10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு


10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | தற்போது 10-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் தேசிய திற னாய்வுத் தேர்வுக்கு வருகிற 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2017-18), அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருகிற 21-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Comments