தலைமைச் செயலகத்தில் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி 22-ந் தேதி வேலை நிறுத்தம் ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி 22-ந் தேதி வேலை நிறுத்தம் அரசு ஊழியர்கள் அறிவிப்பு | கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 22-ந் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

Comments