TRB சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு | ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு.

TRB சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு | ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு | தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் அரசுப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஓவிய ஆசிரியர், உடற்கல்வி, இசை, தையல் உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 20-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.

Comments