அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு

§பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
§அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

§ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
§அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.
§அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
§வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்
§வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும்.
§அடுத்த விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்வதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க இரு தரப்பும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 DOWNLOAD

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

Comments