கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்பு பட்டியலை சரிபார்த்துக் கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்பு பட்டியலை சரிபார்த்துக் கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எகசானலி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணி காலிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ளவர்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு கடந்த ஜூலை 1ம் தேதியில் எஸ்.சி., - எஸ்.டி.,- எஸ்.சி.ஏ-35, எம்,பி.சி., - பி.சி., - பி.சி.எம்.,-32, ஓ.சி.,-30 வயதுக்குட்பட்டோர் மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பதிவு செய்துள்ள எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., இன பதிவுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. மேலும் பதிவு மூப்பு எஸ்.சி.ஏ., பொது 1989ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி; எஸ்.சி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பெண்கள் 1985ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி; எஸ்.சி.,- எம்.பி.சி., - பி.சி., பொது 1983ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி; பி.சி.எம்., பொது 1983ம் ஆண்டு ஜூலை18ம் தேதி மற்றும்முன்னுரிமையுள்ளவர்கள் ஆதரவற்ற விதவை மட்டும் 2011ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வரை பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மட்டும் பரிந்துரை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் உத்தேச பதிவு மூப்பு பட்டியல் கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகையில் பதிவுதாரர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இப்பட்டியலில் பதிவு மூப்புக்குள் இருந்து விடுபட்டுள்ள பதிவுதாரர்கள் மட்டுமே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.