ஆண்டு மே மாதம் தான் தொடங்க வேண்டும். முன் கூட்டியே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ள சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நிர்வாகம், அடுத்த (2014–15–ம்) கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, இந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கி விடுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இவ்வாறு அடுத்த கல்வியாண்டுக்கு இப்போதே மாணவர் சேர்க்கை மேற்கொள்வது, விதிகளுக்கு புறம்பானது.

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்ட விதிகளின்படி நுழைவுநிலை வகுப்புகளில், நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குறைந்தபட்சம் 25 சதவீத சேர்க்கை வழங்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகள், அதை மேற்கொள்ள வேண்டிய மாதங்கள் ஆகியவைகளை நிர்ணயம் செய்து தமிழக அரசு 1–4–2013 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, நலிவடைந்த, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீதம் இடங்களை நிரப்பும் நடவடிக்கையை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மேற்கொள்ள வேண்டும். எனவே, மாணவர் சேர்க்கையை முன் கூட்டியே (முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம்) நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல. இதனால், 25 சதவீதத்திற்கான இடஒதுக்கீடானது சரியாக ஒதுக்க இயலாத நிலை ஏற்படும்.

எனவே 2014–15–ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 2014–ம் ஆண்டு மே மாதம் மட்டுமே நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கையை முன் கூட்டியே மேற்கொண்டால், அந்த சேர்க்கை ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதேபோல, சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் மண்டல தலைமை அதிகாரிக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘தமிழக அரசின் உத்தரவுபடி, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 2014–15–ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2014–ம் ஆண்டு மே மாதம் தான் மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீறுகிறதா? என்பது குறித்து தாங்கள் கண்காணிக்க வேண்டும். உத்தரவை மீறி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த விவர அறிக்கையை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடைபெற உள்ளது" என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடைபெற உள்ளது" என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவு: 2014 மார்ச், ஏப்ரலில், 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், டிச.,3ல் சென்னையில் நடக்கிறது. இதில், புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துரு, தற்போதுள்ள தேர்வு மையத்தை வேறு தேர்வு மையத்துடன் இணைத்தல், சில தேர்வு மையத்தை நீக்குதல், சிறைத் தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் அவர்களுக்கு செய்முறைத் தேர்வில் விலக்கு அளித்தல், மாணவர்களுக்கு தேவையான விடைத் தாளின் முதன்மை பகுதி, வினாத்தாள் கட்டுக்காப்பாளர் மையத்தை மாற்றியமைத்தல், பள்ளி மற்றும் அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரப்பதிவேடு, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் எண்ணிக்கை உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், தேவையான விபரத்துடன் பங்கேற்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841

HALF YEARLY EXAM TIME TABLE | பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. அதற்கான தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும்.  

             காலை, 10:00 மணி முதல், 10:10 வரையான 10 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க வழங்கப்படும். அடுத்த, 5 நிமிடம், விடைத்தாளில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15ல் துவங்கும். இந்த 15 நிமிடங்கள், இரு தேர்வுகளுக்கும் பொருந்தும். எனினும், பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரம் என்பதால், 10:15க்கு துவங்கி, 1:15க்கு முடிவடையும். 10ம் வகுப்பு தேர்வு, 10:15க்கு துவங்கி, 12:45க்கு முடியும். 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
HALF YEARLY EXAM TIME TABLE 2013

30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிற இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று தமிழக அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், அதேபோல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சேருபவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றுவிடலாம். யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வுசெய்யப்படும் அனைவருக்கும் சொந்த மாநிலத்திலேயே பணி (ஹோம் ஸ்டேட் கேடர்) கிடைத்துவிடுவதில்லை. ஆனால், குரூப்-1 தேர்வு மூலமாக இந்த பணிகளுக்கு வருபவர்கள் தமிழ்நாட்டிலேயே பணியை தொடரலாம். இதனால், குரூப்-1 தேர்வு எழுவதுவதற்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் பலத்த போட்டியிருக்கும். யு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு கைகொடுப்பது குரூப்-1 தேர்வுதான். குரூப்-1 பதவிகளில் 2012-ம் ஆண்டுக்கான 25 காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக்டோபர் மாதம் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2013-ம் ஆண்டுக்கான 100 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த காலியிடங்களில், 33 துணை ஆட்சியர், 33 துணை கண்காணிப்பாளர் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) பதவியில் மட்டும் காலியிடம் ஏதும் இல்லை. வணிகவரி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட இதர பணிகளில் காலியிடங்கள் வரப்பெற்றுள்ளதாகவும் பணியாளர் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. 

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மே, 28ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. இதன்படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 12ம் தேதி வரை பெறப்பட்டன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி முதல், பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு, சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரி; காமராஜர் சாலையில் உள்ள, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்; அண்ணாசாலையில் உள்ள, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதம், சுயவிவரப் படிவம், ஆளறி சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு படிவம் ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள், அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும். அழைப்புக் கடிதம், விண்ணப்பத்தாரர்களுக்கு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ததன் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுகின்றனர். விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள், விளம்பரம் செய்யப்பட்ட நாளுக்கு முன் அதாவது, மே, 27ம் தேதிக்கு முன் பெற்ற தகுதியே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.தமிழக பொது தேர்வுகள், மார்ச், 3ம் தேதியில் இருந்து, நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழக பொது தேர்வுகள், மார்ச், 3ம் தேதியில் இருந்து, நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட, அனைத்து வகுப்பிற்கும், அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து, அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இதையடுத்து, பொது தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வு துறை தீவிரமாக செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதினர். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, 11.50 லட்சமாகவும், பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, 8.50 லட்சமாகவும் உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சரியான புள்ளி விவரம், டிசம்பர், 15ம் தேதிக்குள் தெரிந்துவிடும். மாவட்ட வாரியாக, பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களை பெறுவதற்காக, 11 வகையான தகவல்கள் அடங்கிய படிவம் பள்ளிகளுக்கு 
ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டன. இதில் கேட்கப்பட்ட தகவல்களை, பூர்த்தி செய்து, மாணவ, மாணவியர், ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த விவரங்கள் அனைத்தும், தேர்வு துறை இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யும் பணி, ஓரிரு நாளில் துவங்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பொது தேர்வுகள், மார்ச், 3ம் தேதியில் (திங்கள் கிழமை) இருந்து துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தனித்தனியே நடைபெறும். வரும் ஆண்டில், இரு தேர்வுகளையும், ஒன்றாக நடத்துவது குறித்து, தேர்வு துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மார்ச், 3ம் வாரத்திற்குள், இரு தேர்வுகளையும் நடத்தி முடிக்க, தேர்வு துறை திட்டமிட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச், 1ம் தேதி முதல் நடைபெறும் என, அதிகாரப்பூர்வமாக நேற்று, அறிவிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வை, 1.75 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 80 ஆயிரம் பேரும் எழுதுவர் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டை விட, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 25 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 10 ஆயிரம் பேரும் கூடுதலாக எழுதுகின்றனர். தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, அக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில், 240 பள்ளிகள் இருந்ததாகவும், தற்போது, பள்ளிகளின் எண்ணிக்கை, 300க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சி.பி.எஸ்.இ., அறிவிப்பை தொடர்ந்து, தமிழக தேர்வு துறையும், பொது தேர்வு குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்பதால், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று நடக்க இருந்த, மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, 24ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.

இன்று நடக்க இருந்த, மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, 24ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், ""புயல் மற்றும் கனமழை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, 24ம் தேதி நடத்தப்படுகிறது. ஏற்கனவே, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள மையங்களிலேயே, தேர்வு நடக்கும்,'' என, தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், இந்த தேர்வை எழுத உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதம், அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்த, ஒரு லட்சம் பேர், திறனறிதல் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும், 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது.

தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில் பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது. தபால் துறை சார்பில், மணியார்டர், "ஸ்பீடு' மணியார்டர் போன்ற சேவைகள், இருந்தாலும், வங்கிகளின், "ஆன்லைன்' பரிவர்த்தனைகள், "டிராப்ட்' போன்ற சேவைகளால், மணியார்டர்களுக்கு வரவேற்பு குறைந்தது. இதனால், மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும், 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது. பணம் அனுப்புவோர், தபால் நிலையம் சென்று, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது பெயர், மொபைல் எண், முகவரியை குறிப்பிட்டு, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், தபால் துறை சார்பில், ஆறு இலக்க ரகசிய குறியீட்டு எண், வழங்கப்படும். பணம் பெறுபவருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், ஆறு இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை, பணம் அனுப்புபவர் தெரிவிக்க வேண்டும். இந்த ரகசிய குறியிட்டு எண், பணம் பரிவர்த்தனை செய்யும் இருவருக்கு மட்டுமே தெரியும். பணம் பெறுபவர் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, மொபைல் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்து, 10 நிமிடத்தில் பணம் பெற்றுக் கொள்ளலாம். 1000 முதல், 1,500 ரூபாய் வரை பணம் அனுப்ப, 45 ரூபாயும், 1,501 முதல், 5,000 வரை, 79 ரூபாயும், 5001 முதல், 10 ஆயிரம் வரை, 112 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த செலவு, 10 நிமிடத்தில் பணப்பரிமாற்றம் போன்றவற்றால், இச்சேவை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.

மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்துமுடிந்த 3-வது தகுதித்தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

அரசுப் பள்ளிகளிலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சரி.. ஏற்கனவே பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற குழப்பம் இன்றுவரை தொடர்கிறது.

இதற்கிடையே, தகுதித்தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், பணி நியமனத்துக்கான பணிகள் (அறிவிப்பு வெளியிடுதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை) தொடங்கப்பட்டிருந்தாலும் அத்தகைய ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

தகுதித்தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த போதிலும் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமலேயே இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நிய மிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு சம்பளமும் வழங்கியது.

யார் யாருக்கு தகுதித்தேர்வு உண்டு, யார் யாருக்கு விதி விலக்கு என்பது சரிவர முடிவுசெய்யப்படாததால் அவ்வப்போது பல மாவட்டங்களில் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்படுவதும், பின்னர் மீண்டும் வழங்கப்படுவதும் என்ற நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 499 ஆசிரியர் களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் இடைநிலை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி களில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உட னடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இருப்பினும், 23.8.2010 முதல் 14.11.2011 வரையிலான காலத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15.11.2011-க்குப் பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

பள்ளிக் கல்வித் துறையைப் போல, தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்) மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் மீதும் தொடக்கக்கல்வி இயக்ககம் தனியே நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயல் காரணமாக16.11.2013 சனிக்கிழமை கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காரைக்கல், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரி்ததுள்ளதால் 16.11.2013 சனிக்கிழமை கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காரைக்கல், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,) தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,) தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில், 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். முதல்நிலை தேர்வு, மாநில அரசால் (பள்ளிக் கல்வித்துறை) நடத்தப்படும்.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2ம் நிலை தேர்வை என்.சி.இ.ஆர்.டி., நடத்தி தேசிய அளவில் ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்கின்றது. இந்தாண்டு முதல்நிலை தேர்வு நவ.17ம், இரண்டாம் நிலை தேர்வு, 11.5.2014லும்நடக்கின்றன. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், மாதம் ரூ.500ம், இளங்கலை பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.ஆயிரம், முதுகலை பட்டப் படிப்பில் மாதம் ரூ.2 ஆயிரம், எம்.பில்., பி.எச்டி., படிக்கும்போது மாதம் ரூ.3 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

அரசு மற்றும் உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் இத்தேர்வில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் பாடங்களிலும், "மனத்திறன்" தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டங்களுக்கு இணையாக கேள்விகள் இடம் பெறுவதால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதில் தேர்ச்சி பெறுவது "குதிரை கொம்பாக" உள்ளது. குறிப்பாக, "மனத்திறன்" பாடப் பகுதி கேள்விகளை அரசு பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளக்கூட முடியாததால், இதில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், மாநில அளவில் இதன் தேர்ச்சி விகிதமும் 6 சதவிகித்திற்கு கீழ் தான் உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாததால், தேர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளாக "ஜீரோ"வாக நீடிக்கிறது.

இத்தேர்வு குறித்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஆசிரியர்களும் இதை பெரிதாக கண்டுகொள்ளாததால், மாணவர்களின் ஆர்வமும் குறைந்து விட்டது. இதனால் தேசிய அளவில், பள்ளிக் கல்வியில் தமிழகம் பின்தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் கூறியதாவது: இத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு இத்தேர்வு குறித்தே எவ்வித விவரமும் தெரிவதில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் "ஜீரோ"வாக உள்ளது.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களால் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, ஆரம்பத்தில் இருந்தே தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

கல்வித் துறையில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில், செயலாளர் சபிதாவும், தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜூம், இந்தாண்டு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். நவ.,17ல் நடக்கும் தேசிய திறனாய்வு தேர்வில், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும், 90 சதவிகிதம் மாணவர்கள் இத்தேர்வில் கட்டாயம் பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி, மதுரை உட்பட பல மாவட்டங்களில், இத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படுகின்றன. இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என பெற்றோர், கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

30 ஆண்டு கால போராட்டத்தால் ஓய்வுபெற்ற பின் கிடைத்த முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவிக்கு உரிய பணபலன்களை பெற முடியாமல், 75 வயதுக்கு மேல் ஆன் 400 "தலைமையாசிரியர்கள்" தவித்து வருகின்றனர்.

30 ஆண்டு கால போராட்டத்தால் ஓய்வுபெற்ற பின் கிடைத்த முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவிக்கு உரிய பணபலன்களை பெற முடியாமல், 75 வயதுக்கு மேல் ஆன் 400 "தலைமையாசிரியர்கள்" தவித்து வருகின்றனர். 

தமிழகத்தில் 1960 வரை கல்வி, சுகாதாரம், கால்நடை துறைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமே (ஜில்லா போர்டு) கவனித்து வந்தது. 1960ல் அவை அந்தந்த துறைகளுடன் இணைக்கப்பட்டன. ஆனால் தொடக்கல்வி, பஞ்சாயத்து யூனியன்களின் நிர்வாகத்தின் கீழும், இடைநிலைக்கல்வி மாவட்ட கலெக்டர்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. 

அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உயர்நிலைப்பள்ளிகள், பயிற்சிப் பள்ளிகள் செயல்பட்டன. இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் "ஏ" பிரிவினர் என்றழைக்கப்பட்டனர். கலெக்டர் கட்டுப்பாட்டில் இயங்கிய பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் "பி" பிரிவினர் எனப்பட்டனர். கடந்த 1.4.70ல் ஜில்லாபோர்டில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசு ஊழியர்களாக ஏற்கப்பட்டனர். 

"ஏ" மற்றும் "பி" பிரிவு பணியாளர்களை ஒருங்கிணைத்து 2.11.1978 ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதில் எந்த தேதியை ஒருங்கிணைப்பு நாளாக முடிவு செய்வது என 1979 ல் பிரச்னை எழுந்தது. அப்போது இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 1.4.70 தான் சரியான ஒருங்கிணைப்பு நாள் என 1979, 1988, 1998ல் சுப்ரீம்கோர்ட் 3 முறை உறுதி செய்தது. 

இதன் பின் 2004ல் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் சீனியாரிட்டி லிஸ்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஆனால், 1979 முதல் 2004 வரை "ஏ" பிரிவு ஜூனியர்கள் டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்று ஓய்வும் பெற்றனர். ஆனால் கலெக்டர் கட்டுப்பாட்டில் இருந்த, "பி" பிரிவு சீனியர்கள் தலைமையாசிரியர்களாக ஓய்வு பெற்றனர். 

திருத்தப்பட்ட சீனியாரிட்டி படி பதவி உயர்வுகளை அளிக்க வேண்டும் என "பி" பிரிவு ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2004ல் வெளியிட்ட சீனியாரிட்டிப்படி பதவி உயர்வுகளை திருத்தியமைத்து பயன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 

இதன்படி பள்ளிக்கல்வித்துறை, திருத்திய டி.இ.ஓ.,க்கள் பட்டியலை 2006, 2010 லும், சி.இ.ஓ.,க்கள் பட்டியலை 2012 லும் வெளியிட்டது. இதன்படி 489 ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பயன்பெற வேண்டும். இவர்களுக்கு தற்போது 75 வயதுக்கு மேல் ஆகி விட்டது. இதில் 45 பேருக்கு மட்டுமே பதவி உயர்வுக்கான சம்பளத்தை மறுநிர்ணயம் செய்து, அதற்கேற்ப பென்ஷன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதில் அரசியல் செல்வாக்கு, பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்துள்ளது. மீதியுள்ளோர் தள்ளாத இந்த வயதிலும் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். ஓய்வுக்கு பின் முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவி பெற்ற இந்த மூத்த குடிமக்கள் விரைவில் தங்களுக்கு உரிய பலன்களை பெற பள்ளிக்கல்வித்துறை மனது வைக்க வேண்டும்.

16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது.

16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம். 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி மாணவ-மாணவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். 

மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) போன்றவை இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும். 

அதில் உள்ள ரகசிய குறியீட்டின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் இனிமேல் தவிர்க்கப்படும். 

தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தின் (ஈ.எம்.ஐ.எஸ்.) கீழ் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 34 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளைப் பற்றிய தகவல்கள் சேர்ப்பு, புகைப்படம் எடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் கிட்டதட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. 

மாணவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பாத பள்ளிகளுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் அவர் பேசியது:
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால்  மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவரும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ. 1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர்.

குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100  தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா. கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கான விருதுகள், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, அதிக உறுப்பினர்களைச் சேர்ந்த நூலகங்களுக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கும்,  அதிக புரவலர்களை சேர்த்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

கடந்த கல்வி ஆண்டில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட போது மாயமாகின. இதுகுறித்து விசாரித்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த சர்ச்சையை, வரும் ஆண்டுகளில் தவிர்க்க, தேர்வு மையத்தில் இருந்து, திருத்தப் படும் மையத்திற்கு, விடைத்தாள்களை கொண்டு செல்வது குறித்து, தேர்வுத்துறை ஆலோசனை நடத்துகிறது.

மொத்தமாக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு வந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, வாகனங்களில் அனுப்பினால் எத்தனை ஊழியர்கள் தேவை; தபால் நிலையத்தில் இருந்து, திருத்தப்படும் மையங்களுக்கு அனுப்பாமல், தலைமை தபால் நிலையங்களில் இருந்து அனுப்பினால் பாதுகாப்பாக இருக்குமா? என ஆலோசிக்கப்படுகிறது; மேலும், கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆசிரியர் விருது: ரூ. 10 லட்சம் வழங்குகிறது துபை கல்வி அறக்கட்டளை

துபையைச் சேர்ந்த வர்கீ ஜெம்ஸ் என்ற இந்தியக் கல்வி அறக்கட்டளை, 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கவுள்ளது.

உலக நாடுகள் ஒவ்வொன்றின் மூலமும் பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் இருந்து, சிறந்த ஆசிரியரை வர்கீ ஜெம்ஸ் கல்வி அறக்கட்டளை தேர்வு செய்து விருது வழங்கவுள்ளது. இந்த விருதுக்கான வெற்றியாளரை சர்வதேச நடுவர் குழு தேர்வு செய்யவுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கு பெறுபவர்களின் விண்ணப்பங்களை லண்டனைச் சேர்ந்த தனியார் சேவை நிறுவனம் ஒன்று தணிக்கை செய்கிறது. இந்த விருதுக்கான பரிந்துரை மனுத் தாக்கல் வரும் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது. அடுத்த 90 நாள்களில் இந்த விருதுக்கான விவரங்கள் வெளியிடப்படவுள்ளன.

இதுகுறித்து வர்கீ ஜெம்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சன்னி வர்கீ கூறியது:

"ஆசிரியர்களை நட்சத்திரங்களாக உயர்த்தவும், சமூகத்திற்கு ஆசிரியர்கள் ஆற்றிவரும் தொண்டை வெளிச்சமிட்டுக் காட்டும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. கல்வித் துறையில் நோபல் பரிசுக்கு இணையாக இந்த விருதைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் தலைமையில் துபையில் நடைபெறவுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

TRB - TET PAPER 2 Weightage Calculator


TRB - TET PAPER 2 Weightage Calculator
உங்களுடைய WEIGHTAGE MARKS அறிய


LEVEL OF QUALIFICATION
Enter Only Marks in %
Weightage
HIGHER SECONDARY MARKS %
To Calc % (+2 MARKS/1200)*100
DEGREE MARKS %
B.ED MARKS %
TET MARKS %
To Calc % (TET MARKS/150)*100Presented By
G.GOUTHAM, 9659255734
P.G.ASST,TIRUVARUR DT
kavingouthamg@gmail.com
Special Thanks To www.kalvisolai.com & Mr.K.K.Devadoss for the welcome support

The new and revised income tax slabs for the financial year (FY) 2013-14 and assessment year (AY) 2014-15

The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2013-14 and assessment year (AY) 2014-15  are mentioned below:
New Income tax slab for fy 2013-14 / ay 2014-15
New Income Tax Slabs for ay 14-15 for Resident Senior Citizens above 60 years (FY 2013-14)
S. No.Income RangeTax percentage
1Up to Rs 2,50,000No tax / exempt
22,50,001 to 5,00,00010%
35,00,001 to 10,00,00020%
4Above 10,00,00030%
New Income Tax Slabs for ay 14-15 for Resident Senior Citizens above 80 years (FY 2013-14)
S. No.Income RangeTax percentage
1Up to Rs 5,00,000No tax / exempt
25,00,001 to 10,00,00020%
3Above 10,00,00030%
New Income Tax Slabs for ay 14-15 for Resident Women (below 60 years) (FY 2013-14)
1Up to Rs 2,00,000No tax / exempt
22,00,001 to 5,00,00010%
35,00,001 to 10,00,00020%
4Above 10,00,00030%
New Income Tax Slabs for ay 14-15 for Others & Men (FY 2013-14)
1Up to Rs 2,00,000No tax / exempt
22,00,001 to 5,00,00010%
35,00,001 to 10,00,00020%
4Above 10,00,00030%
Income Tax Exemption on Housing Loan
Tax rebate on home loans means that you can benefit and save significant part of your tax liability if you have taken a home loan.

It works in following manner.
Interest paid on the home loan
In the budget presented on 28th feb 2013 the interest limit on housing loan has been increased from RS 1.5 L to 2.5 L  for claiming income tax exemption

As per Sec 24(b) of the Income Tax Act, 1961 in India a deduction up to Rs. 150,000 can be claimed as tax exemption on housing loan. This deduction is claimed towards the total interest that we pay on the home loan towards purchase or construction of house property while computing the income from house property.

The interest payable before you acquire home or start the construction work would be deductible in five equal annual installments commencing from the year in which the house has been acquired or constructed.

In case of self- occupied property, housing loan tax benefit is allowed only for one such self – occupied property. The interest towards home loan taken for purchase, construction, repairs, renewal or reconstruction of house property is eligible for deduction under section 24(b).

Principal repayment of the home loan
As per the newly introduced Sections 80C read with section 80CCE of the Income Tax Act, 1961 the principal repayment up to Rs. 1,00,000 on your home loan will be allowed as a deduction from the gross total income subject to fulfillment of prescribed conditions.

Let us consider a hypothetical example.
As per Finance ministers budget speech on 28th Feb 2013:

Your taxable Income: Rs 8,50,000

Principal repayment for the same year: Rs 1,10,000 and Interest payable for the year: Rs 2,60,000

Total Deductions allowed: Rs 3,50,000 (Rs 2,50,000 towards interest payable & Rs 1,00,000 for principal repayment of the loan)

Thus, your taxable income will reduce to Rs 5,00,000 (Rs 8,50,000 – Rs 3,50,000)

மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி விடுமுறையாதலால் தனித்தேர்வர்கள் நவம்பர் 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி விடுமுறையாதலால் தனித்தேர்வர்கள் நவம்பர்  18ம் தேதி முதல், 29ம்  தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெறவிருக்கும் இடைநிலைப்பள்ளி விடுப்புச்சான்றிதழ் / மேல்நிலைத்தேர்வெழுதும்    தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள் விவரம்
9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்: தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மேலும் பழங்குடி இனத்தவருக்கென 4 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 8 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் நலனுக் காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு, செயல் பட்டு வருகின்றன.

இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட தொலை நோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ள இலக்குகளை பூர்த்தி செய்ய தொழில் திறன் பெற்றவர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் விருப் பத்தினை நிறைவு செய் யும் வகையிலும், தமிழ் நாட்டில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவை யினை ஈடு செய்யவும், பல்வேறு காரணங்களினால் உயர்கல்வியினைத் தொடர இயலாத மாணவ, மாணவிகள், தொழிற் பயிற்சி பெற்று அதன் மூலம் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள துணைச் செய்யவும் இத்தகைய தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் நடப்பாண்டில் துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு ; தேனி மாவட்டம் - போடி; விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை; திருநெல்வேலி மாவட்டம் - ராதாபுரம்; தூத்துக்குடி மாவட்டம் - வேப்பலோடை ஆகிய இடங்களில் 5 புதிய

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ; திருவண்ணாமலை மாவட்டம் - ஜமுனாமரத்தூர் ; கோயம்புத்தூர் மாவட்டம் - ஆனைக்கட்டி ; நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ; நீலகிரி மாவட்டம் - கூடலூர் ஆகிய இடங்களில் பழங்குடி இனத்தவருக்கென 4 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள்; என மொத்தம் 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் தொடஙி வைத்துள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.

வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தின் அடிமட்ட அளவில் மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.). சாதிச் சான்று, இருப்பிடச்சான்று, வருமானச் சான்று எனப் பல்வேறு விதமான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், பட்டா பட்டா பெயர் மாற்றத்துக்கும்,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாகக் கிடப்பதாகவும், ஒரே வி.ஏ.ஓ. கூடுதலாக இரண்டு மூன்று கிராமங்களின் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது என்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் குருப்-2 உள்ளிட்ட இதர தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மற்றப் பணிகளுக்குச் சென்றுவிடுவதாலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே,தற்போது , காலியாக உள்ள 1,400 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. மாவட்ட வாரியாகக் காலியிடங்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.க்கு வருவாய்த் துறை அனுப்பியிருக்கிறது.

1,400 வி.ஏ.ஓ. காலியிடங்கள் பட்டியல், பணியாளர் குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

வி.ஏ.ஓ. தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். பொதுப்பிரிவினர் நீங்கலாக, மற்ற அனைத்து வகுப்பினருக்கும், அதேபோல் பொதுப்பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதற்காக நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே வேலை உறுதி. காரணம் இதில் நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. மேலும், குறைந்தபட்சக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருந்தால் அவர்களுக்குத் தனியாக 20 சதவீத இடஒதுக்கீடும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப்-2 தேர்வுக்குட்பட்ட (நேர்காணல் பணிகள்) பதவிகளில் 1064 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வை டிசம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில், விவரங்களை பதிவுசெய்து உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

சரியான முறையில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியிருந்து அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான செலான் நகலுடன் பெயர், குரூப்-2 தேர்வுக்கான பதிவு எண், விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்திய இடம் (போஸ்ட் ஆபீஸ் அல்லது இந்தியன் வங்கி), அதன் முகவரி ஆகிய விவரங்களை contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணையதளத்தில் உள்ள விவரங்கள், விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஓர் ஒப்புகை மட்டுமே.

விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ் (வயது 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தவறான விடை நான் கணிதம் பாடத்தில் பி.எஸ்சி., பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 18–ந் தேதி நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டேன். இந்த தேர்வு முடிவினை 5–11–2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், நான் 89 மதிப்பெண் பெற்று இருந்தேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். அதேநேரம், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், கேள்வி எண் 4, 14, 24 ஆகிய கேள்விகளுக்கு தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. நான், இந்த 3 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துள்ளேன். இதையடுத்து, 6–11–2013 அன்று இந்த 3 கேள்விக்குரிய சரியான விடைகளையும், அதற்கான ஆதார புத்தகங்களையும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த தேர்வு முடிவின் அடிப்படையில், தேர்ச்சிப் பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. எனவே சரியான பதிலை அளித்துள்ள எனக்கு 3 மதிப்பெண்கள் வழங்கவும், சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்துக்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணி ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘இந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விரைவில் நடைபெற உள்ள, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் மனுதாரரையும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை வருகிற 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

காவல் இளைஞர் படைக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் விடை இணையதளத்தில் வெளியீடு - சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் 31 மாவட்டம் மற்றும் 6 மாநகரம் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள 10,500 தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான உறுப்பினர்களை நேரடி நியமன பொது எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பிட கடந்த 10–ந் தேதி நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் வினாக்களுக்குரிய விடைகள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in மற்றும் காவல்துறை இணையதளம் www.tnpolice.gov.in–ல் நேற்று (11.11.13) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தேர்வில், கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், இக்குழுமத்தால் வெளியிடப்பட்ட விடைகளில் ஏதேனும் ஒப்புக்கொள்ள முடியாத விடைகள் இருப்பின், அந்த வினாவிற்கான சரியான விடையினை தகுந்த ஆதாரங்களுடன் இக்குழுமத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 18.11.13–க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 18–ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த (டிசம்பர்) மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த (டிசம்பர்) மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர்.

பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும்.

இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் போட்டி போட்டு இருக்கிறார்கள்.தேர்வு நடந்து 3 மாதங்கள் ஆகப்போகிறது.

இந்த தேர்வு முடிவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப்–4 தேர்வை எழுதி உள்ளனர்.

தேர்வு முடிவை மிகச்சரியாக வெளியிடவேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிக்கோளாக வைத்திருக்கிறது.

தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) குரூப்–4 தேர்வு முடிவு வெளியிடப்படும்.

நடந்து முடிந்த குரூப்–1 மெயின்தேர்வு முடிவு தேர்வு நடந்ததில் இருந்து 3 மாதத்திற்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந்தேதி நடக்கிறது. புதிதாக குரூப்–1 தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இப்போது துறைவாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை சேகரித்து வருகிறோம். சில துறைகளில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. சில துறைகளில் இருந்து இன்னும் தகவல் வரவில்லை. தகவல் வந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அரசுப்பணியாளர் தேர்வாணையதலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின் போது செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர்.

மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு மாற்றம் எனவே மொஹரம் பண்டிகை விடுமுறை வரும் 15ம் தேதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால் 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP - 2 Application Status | 01.12.2013 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP - 2 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டதா / இல்லையா என்ற விவரம் அறியுங்கள்.

TNPSC GROUP - 2 Application Status | 01.12.2013 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP - 2 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டதா / இல்லையா என்ற விவரம் அறியுங்கள். 

 

Posts included in Combined Civil Services Examination-II
(Group-II Services)
Preliminary Examination
(Date of Written Examination:01.12.2013)
RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT)

           Enter Your Registration ID :                                      

10, 12 ஆம் பொது தேர்வுகளில் புதிய நடைமுறைகள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும், ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும். 

இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும். அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது. 

பள்ளி கல்வி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முறை கடந்த 1978ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நெட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார்  தேசிய தகுதித் தேர்வு- மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுவாமிநாதன்.

#நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை முறையாக எழுதும் முறை.

#நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆகையால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

#உங்களுடைய  நெட்தேர்வுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும், தேர்வுக்குப் போதுமான நல்ல புத்தகங்களை வாங்கி விடலாம்.

#தற்போது, கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் யு.ஜி.சி. இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட்  எடுத்து பயிற்சி பெறலாம்.

#தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் நன்கு ஆழமான முறையில் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யாரால் கண்டறியப்பட்டது,  எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் என அனைத்தையும் ஆழமாகப் படித்து,  குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தயார் செய்துகொள்ள வேண்டும்.

# ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள், குழுவாகச் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும்போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் போது காலம் மிச்சமாகும். மேலும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும்  அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்றுக்கொள்வது நல்லது.

#  முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா- விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்கி, அதில் வெளியிட்டு உள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதிப் பார்த்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்யும் போது பலரும் ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எது சரியானது என்பதைத் தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் தேர்வின்போது தடுமாற வேண்டி இருக்கும். இதற்கு மாற்றாக ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை எது என்பதை படித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுபோல் பயிற்சி செய்யும்போது தேர்வில் விடைகளின் வரிசையினை மாற்றிக்கொடுத்து இருந்தால் எளிதாக தடுமாறாமல் விடையளிக்க முடியும்.

#  ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். அதன் பின்பு அதற்கான விடைகளோடு ஓப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவித வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன. இந்தப் பயிற்சி உங்களின் மதிப்பெண்ணைக் கூட்டும். அத்துடன், உங்களது நேர மேலாண்மைக்கு உதவும். அத்துடன், தொடர் பயிற்சி மேற்கொள்ளும்போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். தேர்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை கூடும்.

#  யூஜிசி நெட் தேர்வானது மூன்று தாள்களைக் கொண்டது. முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது. இந்தத் தாளில் Research aptitude, Teaching aptitude  போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களைக் கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும். அத்துடன், இந்தியாவில் உயர் கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானியக்குழு குறித்த விஷயங்களும் கேட்கப்படுகின்றன. முதல் தாளில் சுற்றுச்சூழல் கல்வி,  தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகின்றன. இந்தப் பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்வது அவசியம்.

# பெரும்பாலான மாணவர்கள் முதல் தாளில் கோட்டைவிட்டு விடுவார்கள். இதனால் முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள். முதல் தாளில் கணிதத் தர்க்க அறிவு குறித்து சோதிக்கிறார்கள். இதை மிகவும் எளிதாக கேட்பார்கள். பலருக்கும் கணக்கு கடினமாக இருக்கும் என்று விட்டுவிடுவார்கள். இனி அதுபோல் கணக்குக் கேள்விகளை ஒதுக்கி தள்ளாமல் விடையளிக்க முயற்சி செய்யுங்கள். பத்து ஆண்டுகளுக்கான விளைச்சலின் விவரங்களை கொடுத்து எந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தது, எந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தது என்பது போன்ற கேள்விகளை data interpretation   பகுதியில் கேட்கிறார்கள். இத்தகைய கணித தர்க்கக் கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சி பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

# இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் ஐந்தில் இருந்து பத்து கேள்விகள் தர்க்க வாதம்  சார்ந்தவையாக இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். பழைய கேள்வித்தாள்களில் தர்க்க வாதக் கேள்விகளை எப்படிக் கேட்டு இருக்கிறார்கள், அதற்கான விடைகள் எவை என்பதை பார்த்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் வெவ்வேறு கேள்வித்தாள்களில்  இருந்து தர்க்க வாத கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையினை பயிற்சி எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையளித்து விட முடியும்.

#  யூஜிசி நெட் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, முதலில் தெரிந்த கேள்விகளுக்கும், பின்னர் தெரியாத கேள்விகளுக்கும் யோசித்து தவறாமல் விடையளிக்க வேண்டும். சில நேரங்களில்  நீங்கள் தெரியாது என்று நினைத்த கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்கி இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மதிப்பெண் கூடவே செய்யும். தகுதித் தேர்வில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல. அண்மைக் காலங்களில் மதிப்பெண் அதிகம் பெற்றவர்களின் தரப்பட்டியலில்  இருந்து தான் தேர்ச்சி விவரம் வெளியிடப்படுவதால்  அதிகமாக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும்.

#  இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்லுங்கள். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கப் பாருங்கள். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. இத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கி நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்.
ஞா. சக்திவேல்
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

TRB - TET PAPER 2 Weightage Calculator

TRB - TET PAPER 2 Weightage Calculator
உங்களுடைய WEIGHTAGE MARKS அறிய

LEVEL OF QUALIFICATION Enter Only Marks in % Weightage
HIGHER SECONDARY MARKS %(MARKS OBTAINED/1200*100)
DEGREE MARKS %
B.ED MARKS %
TET MARKS %
(MARKS OBTAINED/150*100)
Presented By
G.GOUTHAM, 9659255734
PG ASST, TIRUVARUR DT
(Calculation Based On Sec Edn/G.O.No.252/Dated 02-05-2012)

ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் செல்லுங்கள் அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளுங்கள் .

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.

இப்போது ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநய்யர் உள்ளார். உறுப்பினர் செயலாளராக தண்.வசுந்தராதேவியும், உறுப்பினர்களாக க.அறிவொளியும், தங்கமாரியும் உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் சிலர் மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்றும், சிலர் விடை சரியாக இல்லை என்றும் புகார் தெரிவித்தவண்ணம் தினமும் வருகிறார்கள்.

அவ்வாறு வருபவர்களுக்கு சரியான முறையில் பதில் அளிப்பதற்காக தலைவர் விபுநய்யர் ஒரு குறைதீர்ப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த மையம் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயில் அருகே உள்ளது.

இதற்காக லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் திலகவதியும், கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்வேலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் ஆசிரியர் செந்தில்வேல் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயிலில் இருக்கிறார். கோரிக்கை கொண்டுவருபவர்களிடம் மனுக்களை பெறுகிறார். ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மார்க் உள்ளது என்று கூறினால் உடனே அவரை அருகே உள்ள குறை தீர்க்கும் மையத்திற்கு அழைத்துச்செல்கிறார்.

அங்கு ஆசிரியர் திலகவதி உடனடியாக கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நபரின் விடைத்தாளை எடுத்து காண்பித்து பார்க்கவைக்கிறார்.

கடந்த 2 நாட்களாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து செயல்பட உள்ளது. கடந்த 2 நாட்களில் 13 பேர் மதிப்பெண் வித்தியாசம் என்று கோரி வந்தனர். அந்த நிமிடமே கோரிக்கை மனு கொண்டுவந்தவர்களை கம்ப்யூட்டர் முன் அமர்த்தி பதில் அளிக்கப்படுகிறது. குறைதீர்க்கும் மையத்தில் பார்த்த பின்னர் அவர்கள் திருப்தியுடன் செல்கிறார்கள்.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள விடைகளில் சில தவறு உள்ளன என்று பலர் மனு கொடுத்துள்ளனர்.

இந்த குறை உள்பட மொத்தம் 300–க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. சிலர் தொலைபேசியில் தங்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பதில் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர்களின் வருகை பதிவை, அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம், கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, முதலில், திருச்சி மாவட்டத்தில், செப்., 5ல், முதல்வர் துவக்கி வைத்தார். இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்

KALVISOLAI CEO LIST | CEO LIST IN TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | DETAILS OF CHIEF EDUCATIONAL OFFICERS -TAMIL NADU | NEW LIST OF CEO 2013 | CEO CUG CELL NO IN TAMIL NADU

KALVISOLAI CEO LIST | CEO LIST IN TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | DETAILS OF CHIEF EDUCATIONAL OFFICERS -TAMIL NADU | NEW LIST OF CEO 2013 | CEO CUG CELL NO IN TAMIL NADU

S.NODISTRICTSCEO'SPHONE NUMBERCUG NUMBERE.MAIL ID
1ARIYALURபி.மதிவாணன் .04326-2209097373002531ceo.tnari@nic.in
2ARIYALUR(SSA)
3CHENNAIடி.ராஜேந்திரன். 044-243217357373002551ceochn@nic.in
4CHENNAI(SSA)
5COIMBATOREஎ.ஞானகௌரி .0422-23918497373002571ceocbe@nic.in
6COIMBATORE(SSA)எ.லலிதா.
7CUDDALOREசி.ஜோசப் அந்தோணி ராஜ்.04142-2860387373002591ceocud@nic.in
8CUDDALORE(SSA)டி.அருள்மொழித்தேவி .
9DHARMAPURIகே.பி.மகேஸ்வரி 04342-2600857373002611ceodpi@nic.in
10DHARMAPURI(SSA)எஸ்.ஆறுமுகம் 04342-261872
11DINDIGULப்பி.சுகுமார் தேவதாஸ் 0451-24269477373002631ceodgl@nic.in
12DINDIGUL(SSA)பி.முருகன்
13ERODEபி.அய்யணன்0424-22564997373002651ceoerd@nic.in
14ERODE(SSA)பி.சுப்பிரமணி
15KANCHEEPURAMஎ.சாந்தி044-272221287373002671ceokpm@nic.in
16KANCHEEPURAM(SSA)
17KANYAKUMARIஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் 04652-2272757373002691ceokkm@nic.in
18KANYAKUMARI(SSA)ஆர்.முருகன்
19KARURஆர்.திருவளர்ச்செல்வி04324-2418057373002711ceo.tnkar@nic.in
20KARUR(SSA)ஜே.சாந்த மூர்த்தி
21KRISHNAGIRIஎம்.ராமசாமி.04343-2392497373002731ceokgi@nic.in
22KRISHNAGIRI(SSA)பொன்.குமார்
23MADURAIபி.அமுதவள்ளி 0452-25306517373002751ceomdu@nic.in
24MADURAI(SSA)கே.பார்வதி.
25NAGAPATTINAMஎம்.ராமக்கிருஷ்ணன் 04365-2433547373002771ceongp@nic.in
26NAGAPATTINAM(SSA)கே.ராஜாத்தி
27NAMAKKALவி.குமார்.04286-2320947373002791ceonmk@nic.in
28NAMAKKAL(SSA)எஸ்.கோபிதாஸ்
29PERAMBALURஆர்.மகாலிங்கம் 04328-2240207373002811ceopmb@nic.in
30PERAMBALUR(SSA)ஜி.சீதாராமன்
31PUDUKOTTAIஎன்.அருள் முருகன் 04322-2221807373002831ceopdk@nic.in
32PUDUKOTTAI(SSA)எம்.கே.சி.சுபாஷினி
33RAMNADஎஸ்.சிவகாம சுந்தரி.04567-2206667373002851ceormd@nic.in
34RAMNAD(SSA)பி.சகுந்தலை.
35SALEMஆர்.ஈஸ்வரன் 0427-24502547373002871ceoslm@nic.in
36SALEM(SSA)பி.உஷா
37SIVAGANGAIஎஸ்.செந்தில்வேல்முருகன் 04575-2404087373002891ceosvg@nic.in
38SIVAGANGAI(SSA)டி.கணேஷ் மூர்த்தி
39TANJOREவி.தமிழரசன் 04362-2370967373002911ceotnj@nic.in
40TANJORE(SSA)என்.மாரிமுத்து
41NILGRISஆர்.பாலமுரளி 0423-24438457373002931ceonlg@nic.in
42NILGRIS(SSA)வசந்தா
43THENIஎம்.வாசு 04546-250315/2553927373002951ceothn@nic.in
44THENI(SSA)பி.ராஜேந்திரன்
45T V MALAIபி.அருண் பிரசாத்.04175-224379/2272277373003091ceotvm@nic.in
46T V MALAI(SSA)ஏ.நூர்ஜஹான்
47THIRUPPURஎன்.ஆனந்தி 0421-22403017373002971ceo.tntpr@nic.in
48THIRUPPUR(SSA)
49TIRUVARURஎம்.சுப்பிரமணியன் 04366-2259037373003011ceotvr@nic.in
50TIRUVARUR(SSA)இ.மணி 04366-244359 
51TIRUVALLURகே.சந்திரசேகர்044-27662599 7373002991ceotlr@nic.in
52TIRUVALLUR(SSA)
53TRICHYகே.செல்வகுமார் 0431-27089007373003051ceotry@nic.in
54TRICHY(SSA)ஆர்.பூபதி
55TIRUNELVELIகே.ஜெயகண்ணு0462-2500702/25009497373003071ceotnv@nic.in
56TIRUNELVELI(SSA)எம்.எஸ்.பரிமளா
57TUTICORINகே.முனுசாமி 0461-23262817373003031ceo.tntut@nic.in
58TUTICORIN(SSA)பி.சரோஜா
59VELLOREடி.வி.செங்குட்டுவன் 0416-2252690/22586507373003111ceovel@nic.in
60VELLORE(SSA)ஆர்.மதி
61VILLUPURAMஎஸ்.மார்ஸ் 04146-2204027373003131ceovpm@nic.in
62VILLUPURAM(SSA)ஜே.அஞ்சலோஇருதயசாமி
63VIRUDHUNAGARவி.ஜெயகுமார்.04562-2527027373003151ceovnr@nic.in
64VIRUDHUNAGAR ஆர்.சாமிநாதன்