ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு | தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது. தளர்வுக்கு முன்பாக 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மாவட்டங்களில், மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.பின், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும். சான்றிதழ் சரிபார்க்கும் இடம் மற்றும் தேதி ஆகியவற்றை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பதிவு எண்களை பதிவு செய்து, அழைப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கடந்த ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், கலந்து கொண்டு, சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.முதல்வர் அளித்த சலுகையால், 47 ஆயிரம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண் காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண் காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 

 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க வுள்ள 10-ம், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க கீழ்க்கண்ட அதிகாரிகள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப் படுகின்றனர். 
 தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் என்.மகேஸ்வரன் ஐஏஎஸ் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், 

அரசு துணைச் செயலாளர் எஸ்.பழனிச்சாமி ஐஏஎஸ் கன்னியாகுமரி, 

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் சென்னை, 

பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் காஞ்சிபுரம், 

தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் திருவள்ளூர், 

ஆர்.எம்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குநர் எஸ்.சங்கர் விழுப்புரம், 

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கடலூர், 

பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன் வேலூர், 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்கு நர் எஸ்.கண்ணப்பன் ஈரோடு, திருப்பூர் 

இணை இயக்குநர் தர்ம.ராஜேந்திரன் கோவை, நீலகிரி, 

இணை இயக்குநர் ஏ.கருப்பசாமி திருச்சி, புதுக்கோட்டை, 

இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி திருநெல்வேலி, 

இணை இயக்குநர் செ.கார்மேகம் திருவண்ணாமலை, 

இணை இயக்குநர் எஸ்.உமா நாமக்கல், 

இணை இயக்குநர் என்.லதா பெரம்பலூர், 

இணை இயக்குநர் சி.செல்வராஜ் தஞ்சாவூர், திருவாரூர், 

இணை இயக்குநர் வி.பாலமுருகன் தர்மபுரி, 

இணை இயக்குநர் சி.உஷாராணி கரூர், 

இணை இயக்குநர் பி.குப்புசாமி தூத்துக்குடி, 

இணை இயக்குநர் கே.சசிகலா அரியலூர், 

இணை இயக்குநர் எஸ்.நாகராஜமுருகன் மதுரை,தேனி, 

இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் விருதுநகர், 

இணை இயக்குநர் எஸ்.செல்லம் திண்டுக்கல், 

இணை இயக்குநர் சுகன்யா கிருஷ்ணகிரி, 

இணை இயக்குநர் கே.தேவி சேலம், 

ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராம வர்மா நாகப்பட்டினம். 
 இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பி.எட். முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அரசாணையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 5 முதல் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.இரண்டாம் தாளுக்காக மட்டுமே சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு  நடத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை | மார்ச் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறு வதற்கான கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறு வதற்கான கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: 

2013-14ம் கல்வி ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரிய ராக பதவி உயர்வுபெற தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் 22-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது. 
தமிழ்-179, ஆங்கிலம்-82, கணிதம்-87, அறி வியல்-65, சமூக அறிவியல்-85 (மொத்தம் 498 பேர்). 

மேலும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடியாக நியமனம் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வும் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் நடக்கும். 

தமிழ்-16, ஆங்கிலம்-74, கணிதம்-27, அறிவியல்-14, சமூக அறிவியல்-21 (மொத்தம் 152 பேர்). 

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், மாவட்ட தலைமையிடங்களில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவல கத்துக்கு சென்று, தங்களுடைய ஆசிரியர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்), கல்விச்சான்றிதழ் மற்றும் இதர சான்றி தழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 593 முதுகலை தமிழாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந் தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலங்களில் வெள்ளிக்கிழமை நடந்தது. அனைவருக்கும் ஆன்லைனில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.தமிழ் 179
ஆங்கிலம் 82
கணிதம் 87
அறிவியல் 65
சமூக அறிவியல் 85
பதவி உயர்வு வழங்கப்படுவோர் எண்ணிக்கை மொத்தம் 498

CLICK HERE TO DOWNLOAD

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

SGT TO BT PROMOTION | 01.01.2013 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SGT TO BT PROMOTION | 01.01.2013 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வு ஆணை பெற்றவர்கள் அடுத்த வேலை நாளில் கண்டிப்பாக பணியில் சேரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் 179
ஆங்கிலம் 82
கணிதம் 87
அறிவியல் 65
சமூக அறிவியல் 85
பதவி உயர்வு வழங்கப்படுவோர் எண்ணிக்கை மொத்தம் 498

CLICK HERE TO DOWNLOAD

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

பள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தரமான கல்வி அளிப்பதோடு, படிக்கும் சூழலை மேம்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், மாத்தூரில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 109 அரசு பள்ளிகளில் 97 கோடியே 64 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள்;

மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட நூலகத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப்பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு;

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியினை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகம்;

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ள கல்வி வளாகம், என 102 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள், நூலகக் கட்டிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டக்கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்ற கருத்துடன் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு மடிக்கணினியை வழங்கினார். பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியருக்கு 19 ஆயிரத்து 200 ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு பரிசுத்தொகையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறக்க நேரிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால், அவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அக்குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச்செலவு, பராமரிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நிரந்தர வைப்பு நிதியாக வழங்கும் திட்டத்தை ஏற்கனவே முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருந்தார்.

அதன்படி, 2011–12 மற்றும் 2012–13–ம் கல்வி ஆண்டுகளில் மொத்தம் 720 மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாயை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

2013–14–ம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதன் அடையாளமாக ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான பத்திரத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக ஒருவருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் புதிய திட்டத்தைத் தொடக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக ஆயிரத்து 600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டிடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

ஆக, மொத்தம் பள்ளிக் கல்வித்துறையில், 106 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக் கட்டிடங்கள், நூலகங்கள், கல்வி அலுவலகம், கல்வி வளாகக்கட்டிடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி, பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை துவக்கி, ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டிடத்தை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்படும் உயர்வு ஜனவரி 1 ல் இருந்தும், செப்டம்பர் மாத உயர்வு ஜுலை 1 ல் இருந்தும் அமல்படுத்தப்படும். கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும். வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் பலன் அடைவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரி களில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை) என 2 வகையாக இருக்கின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். 

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, 21.02.2014 அன்று காலை 10 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில், காலை, 10:00 மணி முதல், இந்த கலந்தாய்வு நடக்கும். டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்குப் பின், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு, வெளியானது. இதனால், இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், ""தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும், எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.

சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம் உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறது. துணை கலெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு, வர்த்தக வரித்துறை உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி வருகிறது.

தற்போது குரூப்–1 தேர்வு, குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு ஆகிய தேர்வுகளின் முடிவு வெளியிடப்படாமல் உள்ளது. அவற்றை வெளியிடும் பணியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் சில தேர்வுகளில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தெரியவில்லை என்றும், வெளிப்படையான முறை தேவை என்றும் பலர் தேர்வாணையத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்விலும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் விவரம், அவர்கள் எந்த இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுகிறார்கள். எதனால் தேர்வு செய்யப்படவில்லை என்ற அனைத்து விவரங்களையும் ஒளிவு மறைவின்றி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும், ஆணைய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு www.tnincometax.gov.in என்ற புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது. ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமானவரி துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான புதிய இணையதளம் நேற்று சென்னை வருமானவரி அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொடக்கவிழாவில் வருமானவரி துறை இணை ஆணையர் பி.ஜெயராகவன் வரவேற்று பேசினார்.

அதன் பின்னர், வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி புதிய இணையதளத்தை ( www.tnincometax.gov.in ) தொடங்கிவைத்தார். இந்த இணையதளத்தை வருமானவரி துறை அதிகாரி கிருபாகரன் வடிவமைத்தார். இதில் புலனாய்வு பொது இயக்குநர் ஜெயசங்கர், வருமானவரி துறை முதன்மை ஆணையர்கள் சேத்தி, அப்ரோல், மிஸ்ரா, வருமானவரி துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமானவரி துறை மக்கள் தொடர்பு அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். பின்னர் இதுகுறித்து வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த இணையதளத்தில் அனைத்து உத்தரவுகள், சுற்றறிக்கைகள், பயிற்சி வகுப்புகள், செய்திகள், நடப்புகள், மேல்முறையீட்டு வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களும் அடங்கியுள்ளன.

வருமானவரி தொடர்பான சலுகைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் இந்த இணையதளம் தலைமையிடமான டெல்லி இணையதளத்தில் உள்ள தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் ஒப்பந்த கோரிக்கைகளை (டெண்டர்) டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வருமானவரி துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதன்மூலம் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் பணிகள் சுலபமாகும். தற்போது இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும்.

ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு அதிகாரிக்கும் தனி தனியே அனுப்புவதற்கு பதிலாக இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். அனைத்து அதிகாரிகளும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

"பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ல், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

"பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ல், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடம், அதிகளவில், நிரப்பப்படாமல் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, பார்வையற்ற பட்டதாரிகளுக்கு என, தனியாக, சிறப்பு தகுதி தேர்வு நடத்த, டிசம்பரில், தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, 'சிறப்பு டி.இ.டி., தேர்வு, ஏப்ரல், 28ல் நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. 'மார்ச், 5 முதல், 25 வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் விற்பனை செய்யப்படும். 50 ரூபாய் கொடுத்து, விண்ணப்பத்துடன், தேர்வு குறித்த விளக்க புத்தகத்தையும் பெறலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, டி.இ.டி., தேர்வு தொடர்பாக, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கவும், தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், தங்களது பெயரை பதிவு செய்யலாம். வரும், 22ம் தேதியிலிருந்து, 40 நாள், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை, 200க்கும் மேற்பட்டோர், பதிவு செய்திருப்பதாக, இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி-வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி-வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு அக் டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரி 17-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி- வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க் கிழமை வெளியிட்டது. தேர்வு செய் யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம் என்று வாரியத்தின் உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை 13.02.2014 முதல் 20.02.2014 இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

22.02.2014 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தேர்வுக்கு (NMMS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ள அரசு/அரசுஉதவி பெறும் பள்ளிகள்/மாநகராட்சி/நகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 13.02.2014 முதல் 20.02.2014 இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக ஏற்கனவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க உபயோகிக்கப்பட்ட User ID / Password கொண்டு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Admission Card) பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்த அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் விநியோகிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டும் கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டும் கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD SSLC MATERIALSCLICK HERE TO DOWNLOAD PLUS TWO MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர் வசதிக்காக, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள மையத்திற்கு, நேரில் சென்றும், இணையதளம் வழியாகவும், விண்ணப்பிக்கலாம். தனியார் இணையதள மையங்களில், விண்ணப்பிக்கக் கூடாது. மாவட்ட வாரியான, சிறப்பு மையங்கள் விவரங்களை, www.tndge.in என்ற, தேர்வுத் துறை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் சேர்த்து, செலுத்த வேண்டும். இந்த மாணவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும்; இதன் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டு உள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், இட ஒதுக்கீடு பிரிவினர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான, 60 சதவீத மதிப்பெண்ணை, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். இதற்கு ஏற்ப, டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை, 'வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிடும் முறையில், சிறிய மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்று, அரசாணை பிறப்பித்தார். அதன்படி, டி.இ.டி., தேர்வில், தேர்வர் எடுக்கும் மதிப்பெண், 

'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் அளவு விவரம் வருமாறு:

* 90 சதவீதம் வரை - 60 மதிப்பெண்

* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்

* 70 - 80 சதவீதம் வரை - 48 மதிப்பெண்

* 60 - 70 சதவீதம் வரை - 42 மதிப்பெண்

* 55 - 60 சதவீதத்திற்குள் எடுத்தால் - 36 மதிப்பெண்

கடந்த, 2013ல் நடந்த தேர்வு மற்றும் வருங்காலத்தில் நடக்கும் தேர்வில், மேற்கண்ட முறையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டி.இ.டி., தேர்வு, 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. இதில், 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால், தேர்ச்சி என்ற நிலை, முதலில் இருந்தது. தற்போது, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள், 82 மதிப்பெண் எடுத்தாலே, தேர்ச்சி பெறுவர். இதில், 150க்கு, தேர்வர் எடுக்கும் மதிப்பெண், மேற்கண்ட அட்டவணைப்படி, 60க்கு, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த மதிப்பெண்ணுடன், பிளஸ் 2, பட்ட படிப்பு, பி.எட்., மற்றும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமா ஆகியவற்றில், தேர்வர் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், அதிகபட்சமாக, 40 மதிப்பெண் தரப்படுகிறது. 60 + 40 என, 100 மதிப்பெண் அடிப்படையில், இறுதியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படுகிறது. படிப்புகளுக்கான, 40 மதிப்பெண் கணக்கிடுவதற்கும், தனி அட்டவணை, ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல்லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல் லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நடத்த, பல்கலை முடிவு செய்துள்ளது. "ஆகஸ்ட், 1ல், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்பு துவங்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, ஜூலை இறுதி வரை கலந்தாய்வை நடத்தாமல், இந்த ஆண்டு, 10 நாள் முன்கூட்டியே, கலந்தாய்வை முடிக்கும் வகையில், அண்ணா பல்கலை ஆலோசித்து வந்தது. இதற்கு, பிளஸ் 2 தேர்வு முடிவை, மே, 10 வரை இழுக்காமல், 10 நாள் முன்கூட்டியே வெளியிட, தேர்வுத் துறைக்கு, கோரிக்கை வைக்க, திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, பி.இ., மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பல்கலையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்கலை துணைவேந்தர், ராஜாராம் உள்ளிட்ட பல்கலை அலுவலர்களும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், கலந்து கொண்டனர். பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, பிளஸ் 2 தேர்வு முடிவை, குறைந்தது, 10 நாட்கள் முன் வெளியிடுவதற்கான வாய்ப்பு குறித்து, குழு உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு, தேர்வுத் துறை தரப்பில், "இந்த தேர்வில், பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில், எந்த பிரச்னையும் வராமல் இருக்க வேண்டும். அவசரகதியில், விடைத்தாளை திருத்த முடியாது. முன்கூட்டியே, தேர்வு முடிவை வெளியிட வாய்ப்பு இருக்காது. கடந்த ஆண்டு வெளியான தேதியை (மே, 9) ஒட்டி, முடிவு வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கையை, வழக்கம் போல், ஜூன் இறுதியில் துவக்கி, ஜூலை இறுதிக்குள் முடிக்க, பல்கலை திட்டமிட்டு உள்ளது.