பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரகசிய பார்கோடு எண்களின் மூலம்
மாணவர்களுக்குரிய மதிப்பெண் அந்தந்த மாணவருக்குரிய பதிவெண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்ணை சரிபார்க்கும் பணிகள் அனைத்தும் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,422 தேர்வு மையங்களில் 8.78 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.

மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in, www.dge3.tn.nic.in இதில் www.dge1.tn.nic.in  என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்: பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HSC<space>"Registration Number"  என்ற அடிப்படையில் அடித்து எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Procedure for obtaining plus 2 results by SMS 

Students can get their plus 2 results by SMS also. To get results they have to send an SMS in the following format to the mobile no. 09282232585as follows :

TNBOARD<space><Registration No>,<DOB in DD/MM/YYYY>

For Eg. Send SMS text as TNBOARD 125678,25/10/1996 to the mobile number 09282232585, where 125678 is the Registraton No, and Date of Birth is 25/10/1996.

SMS facility will be available only after 10 AM on 9th May 2014. Therefore Students are advised not to send any SMS earlier.


மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான கட்டணத்தை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படியுங்கள்

ALL OTHER EDUCATION NEWS ONLINE 24 x 7 NEWS

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS

SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

PLUS TWO STUDY MATERIALS

PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||