சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 09.09.2015 (புதன் கிழமை) மற்றும் 10.09.2015 (வியாழக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 10.09.2015 (வியாழக்கிழமை) மற்றும் 11.09.2015 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.