பிளஸ்- 2 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது.இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்- 2 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டது. அதாவது, இதுவரை மாணவர்களின் ''ரேங்க்'' பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களும் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படப்படவில்லை. பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 சதவிதம் ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம் ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இது 0.7 சதவீதம் கூடுதல் ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.5 ஆகும். 89.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது.தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். 94.5 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகள் எண்ணிக்கை - 477930. இவர்களில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 415331 மாணவர்களில் 89.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? ...அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன் சீனாவின் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்று தரப்படும்  படிப்பு முடியும் வரை உதவி செய்து தரப்படும்...விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்...நாங்கள் உங்களை  தொடர்பு கொள்கிறோம். .SPECIAL PACKAGE FOR TEACHER'S CHILD | Alpha Business Studies Pvt LtdCLICK HERE

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||