பள்ளிக் கல்வித் துறை செயலரை மாற்றும் திட்டம்?

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை செயலராக இருக்கும் டி. உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. தமிழக கல்வித் துறையின் பின்னணியில் இருந்து செயல்படும் பள்ளிக் கல்வித் துறை செயலர் டி. உதயச்சந்திரனின் அதிரடி நடவடிக்கைகளால், வருவாயில் திளைத்து வரும் தனியார் பள்ளிகள் கலக்கமடைந்துள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறை எடுக்கும் நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பள்ளிக் கல்வித் துறை செயலராக உதயச்சந்திரன் பணியமர்த்தப்பட்ட பிறகு, அந்த துறையின் பல செயல்பாடுகள் தமிழக மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை முன்கூட்டியே அறிவித்தது, தரவரிசைப் பட்டியல் முறையை ஒழித்தது, மாநிலப் பாடத் திட்ட முறையை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பது, பதினோராம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என பல அதிரடி முடிவுகள் வெளியாகின. மறைமுகமாக இந்த அறிவிப்புகள் அனைத்துமே தனியார் பள்ளிகளுக்கு பாதகமாகவே அமைந்துவிட்டன. அதோடு, மாநிலப் பாடத் திட்டத்தை மாற்றியமைக்கும் முடிவு, நேரடியாக தனியார் பள்ளிகளை பாதிக்கும் என்று கருதப்படுவதால், உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்வதற்கான அழுத்தங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை என்றாலும், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து, அரசுக்கு தங்களது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வேளை, உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்தால், அது மாநிலப் படத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று பள்ளிக் கல்வி முறைக்கான செயலர் பி.பீ. கஜேந்திர பாபு கருத்துக் கூறியுள்ளார். பல தனியார் பள்ளிகள், தங்களுக்கு எதிரான செயல்களாகவே இந்த பணிகளை பார்ப்பதால், உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், அவரை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு தவறு செய்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், உதயச்சந்திரன் எப்போதுமே ஊழலுக்கு எதிராக பணியாற்றக் கூடியவர். ஒருவர் பதவியில் அமர்த்தப்பட்டு 5 மாத காலத்துக்குள் அவரை பணியிட மாற்றம் செய்வது என்பது கண்டிக்கத்தக்கது. 100 மேல்நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாலும், 150 நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்திய அவரது பணி பாராட்டுக்குரியது. அவரை பணியிட மாற்றம் செய்தால், தமிழகத்தில் கல்வித் துறை மேம்பாடையும் பணியே பாதிக்கும் என்று கூறியுள்ளார். 
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments