மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும், 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது.

தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில் பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது. தபால் துறை சார்பில், மணியார்டர், "ஸ்பீடு' மணியார்டர் போன்ற சேவைகள், இருந்தாலும், வங்கிகளின், "ஆன்லைன்' பரிவர்த்தனைகள், "டிராப்ட்' போன்ற சேவைகளால், மணியார்டர்களுக்கு வரவேற்பு குறைந்தது. இதனால், மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும், 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது. பணம் அனுப்புவோர், தபால் நிலையம் சென்று, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது பெயர், மொபைல் எண், முகவரியை குறிப்பிட்டு, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், தபால் துறை சார்பில், ஆறு இலக்க ரகசிய குறியீட்டு எண், வழங்கப்படும். பணம் பெறுபவருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், ஆறு இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை, பணம் அனுப்புபவர் தெரிவிக்க வேண்டும். இந்த ரகசிய குறியிட்டு எண், பணம் பரிவர்த்தனை செய்யும் இருவருக்கு மட்டுமே தெரியும். பணம் பெறுபவர் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, மொபைல் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்து, 10 நிமிடத்தில் பணம் பெற்றுக் கொள்ளலாம். 1000 முதல், 1,500 ரூபாய் வரை பணம் அனுப்ப, 45 ரூபாயும், 1,501 முதல், 5,000 வரை, 79 ரூபாயும், 5001 முதல், 10 ஆயிரம் வரை, 112 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த செலவு, 10 நிமிடத்தில் பணப்பரிமாற்றம் போன்றவற்றால், இச்சேவை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||