இலவச உடற்கல்வி பாடப்புத்தகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

இலவச உடற்கல்வி பாடப்புத்தகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.|உடற்கல்வி பாடத்திற்கும் இலவச பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்க மண்டல தலைவர் அகஸ்டின் ராஜா, மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் அற்புதசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மற்ற பாடங்களுக்கு வழங்குவதை போல், உடற்கல்வி பாடத்திற்கும், பிளஸ்2 வரை விலையில்லா பாட புத்தகம் வழங்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு இரண்டாம் நிலை உடற்கல்வி இயக்குநர்களை நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணம் வாங்கவும், போட்டிகள் நடத்தவும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில், கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆசிரியப்பட்டதாரிகளுக்கு கிடைத்த அற்புதவாய்ப்பு FIND TEACHER POST க்கு ஈரோடு (புத்தகத்திருவிழா) மக்கள் சிந்தனைபேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பாராட்டு

ஆசிரியப்பட்டதாரிகளுக்கு கிடைத்த அற்புதவாய்ப்பு FIND TEACHER POST க்கு ஈரோடு (புத்தகத்திருவிழா) மக்கள் சிந்தனைபேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பாராட்டு

கடந்த வாரம் தனியார் பள்ளி ஆசிரியகளுக்கென்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் செயல்பாடுகளை நமது அலுவலகத்துக்கு நேரில் வந்து  ஈரோடு (புத்தகத்திருவிழா) மக்கள் சிந்தனைபேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களும் நேரில் வருகை தந்து FIND TEACHER POST  சேவையை பெற்றுவரும் பள்ளிகளின் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ONLINE மூலம் WORK SHEET வழங்கும் மென்பொருள் சேவையை துவக்கி வைத்து பாரட்டு தெரிவித்தார்.

16 மாதங்கள் 92 பள்ளிகள் 1355 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள் 1000 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.  பேர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதையும் பெருமையோடு தெரிவித்துகொள்கிறோம்.
தற்போது FTP கென்று தனி அலுவலகம் தனி பிரிவுகளாக ஆரம்பிக்கபட்டுள்ளது. FTP ன் CANDIDATE HELP DESK வேலை வேண்டுவோரின் நலனுக்கென்றே இயங்கும். பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கென்று தனி பிரிவு செயல்படும். மேலும் 2016 ம் ஆண்டில் மிகச்சிறந்த சேவையை ஆசிரியபட்டதாரிகளுக்கு வழங்குவதோடு பள்ளிகளின் தேவையையும் பூர்த்தி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். தற்போது முற்றிலும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இந்த இணையதளத்தில் இருந்து தேர்வு செய்கிறார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவுத்துக்கொள்கிறோம்.மேலும் ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்தி கொள்ள ஏதுவாக தனியாக பயிற்சியும் அளிக்கப்பட்டு FTP ன் வளாகத்தில் CAMPUS INTERVIEW நடத்தப்படும்.  


ஆசிரியர்களே!
·         நீங்கள் விரும்பும் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை.
·         எந்தெந்த தனியார் பள்ளிகளில் காலி பணியிடங்கள் உள்ளது என்ற தகவல்.
·         திறமைக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய வேலையை கொடுக்க கூடிய பள்ளிகளின் பெயர் பட்டியல்.

ஒருமுறை மட்டுமே ON LINE ல் Register செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம்.

Computer ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும். FTP ன் HELP DESK தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வார்கள்.


596, Dhanaprakash Complex, Main Road, Bhavani 638301, Erode District. Tel:  + 91 4256 232213 Email: contact@findteacherpost.com