மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருதரப்பிலும் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகிய மூன்றும் சேர்ந்து எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நல்ல முடிவை சொல்லுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தமிழக மாணவர்களின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீட் தேர்வு எழுதிய மாணவர்களும் நம்முடைய மாணவர்கள் தான். நிச்சயமாக சொல்கிறேன், அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

Comments