Posts

TNPSC Group-I Services Result Published | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2014 மு.ப. அன்று தொகுதி-I (Group-I Services)ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கான 79 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை 70547 விண்ணப்பதாரர்கள் எழுதினர்.முதன்மை எழுத்துத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 4389 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு 02.05.2015, 03.05.2015 மற்றும் 04.05.2015 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா அறிவித்துள்ளார்.

TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன்வெளியிட்டார்.

KALVISOLAI IT FORM 2015 LATEST VERSION 1.2 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா | டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் 28.01.2015 முதல் ஆன் லைனில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. விண்ணப்ப பதிவானது சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.