இனி பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார்!

இந்தியர்கள் இனிமேல், ஆதார் அட்டை இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ரயில் டிக்கெட், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துவிட்டன. இந்நிலையில் பட்டப்படிப்பு சான்றிதழில் போலிகள் அதிகம் நடமாடுவதைத் தவிர்க்க, இனிமேல் விநியோகிக்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழில் மாணவரின் ஆதார் அட்டை எண் மற்றும் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) அறிவுறுத்தியுள்ளது. பட்டப்படிப்புகளில் படிப்பதற்காக மாணவர்கள் சேரும் கல்லூரிகள் பெயர்களையும், படிப்பு முறை (முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைநிலைக் கல்வி) போன்ற விவரங்களையும் சான்றிதழ்களில் சேர்க்கவும், அதில் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் எண் இடம்பெற வேண்டும் என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments