தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல் | நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிப்பதற்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஆலோசனை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவின் வரைவை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வது என்றும், இதற்காக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்புவது என்றும் தீர்மானித்தனர். இதனடிப்படையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். பகல் முழுவதும் உள்துறை அமைச்சகத்திலேயே நேரத்தை செலவிட்ட ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொன்றாக தாக்கல் செய்தார். பிறகு வெளியில் வந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

Comments