டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது

26 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது | டாஸ்மாக் பணியாளர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 26 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மாதமும், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் விற்பனை அதிகமாக இருந்தால் அதில் 1½ சதவீதத்தை எடுத்து சிறப்பாக விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு 70 சதவீதமும், குறிப்பிட்ட அந்த இலக்கை எட்ட முடியாத கடைகளுக்கு மீதமுள்ள 30 சதவீதத்தில் இருந்தும் ஊக்கத்தொகை பிரித்து வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 37 சதவீதம் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான ஊக்கத்தொகையும், மீதமுள்ள 63 சதவீதம் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரையிலான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகை முறையில் முரண்பாடு இருக்கிறது என்று கூறி, அந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் 184-வது கூட்டம் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்தது. அதில் இதுதொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments