புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு | 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.


விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு, போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து, பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப, எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த 2006க்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை. கணினி அறிவியல் பாடத்தை, கல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவாக தேர்வு செய்து படித்து, பி.எட் முடித்து, வேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க, அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த, புதிய பாடத்திட்டம் அமலானால், படித்து வேலையில்லாமல் காத்திருக்கும், கணினி பட்டதாரிகளுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும் என, கணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன் கூறுகையில், ''பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.தற்போது பொறியியல் மாணவர்களும், பி.எட்., படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய பாடத்திட்டம் அமலானால், கூடுமானவரை கணினி ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் 3ம் வகுப்பிலிருந்து கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,'' என்றார்

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும், கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக கட் ஆப் மதிப்பெண் விவரம் வருமாறு:- ஓசி - 77.781 பிசி - 71.670 பிசி (முஸ்லிம்) - 69.200 எம்பிசி, டிஎன்சி - 70.247 எஸ்சி (அருந்ததியர்) - 64 எஸ்சி - 69.917 எஸ்டி - 60.347 கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதியும், எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெறும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | 2010-ம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (7 ஆண்டுகளுக்குள்) முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தூய்மை இந்தியா பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், இந்த காலக்கெடுவுக்குள் பொறியியல் முடிக்காத மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கு இறுதியாக 2 வாய்ப்புகள் அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டு வரையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களின் நிலைமையை சிறப்பு நிகழ்வாக கருதி, அவர்களுக்கு இன்னும் 2 பருவ காலங்களில் (2018-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) மட்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். அவர்களுக்கான தனி தேர்வுக்கால அட்டவணை, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த சிறப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் நடத்தப்படும். இனிமேலும் இதுபோன்ற கூடுதல் வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது. இதை மனதில்கொண்டு மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 2 தேர்வு வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி தேர்ச்சிபெற்று படிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2011-ம்முதல் தேர்வு எழுவோருக்கு காலக்கெடு 7 ஆண்டுகள் மட்டுமே. இந்த கூடுதல் காலஅவகாசம் மூலம் ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2-ல் அடங்கிய துணை வணிகவரி அலுவலர், 2-ம் நிலை சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2,169 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு | தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் பதவியில் 129 காலியிடங்களை நேரடியாக நிரப்ப ஆன்லைனில் (www.jat.tnausms.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஹையர் கிரேடு அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு, மற்றொன்றில் லோயர் கிரேடு முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்திய 'ஆபீஸ் ஆட்டோமேசன்' என்ற கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு தேர்வு), நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வில் பொது அறிவு பகுதியில் 60 கேள்விகள், நுண்ணறிவுத் திறன், கணிதத்திறன் பகுதியில் 20 வினாக்கள், பொது தமிழ், ஆங்கிலம் பகுதியில் 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 20 மதிப்பெண். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 30 மதிப்பெண். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.jat.tnausms.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 129 காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, அதன் பிரிண்ட் அவுட் பிரதியை தேர்வுக் கட்டணத்துக்குரிய டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் | மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் அறிக்கையை வழங்கியது. நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களையும் விதமாக, அவர்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அமைத்தது. இந்தக் குழு முதலில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றது. அதன்பின், தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை அளிப்பது தாமதமாகி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தொடங்கியது. அமைச்சர்கள் குழுவினர், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளிடம் பேசினர். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியக்குழு பரிந்துரைகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான குழு பரிந்துரையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை அக்டோபர் 15-க்கு தள்ளி வைத்தனர். மற்றொரு பிரிவினர் கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதன்பின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது, அக்டோபர் 13-ம் தேதிக்குள் ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஊதியக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும் நிதித் துறை செயலருமான கே.சண்முகம், 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு ஜாக்டோ - ஜியோ கிராப் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், உத்தரவாதம் அளித்தவாறு செப்.30-ம் தேதிக்குள் 7-வது ஊதியக்குழு அறிக்கையை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நீதிமன்ற தலையீட்டால் கண்டிப்பான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டபின், தற்போது முதன்முறையாக சொன்ன காலவரையறைக்குள் அலுவலர் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. இது காலதாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும், அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்னவென்று தெரியாத போதும், நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குறித்த நாளுக்குள் வெளியிடப்பட்டுள்ளது உண்மையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்' என கூறப்பட்டுள்ளது.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

RTE ADMISSION | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

25 % ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர அக்.10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர), வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரையில் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கப்பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 41 ஆயிரத்து 832 இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி தேதி அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் சேர www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வட்டார வள மேய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை வெளிப்படையாக உடனுக்குடன் நிரப்பி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 516 செவிலியர்களுக்கும், கடந்த 13-ம் தேதி 1,013 உதவி டாக்டர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 10,790 மருத்துவர்கள் மற்றம் சிறப்பு மருத்துவர்கள், 9,706 செவிலியர்கள் உட்பட 23,571 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

பி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதார போராட்டங்கள்.

பி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதார போராட்டங்கள். தமிழக கல்விதுறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் CBSCபாடத்திட்டதிற்கு இணையாக அரசு பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தாரர்கள். அனால் கணினி அறிவியல்பாடத்தை தனி பாடமாக வெளியிடாமல் அறிவியலில் துணை பாடமாகவும் அதற்கு அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுபதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. •   கணினி அறிவியல் பாடத்தை அறிவியலில் துனைபாடமாக கொண்டு வந்தால் அக்கல்வி எவ்வாறு CBSCபாடத்திட்டத்திற்கு இணையான கல்வியாக இருக்க முடியும். •  அறிவியல் ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுத்தால் எவ்வாறு மாணவர்கள் கணினி அறிவியல் கல்வியை ததிறன்பட கற்க முடியும்?. • அறிவியல் ஆசிரியர்களே கணினி வகுப்பு எடுக்க முடியும் என்றால் பிறகு ஏன் தனியாக பி.எட் கணினி அறிவியல் பட்ட படிப்பு. 50,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளுக்குதமிழ்,ஆங்கிலம்,அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களை இளங்கலையில் படித்துள்ள எங்களுக்கு பயிற்ச்சி கொடுத்து எங்களையும் TET பரிட்சை எழுததமிழகஅரசுஅனுமதிக்கவேண்டும்.
 •        அணைத்து பி.எட் கணினி பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கிய பிறகே பி.எட் கல்லூரிகளில் பி.எட் கணினி மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். •           2007-2008 கல்வி ஆண்டு முதல் 2015-2016 கல்வி ஆண்டு வரை 525 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் தொடங்கப்பட்டுள்ளது என்றுஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது. அனால் CM CELLஅளித்துள்ள பதில் மனுவில் தமிழகத்தில் மொத்தம் 1880 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் நடத்த படுவதாகவும், 1880 பள்ளிகளில் நிரந்தர கணினி ஆசிரியர் நியமிக்கபட்டுள்ளதகவும் SCHOOL EDUCATION-DIR, SCHOOL EDNமுரண்பட்ட பதில் வந்துள்ளது. •      748 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு விரைவில் TRB மூலம் தேர்வு நடைபெறும் என்று கடந்த நான்கு மாதங்களாக கல்வி அமைச்சர் கூறிவருகின்றார், தற்போது கூட இரண்டு மாதங்களில் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறிவருகின்றனர். அனால் இதுவரை எந்த ஒரு அரசு ஆணையும் பிறபிக்கப்படவில்லை. •      முதல் முதலாக கணினி அறிவியல் பணியிடங்களுக்கு TRB குறுகிய காலத்தில் வர உள்ளதால். இத்தேர்வுக்கான பாடத்திட்டம்இதுவரை வெளியிடவில்லை. மற்றும் இளங்கலை பட்டதாரிகளா அல்லது முதுகலை பட்டதாரிகள் மட்டும் தான் இத்தேர்வை எழுதமுடியுமா என அணைத்து கணினி அறிவியல் பட்டதாரிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்...இக்குறைகளை அரசு தான் விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும். நமதுசங்கம்மே மாதம் 29 அன்றே அறிவியலில் துணை பாடமாக கொண்டுவந்தால் அறிவியல் ஆசிரியர்களுக்கு பணிசுமைஅதிகமாகும் என்றும் கணினி அறிவியல் பாடத்தை திறன் பட மாணவர்கள்கற்க முடியாது. மேலும்50,000 மேற்ப்பட்ட கணினி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புவழங்கவேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட பி.எட். கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள்மற்றும் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு 9ஜூலை 2017 நடைபெற்றது.இணைவீர் .    வெற்றி பெறுவீர் .. கட்செவிஅஞ்சல்  - 9944041212

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD