தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.

தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.

மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.

ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்திவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.

நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.

மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.

தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இத்தருணத்தில் அவரின் தமிழாழத்தையும், தலைமைத்துவ கூராளுமையையும் அன்பு உணர்வினால் ஆளும் பணிநேர்த்தியினையும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் போற்றி வணங்குகிறது.

அவர் எங்கு பணிபுரினும் தம் தனியாள்கையினால் மிகச் சிறப்பான உயரிடத்தைத் தக்க வைப்பார் என்பதில் இருவேறு கருத்தில்லை.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த ஐயா. முனைவர். நா. அருள்முருகன் அவர்களைப் போற்றி வாழ்த்துவதில் புதுக்கோட்டை மாவட்டம் பேருவகை அடைகிறது.

- சி.குருநாதசுந்தரம், மாவட்டச்செயலர்.தமிழகத் தமிழாசிரியர் கழகம் ,புதுக்கோட்டை

Comments

 1. Congratulations sir . My sincere prayers to ur good health and further work .
  K.Kanniammal , lecturer ,DIET , Dharmapuri.

  ReplyDelete
 2. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு, வணக்கம்! ’தமிழால் முடியும்;தமிழனால் முடியும் தலைமைப் பதவியிலும்’ என்பதை மன்பதைக்கு எடுத்துக் காட்டிய தங்களை வாழ்த்தித் தாய்த்தமிழகத்தின் சார்பில் தலை வணங்குகிறேன்...! தங்களின் பணி தொடரட்டும் . . .! தமிழ்நாடு அரசு விருது பெற்ற நல்லாசிரியர் முனைவர் இரா.தேன்மொழியான்,எம்.ஏ.,பி.எல்.,எம்.எட்.,எம்.பில்.,பிஎச்.டி., பணி நிறைவு பெற்ற அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர்.

  ReplyDelete
 3. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
  இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வுள்ள மனிதர் இவர். அலுவலகத்தின் குளிர்சாதன அறைகளில் நாள் முழுவதும் அடைந்து கிடக்கும் 'பொறுப்பான' அரசு அதிகாரிகளுக்கு மத்தியில்,தினந்தோறும் வெயிலிலும் மழையிலும் இவருடைய வாகனம் மாவட்டத்தின் ஏதாவது ஒரு பள்ளியை நோக்கியே பயணப்படும்.
  பணிச்சுமைகளுக்கு அப்பாலும் கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சிகள், நினைவிடங்கள் போன்ற தமிழனின் பெருமையும் புகழும் புதைந்து போய்க் கிடக்கும் இடங்களை எல்லாம் தேடித்தேடிச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பெட்டகம் இவர்.
  புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வைத்தவர். சிறந்த ஆசிரியர்களை எல்லாம் அடையாளம் கண்டு அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பவர்.
  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல், திருமயம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் அறியப்படாத பொக்கிஷங்களை எல்லாம் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பொக்கிஷ்ம் இவர்.
  1935 இல் ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான கொப்பனாப்பட்டி கலைமகள் கல்லூரியின் சிறப்புகளை 'வருகையின் பதிவுகள்' என்ற தலைப்பில் 'தி இந்து தமிழ் நாளிதழில்' அற்புதமான கட்டுரையை தகுந்த ஆவணங்களுடன் எழுதியவர்.
  நல்ல மேடைப் பேச்சாளரும் கூட.... இவருடைய எல்லா பேச்சுகளிலும் எழுத்துகளிலும் வறுமையில் உழலும் பிள்ளைகளைப்பற்றிய அக்கறை இருக்கும். அவர்களை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டவேண்டும் என்ற ஆதங்கம் இருக்கும்.
  காய்கறி விற்பவர்,கீரை விற்பவர், பால்கார அம்மா,கூலிவேலைக்குச் செல்வோரின் பிள்ளைகள்... இப்படி வாழ்வின் விளிம்பு நிலை மாணவர்களை எல்லாம் தன் பிள்ளைகளாக கருதுபவர். இவர்களை சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதுதான் தன்னுடைய இலட்சியம்... என் பார்வை எல்லாம் அவனை கை பிடித்து மேலே தூக்கி விடுவதுதான் என்ற உண்மையான உணர்வுள்ள கல்விச் செயற்பாட்டாளர்.
  உங்களின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளால் புதுகை கல்வித்துறை பெருமை பெறுகிறது...
  முனைவர்.நா.அருள்முருகன் ஐயா அவர்களே வாழ்க பல்லாண்டு! - பழ.அசோக்குமார், புதுக்கோட்டை

  ReplyDelete
 4. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  ReplyDelete
 5. புதுகை மண்ணிற்கு பெருமை சேர்த்த முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி.தங்களுக்குக் கீழ் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை..
  து.நாகராஜ்
  இராப்பூசல்

  ReplyDelete
 6. hearty congratulations sir !

  ReplyDelete
 7. congratulations sir
  BY,
  PHYSICAL DIRECTORS/PHYSICAL EDUCATION TEACHERS -ASSOCIATION

  ReplyDelete
 8. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.....
  யான் அறிந்தேன் காரணத்தை... வாழ்க நும் கல்வித்தொண்டு............ வாழ்க பல்லாண்டு........ ஓங்குக நும் புகழ்............ தமிழ் உலகம் உள்ளவரை....
  என்றும் மரியாதை கலந்த அன்புடன்
  மு.மருதாச்சலம்

  ReplyDelete
 9. எம் மண்ணின் மைந்தர்களுக்கு அருள் தந்த முருகனை நோக்கி கைகூப்புவோம்.

  ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||