அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்க தடைவிதிக்க முடியாது ஐகோர்ட்டு கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை பதில்

அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்க தடைவிதிக்க முடியாது ஐகோர்ட்டு கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை பதில் | அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்குவதற்கு தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆங்கில வழி பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தவறு செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்களை, ஆசிரியர்கள் சங்கம் காப்பாற்றுவதால் அந்த சங்கங்கள் தொடங்குவதற்கு தடை விதித்தால் என்ன? என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் நந்தகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மாநிலம் முழுவதும் உள்ள 37,211 அரசு ஆரம்பப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 13,789 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments