தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோள் அறிக்கை


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோள் அறிக்கை DOWNLOAD

‘நீட்’ உள்பட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கின


'நீட்' உள்பட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கின | நீட் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. மருத்துவக் கல்விக்காக நீட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இதை கொள்கை ரீதியாக தமிழக அரசு எதிர்த்தாலும், தமிழகத்தில் சட்டப்பூர்வமாக தடைசெய்ய முடியவில்லை. எனவே நீட் உள்பட எந்தவிதமான தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 'ஸ்பீட்' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 412 மையங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் பங்கேற்று, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளைப் பெறமுடியும். இது தமிழக அரசு இலவசமாக நடத்தும் பயிற்சி வகுப்பாகும். இந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் நடைமுறைக்கு வந்தன. தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களுக்கு, சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 'ஸ்பீட்' நிறுவனத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கியது. இந்த பயிற்சி, ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த மையங்களில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒளிபரப்பப்படும். அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் காலையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதற்காக தனி வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒளிபரப்பாகும் திரை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளி மாணவ, மாணவிகளோடு அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. 'ஸ்பீட்' நிறுவனத்தில் இருந்து நிபுணர்கள் பாடவாரியாக பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது அந்தந்த பள்ளியின் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பயிற்சி கொடுக்கும்போது இடையிடையே கேள்விகளை பயிற்சியாளர் கேட்டார். மையம் வாரியாக மாணவ, மாணவிகளிடம் அவர் பதிலை கேட்டார். பயிற்சியின்போது சந்தேகம் எழுந்தால், அதை 'ஸ்பீட்' நிறுவனத்துக்கு தெரிவிக்கும் வகையில், அந்த ஒளிபரப்பு உபகரணத்தில் பொத்தான் உள்ளது. அதை அழுத்தினால், எந்த மையத்தில் இருந்து சந்தேகம் கேட்கப்படுகிறது என்பதை 'ஸ்பீட்' நிறுவனத்தில் இருப்பவர்கள் அறிந்துகொள்வார்கள். பயிற்சியின்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி மையம் செயல்படுவதை விருகம்பாக்கம் எம்.எல்.. விருகை ரவி பார்வையிட்டார். பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பயிற்சி கையேட்டை வழங்கினார். அவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் .சண்முகவேல் வரவேற்றார்.

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதலாத குறிப்பிட்ட தொழில்நுட்ப தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கான தகுதிகள், வயது வரம்பு, தேர்வுமுறை, கட்டணச் சலுகை, பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விளக்கமாக தெரிந்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் பயன்படுத்தி டிசம்பர் 13-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் (நேர்முகத் தேர்வு கிடையாது). தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிகளில், 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நியமனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வழக்கமாக, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வும், விஏஓ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுவது வழக்கம். தற்போது முதல்முறையாக இரு தேர்வுகளும் சேர்த்து ஒருங்கிணைந்த தேர்வாக நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதுDOWNLOAD | HELPCENTRE

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

EXECUTIVE OFFICER,GRADE-I INCLUDED IN GROUP-VII-A SERVICES. | இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் 4 காலியிடங்களை நிரப்பவும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

EXECUTIVE OFFICER,GRADE-I INCLUDED IN GROUP-VII-A SERVICES. | இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் 4 காலியிடங்களை நிரப்பவும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த பணிக்கு பி.எல். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு டிசம்பர் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளதுDOWNLOAD | DETAILS

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.

மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிளஸ் 2 மாணவர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க விழா மற்றும் கையேடு வெளியீட்டு விழா நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்று பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். முதலில், எடப்பாடி மேனிலைப்பள்ளியில் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதை, காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார். அதன்பின், பள்ளி மாணவர்களுக்கு கையேட்டினை வழங்கினார். அப்போது முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: மாணவர்களின் அறிவுத்திறனை மெருகூட்டி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். இப்பயிற்சிக்காக இதுவரை 73 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். இத்திட்டம் இந்தஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்றியத்துக்கு ஒரு மையம் என்ற வகையில் தமிழகத்தில் 412 மையங்களில் இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பெறாமல், பிளஸ் 2-க்கு பின் தொழில்சார் பட்டப்படிப்புகளி்ல் சேரவுள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இப்பாடங்கள் நடத்தப்படும். 30 புத்தகங்கள் இதற்கான பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு 30 புத்தகங்களாக வழங்கப்படும். பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்வித தேக்கமும் அடையா வண்ணம், மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுத்தேர்வு முடிந்தபின் தினமும் அதே நேரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போதுள்ள நம் பாடத்திட்டம் நாட்டில் உள்ள எந்த ஒரு பாடத்திட்டத்துக்கும் சளைத்தது அல்ல. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுவதால், வேறு எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ள தேவையில்லை. வேறு எந்த செலவினமும் செய்ய வேண்டியதில்லை. மாணவர்களாகிய நீங்கள் எந்த நேரத்திலும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே, எப்போது, யாரால் என்ற கேள்விகளை உங்களுக்கு துணையாக அழைத்துச் செல்லுங்கள். உங்களை சறுக்கிவிழாமல் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக அவை செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் .பன்னீர்செல்வம் பேசும்போது, 'மாணவர்கள் அறிவைத்தேட வேண்டும். கற்றோரை நாட வேண்டும். சிறந்த புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க வேண்டும். அதனால் உங்கள் உலகம் புதிதாய்ப் பிறக்கும். கல்வி கேள்வியில் சிறந்தவர் என்பதால் மட்டுமே ஒருவரை உயர்ந்தவராக கருதிவிட முடியாது. அத்தகைய தகுதிகள் அவர்கள் ஒழுக்கத்தால் வருவது என்பதை மாணவ, மாணவியர் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்'' என்றார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் பேசும்போது, 'ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட் வகுப்பறை என நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும்' என்றார். நிகழ்ச்சியில், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், நட்ராஜ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

TNPSC Junior Scientific Officer Appointment Counselling Announced | இளநிலை தடயவியல் அலுவலர் கலந்தாய்வு 10.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது

TNPSC Junior Scientific Officer Appointment Counselling Announced | இளநிலை தடயவியல் அலுவலர் கலந்தாய்வு 10.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE | The Tamil Nadu Public Service Commission in its notification dated 29.07.2016 had invited applications from eligible candidates for appointment by direct recruitment for 30 vacancies in the Post of Junior Scientific Officer in the Tamil Nadu Forensic Sciences Subordinate Service, 2013-2015. The Oral Test for the said post was held on 25.10.2017. The Counselling has been scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600003 on 10.11.2017. A total no. of 53 candidates have been called for the Counselling. The Ranking List for the said post has been published in the Commission's website (i.e., www. tnpsc.gov. in). The Notice of Counselling has been sent to all the candidates through Speed Post. If the candidates fail to appear for Counselling on the said date, they will not be given any further chance to appear for the same. | தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணிகளில் 2013 -2015 ஆம் ஆண்டிற்கான, இளநிலை தடயவியல் அலுவலர் பதவிக்குரிய 30 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 29.07.2016-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் பதவிக்கான நேர்காணல் தேர்வு 25.10.2017 அன்று நடைபெற்றது. இப்பதவிக்கான கலந்தாய்வு 10.11.2017 அன்று சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 53 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இப்பதவிக்கான தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பாணை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | CLICK HERE

Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges Result | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.| Direct Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges - for the year 2017 - 18 - Please click here for Final Key answers and Individual Candidate Qurey and C.V List | Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges - 2017 PUBLICATION OF EXAMINATION RESULTS As per the Notification No.06/2017 published on 28.07.2017, the written Competitive Examination for the Direct Recruitment of 1058 lecturers in Government Polytechnic Colleges was held on 16.09.2017. A total of 1,70,366 candidates applied for the written examination and 1,33,567 candidates appeared for the Written Examination. Tentative key answers for all the subjects were published on 06.10.2017 in TRB official website www.trb.tn.nic.in and candidates were given time to submit their representations, if any, on tentative key answers along with relevant authoritative proof up to 5.30 pm on 12.10.2017. All the representations received from the candidates within the stipulated time have been thoroughly examined by the subject expert committee members. After thorough scrutiny, a revised and final key answer has been arrived at by the subject expert committee members and based on that, OMR answer sheets of the candidates have been valued through computerized electronic process. During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found that quite a number of candidates committed mistakes in marking/shading the question paper serial code which is essential for valuation of the OMR answer sheets. The candidates who have not marked question paper serial code in their OMR answer sheets, their answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation. Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released on individual query. The revised final key answers arrived by the subject expert committee members is published herewith. The list of candidates called for Certificate Verification in the ratio 1:2 is also published herewith, reserving 4% of posts for persons with Disability. Board proposes to conduct Certificate Verification from 23.11.2017 to 25.11.2017. Certificate Verification venue and individual call letter will be uploaded in the TRB website soon. Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement.  DOWNLOAD

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 பணிகள் | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ..சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இதன் சுத்திகரிப்பு ஆலைகளில் பாய்லர் ஆபரேசன் என்ஜினீயர், குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர், பயர் அண்ட் சேப்டி ஆபீசர், மெடிக்கல் ஆபீசர், ஹியூமன் ரிசோர்ஸ் ஆபீசர், அசிஸ்டன்ட் இந்தி ஆபீசர், மிட் லெவல் என்ஜினீயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக எச்.ஆர். பிரிவில் 50 பணியிடங்களும், பயர் அண்ட் சேப்டி ஆபீசர் பிரிவில் 50 இடங்களும், குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர் பிரிவில் 44 இடங்களும், பாய்லர் ஆபரேஷன் என்ஜினீயர் பிரிவில் 33 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர மருத்துவ அதிகாரி பணிக்கு 19 பேரும், அசிஸ்டன்ட் இந்தி ஆபீசர் பணிக்கு 19 பேரும், மேலாளர் பணிக்கு 6 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு:-
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 31-10-2017 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
பி.., பி.டெக் பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. எம்.. இந்தி, எம்.பி.., எச்.ஆர்., எம்.பி.பி.எஸ். படிப்புடன் எம்.டி. படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவ விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர் காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சில பணிகளுக்கு நேர்காணல் மட்டும் நடைபெறும். சில பணிகளுக்கு குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். 18-11-2017-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.இதற்கான எழுத்துத் தேர்வு 10-12-2017 அன்று நடைபெற உள்ளது. இது பற்றிய விரிவான www.iocl.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

HOLIDAY (06.11.17) DECLARED FOR SCHOOLS AND COLLEGES IN TN DUE TO HEAVY RAIN

 
HOLIDAY (06.11.17) DECLARED FOR SCHOOLS AND COLLEGES IN TN DUE TO HEAVY RAIN | கனமழை காரணமாக இன்று (06.11.17) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் புதுச்சேரி, காரைக்காலுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள்,மெட்ரிகுலேஷன்,சி.பி.எஸ்.., உள்ளிட்ட எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது  

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1315 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு 1315 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை .பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1315 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பணியிடங்களில் அந்த மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம்.தற்போது .பீ.பி.எஸ். அமைப்பு 7-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1315 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் வருமாறு: .டி. ஆபீசர் - 120 பேர், அக்ரிகல்சரல் பீல்டு ஆபீசர் - 875 பேர், ராஷ்டிரபாஷா அதிகாரி - 30 பேர், சட்ட அதிகாரி - 60 பேர், சட்ட அதிகாரி, எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி - 35 பேர், மார்க்கெட்டிங் அதிகாரி - 195 பேர்.21 பொதுத்துறை வங்கிகள் இந்த எழுத்து தேர்வின் மூலம் தங்கள் நிறுவன பணியிடங்களை நிரப்புகின்றன. இதர வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த தேர்வு முடிவை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே விருப்பமானவர்கள் தேர்வை எழுதி பயன் பெறலாம்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-11-2017 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-11-1987 மற்றும் 1-11-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் .டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்., அக்ரி கல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோ ஆபரேசன், கோ ஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அக்ரிகல்சர் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ராஷ்டிர பாஷா அதிகாரி பணிக்கும், இதேபோல சட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அது சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும்.
கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கியத் தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 7-11-2017
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 27-11-2017
முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 30-12-2017, 31-12-2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : பிப்ரவரி 2018
நேர்காணல் நடைபெறும் காலம் : பிப்ரவரி 2018
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD