Posts

TNPSC ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு 31.07.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

TNPSC தொகுதி-IV ல் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 31.07.2015 அன்று நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு (சி.டி.இ.டி.,) நடத்தப்படுகிறது.

TNPSC NEWS | குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 89 மகப்பேறு மற்றும்குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கு, முதன்முறையாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த உள்ளது; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC GROUP 2 ANSWER DOWNLOAD | TNPSC NEWS | குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 89 மகப்பேறு மற்றும்குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கு, முதன்முறையாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த உள்ளது; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவும் www.findteacherpost.com.

SI RESULT 2015 | SUB-INSPECTORS OF POLICE | RESULTS OF THE WRITTEN EXAMINATION | விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி 2015-ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (தாலுகா) எழுத்துத் தேர்வின் முடிவினை பார்த்துக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு ஆணைகளின்படி அடுத்தகட்ட தேர்விற்கு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி ஒதுக்கீட்டின் கீழ் 1:5 விகிதத்தில் 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ள விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.

TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு என அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றும், ஜூலை 29 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரால் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட உள்ளது.

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் இன்று 17.07.2015ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வெளியாகிறது.தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது. DOWNLOAD G.O.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட் . பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று , துணைவேந்தர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும் ஜனவரி2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.