பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்!

பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்! | மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் நடைபெற இருப்பதால் தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 1.3.2018 முதல் 16.4.2018 வரை மேல்நிலை கல்வி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாமாண்டு அரசு பொது தேர்வுகளும் மற்றும் 16.3.2018 முதல் 20.4.2018 வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதால் இத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்கள் வைத்துள்ள இலவச பேருந்து பயணச்சீட்டின் அடிப்படையிலேயே அவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு தேர்வு நாட்கள் முடியும் வரை மாநகரப்பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்குமாறு மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. எனவே, அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உத்தரவை தவறாமல் கடைபிடித்து பள்ளி மாணவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் வரை சென்று திரும்ப அவர்களை இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், உதவி மேலாளர்கள், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு உத்தரவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். பள்ளி நேரங்களில் எக்காரணத்தை கொண்டும் பேருந்துகளை நிறுத்தி காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பேருந்து இயக்கிட ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்

'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம் | 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்கள், தேர்வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் சித்தா போன்ற படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வில், தமிழகத்தில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.நீட் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெற, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இலவச பயிற்சி பெறும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முறையாக விண்ணப்பிக்க, உதவ வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், உதவி மையம் அமைத்து, உதவ வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை தாய்மொழியில் எழுத அனுமதி.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தாய்மொழியில் எழுத அனுமதி தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, 2006-ல் மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் முதல் மொழிப்பாடமாக தமிழைக் கண்டிப்பாக கற்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழுக்குப் பதிலாக தங்களின் தாய் மொழியான தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத் தூஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இதுதொடர்பான வழக்குகளை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என பரிந்துரைத்த நீதிபதிகள், இடைக்காலமாக இந்த ஆண்டும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களின் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட்டனர்.

கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இனிமேலாவது தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா? மற்ற மாநிலங்களை காட்டிலும், இந்தியா அளவில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பின் தங்கியே உள்ளனர். NCERT மூலமாக நடத்தப்பட்ட NAS (National Assessment Survey) ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகவும் மற்ற மாநில மாணவர்களுக்கு முன்னோடியாகவும் இந்தியாவில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடம் பிடிக்கவும் கணினி வழிக்கல்வி கற்றல் அவசியம். மற்ற மாநிலத்தில் உள்ளதை போல் கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவரவேண்டும். அப்போது தான் தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக தலைசிறந்து விளங்கும். 1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு. இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார். ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். "வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?" என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில் அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடித்தளமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது' என்று காந்தி விமர்சித்ததுள்ளார். இக்கல்விமுறையே தற்போது வரை உள்ளது. சுயமாக மாணவர்களை சிந்திக்கவிடாமல் ஏன்?..எதற்கு?..எப்படி?.. என கேள்வி கேக்காமல் பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் அப்படியே பாத்து படித்து வந்தனர். தற்போது வரை மாணவர்கள் அவ்வாறே படித்துவருகின்றனர். எனவேதான் குறுகிய மனோபாவம் உள்ளவர்களாக மாணவர்கள் வளருகின்றனர். பள்ளி படிப்பை முடித்தபின்னர் சமுதாயத்தில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தங்களுக்கு ஏற்படும் தோல்விகளையும் எவ்வாறு கையாளவேண்டும் என தெரியாமல் மனமுடைந்து வழிதவறிபோய்விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கின்றனர். ஒருசில மாணவர்கள் மட்டும்மே கேள்வி கேட்டு புதிய புதிய வழிகளில் விடை தேடுகின்றனர். இவர்களே பிற்காலத்தில் தலைசிறந்தவராக விளங்குகின்றனர். தற்போது வரவிருக்கும் புதியபாடத்திட்டத்தில் மாணவர்கள் சுயமாக சிந்திதித்து செயல்படும் வண்ணம் பாடத்திட்டம் அமையவேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றார் போல் கணினி உதவியுடன் தனக்கு தேவையான தகவல்களை இணையதளம் மூலமாக உலகில் எந்த மூலையில் இருந்தும் உடனே பெற்றுவிடுகின்றனர். அனைத்து துறைகளுக்கும் முன்னோடியாக நாம் பயன்படுத்துவது கணினியும், கணினி சார்ந்த செயலிகலுமே. இன்றைய காலகட்டத்தில் (கணினி மயமான உலகில்) மாணவர்களின் முழுமையான அறிவுவளர்ச்சிக்கு கணினி வழிக்கற்றல் மட்டுமே பெரும்பங்கு வகிக்கின்றது. உதாரணமாக நாம் அன்றாட பயன்படுத்தும் கணினி செயலிகள் Online Seminar Classes, Online banking, PDF Books, Online Edu Videos, Email, You tube, Facebook, WhatsApp, Pay tm, Auto CAT, e-Commerce, Tally, Photoshop, etc..,

TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது

TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது | சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர், தேர்வாளர், காசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி எழுத்து தேர்வு நடத்தியது. இந்த தேர்வு தொடர்பான 153 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை சென்னை பாரிமுனை, பிரேசர் பாலச்சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மற்றும் விரைவு அஞ்சல் மூலம் அழைப்பு கடிதம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை எண் மற்றும் கணினி வழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு 1:2 என்ற விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவரவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது. மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என மொத்தத்தில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலை தேர்வினை 5 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வுக்காக மொத்தம் 45 ஆயிரத்து 380 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட இருக்கின்றனர். பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின் வாயிலாக படித்து அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்திற்கு செல்போன் எடுத்துவருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி, உரிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்தும், தேர்வு மையத்தினை ரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கட்டுப்பாட்டு அறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு 8012594105, 8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியீடு

சொந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியீடு | தமிழக வருவாய்த்துறை செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 17.8.17 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், நிர்வாக வசதிகளுக்காக கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் சொந்த வருவாய் வட்டத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதற்கான விதிகளை வகுத்து ஆணை பிறப்பிக்க அரசுக்கு வருவாய் நிர்வாக கமிஷனர் கடிதம் அனுப்பினார். அதனடிப்படையில் 11 விதிகள் வகுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்படு கிறது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர்கள் தனது சொந்த வருவாய் வட்டத்தில், பணி மூப்பு அடிப்படையில், அங்கு காலியிடம் இருந்தால் நியமிக்கப்படுவார்கள். சொந்த ஊரில் நியமிக்கப்படுவதை அவர்கள் உரிமையாக எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEST EXAM 2018

RTI - தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது..

பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்

பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும் | தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல்கட்டமாக 25 மையங்களும், இதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதி முதல் 100 பயிற்சி மையங்களும் செயல்பட்டன. அவற்றில் சுமார் 14,000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேலும் 312 மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த 412 மையங்களும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 72,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குஇலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த வாரங்களில் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் காரணமாக பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. கடந்த பிப்.24,25 ஆகிய நாள்களில் பெரும்பாலான பயிற்சி மையங்கள் செயல்படவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இதையடுத்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் தாற்காலிகமாக செயல்படாது. தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்.3-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் மே.3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சிகள், கையேடுகள் வழங்கப்படும் என்றனர். நீட்தேர்வு நாடு முழுவதும் மே.6-ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNUSRB - POLICE EXAM 2018 - HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 )

TNUSRB - POLICE EXAM 2018 - HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 ) - TNUSRB Recruitments COMMON RECRUITMENT FOR GR. II POLICE CONSTABLES, GR. II JAIL WARDERS AND FIREMEN SUB-INSPECTOR OF POLICE (FINGERPRINT) SUB-INSPECTOR OF POLICE (TECHNICAL) SUB-INSPECTOR OF POLICE (TALUK/ARMED RESERVE/TAMIL NADU SPECIAL POLICE) TAMIL NADU SPECIAL POLICE YOUTH BRIGADE (LIMITED TO ROLE ASSIGNED UNDER TNSPYB ACT 2013) | தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, அடுத்த மாதம், மாவட்டம்தோறும் நடக்க உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க, இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் என, வாரியம் அறிவித்துள்ளது. | DOWNLOAD

ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு

ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு | மத்திய அரசு பல்கலைகளுக்கான. 'கியூசெட்' நுழைவு தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின், நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, 10 பல்கலைகளில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசின் பொது நுழைவு தேர்வான, 'கியூசெட்'டில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இந்த தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய அரசு சார்பில், ராஜஸ்தான் மத்திய பல்கலை நடத்துகிறது. தேர்வுக்கான பதிவுகள், www.cucetexam.in என்ற, இணையதளத்தில் துவங்கியுள்ளன.தேர்வுக்கு, மார்ச், 26 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மே, 25ல், தேர்வு முடிவை வெளியிட, ராஜஸ்தான் மத்திய பல்கலை திட்டமிடுள்ளது. திருவாரூரில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலையில், இளநிலை முதல், பிஎச்.டி., வரை, 60க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், வரும் கல்வி ஆண்டில் சேர, கியூசெட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விபரங்களை, http://cutn.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல், பெங்களூரு, அம்பேத்கர் பொருளியல் கல்லுாரியிலும், கியூசெட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து | தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தைதயாரித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதியபாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர். மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்தபாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில்இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேட் தேர்வு விடைகள் வெளியீடு

கேட் தேர்வு விடைகள் வெளியீடு | கேட் (GATE) தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதற்கான விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விடையில் சந்தேகம் இருப்பவர்கள், வேறு முறையிடல் இருப்பவர்கள் தங்கள் முறையீட்டை இணையதளத்தில் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவை பரிசீலிக்கப்படுகிறது. மார்ச் 17-ந் தேதி கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

தனியார் பள்ளிகள் இனிமேல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை டிஜிட்டல் முறையில் வங்கியில் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் சம்பளம் தனியார் பள்ளிகள் இனிமேல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் களுக்கான சம்பளத்தை டிஜிட்டல் முறையில் வங்கியில் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மெட்ரிக் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்கம், தொடக்கப்பள்ளி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தும். இந்த ஆண்டு முதல் சம்பளத்தை இ.சி.எஸ். முறையில் வங்கி மூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவு வெளியாகி இருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் புதிதாக கல்விக்கட்டண நிர்ணயத்திற்கு வரும் பள்ளிகள், இ.சி.எஸ். முறையில் சம்பளம் வினியோகம் செய்திருப்பது கவனத்தில் கொள்ளப்படும். சம்பளம் இந்த முறையில் வினியோகிக்கப்படாவிட்டால் அனுமதி கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறைமருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு? | சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறைமருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும், 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில்நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல் அறிவித்தது. இதுதொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும்ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: 'இந்திய முறை மருத்துவ படிப்புக்கு, நீட் தேர்வு கட்டாயம்' என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், இந்தாண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, ஆயுஷ் அமைச்சகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். அதிலும், சித்த மருத்துவம், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். அதை, தமிழ் தெரிந்த மாணவர்கள் எளிதில் கற்க முடியும். எனவே, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, நீட் நுழைவு தேர்வு கூடாது. அதிலிருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல் | தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும்"ஜுனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களுக்கான மாநில மாநாடுசென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா தலைமை வகித்தார். மாநாட்டை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசியது:- சமூகத்தைப் பாதுகாக்கவும், பிறருக்கு உதவும் நோக்கம்வேண்டும் என்ற கொள்கையோடும் செயல்பட்டு வருகிறது இளஞ்செஞ்சிலுவை சங்கம். மாணவர்களை நல்வழிபடுத்துவதில் இந்தச் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆசிரியர்கள் இதில் முக்கிய பொறுப்பேற்றுசெயல்பட வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜேஆர்சி அமைப்பு மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அமைப்பை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. அமைப்பை தொடங்குவது குறித்து தொடர்புடைய கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.இதில் இளஞ்செஞ்சிலுவை சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட 68 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

TNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

TNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 4 பதவியில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு, 2016 நவ., 6ல், எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, 53 காலியிடங்களை நிரப்ப, 28 முதல், மார்ச், 1 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தட்டச்சர் பதவியில், 15 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 1, 2ல், சான்றிதழ் சரிபார்க்கப் படும். இதற்கான கடிதங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் | ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவம் பயில்வதற்கு 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில விரும்பும் மாணவர்களுக்கு 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ல் இந்திய மருத்துவ கவுன்சில் இதழில் வெளியான அறிவிப்பில், மருத்துவக் கல்வியை வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கும் 'நீட்' தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் பலரும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் சந்தேகம் எழுப்பி வந்தனர். எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமா அல்லது எம்டி, எம்எஸ் போன்ற உயர் கல்விக்கும் நீட் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம்(எம்பிபிஎஸ்) பயில விரும்பும் இந்திய மாணவர்கள் அனைவரும் 2018 மே முதல் 'நீட்' தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்திய மருத்துவ கவுன்சில் சான்றிதழ் பெற்று ஏற்கெனவே வெளிநாடுகளில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.நீட் தேர்வில் மொத்த மதிப்பெண் 220-ல் 108 பெறும் மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி பெறுகின்றனர். இனி இந்த மதிப்பெண் பெறுவோர் மட்டுமே வெளிநாடு சென்று படிக்க முடியும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 6-ல் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மேற்படிப்பு மற்றும் தொழில்புரிவதற்கு 'ஸ்கிரீனிங் டெஸ்ட்' எனும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக 'தேசிய மருத்துவ ஆணையம்' அமைப்பதற்கான மசோதா நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டில் பயின்ற மாணவர்கள் மட்டுமின்றி உள்நாட்டில் படித்தவர்களுக்கும் 'எக்சிட் டெஸ்ட்' என்ற பெயரில் திறனாய்வு தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் தவிர்ப்போம்! தேர்வில் ஜெயிப்போம்!!

மன அழுத்தம் தவிர்ப்போம்! தேர்வில் ஜெயிப்போம்!! தேர்வுகள் நம்மை தேர்ச்சி அடைய வைப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் உயர்ச்சியைத் தரும் படிக்கல்லாக அமைய வேண்டும். மாறாக, தேம்பி நிற்கச் செய்யும், கவலையில் தோய்க்கும் ஒரு விரோதியாக தேர்வுகள் இருந்துவிடக்கூடாது. தேர்வுகள் நம்மை ஆட்டி வைக்காமல் இருக்க நாம் அதைக் கண்டு பயப்படாமல் இருப்பதே முதல் வழி. தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயமே, மன அழுத்தமாக மாறி, பதற்றத்தைத் தந்து தோல்விக்கு வைத்துவிடுகிறது. தற்கொலைக்குள் தள்ளும் தைரியமற்ற தன்மையையும் வளர்த்துவிடு கிறது. தேர்வு தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வில் ஜெயிக்க வைக்கும் மந்திரமொழிகள் சில... * தேர்வு என்பது உங்கள் கற்றல் திறனை சோதிக்கும் ஒரு பரீட்சை அவ்வளவுதான். தேர்வுடன் வாழ்வில் எதுவும் முடிந்துவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எளிதில் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் எவ்வளவோ எளிய முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எளிமையான வினாக்கள், முக்கிய வினாக்கள், மனப்பாடப் பகுதிகள், அழகுபடுத்தும் உபாயம், படம் வரைதல் என பல்வேறு யுத்திகள் மூலம் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள். * தேர்வையும், எதிர்காலத்தையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்காலம் எந்த வினாடியும் உங்கள் கைகளில்தான் இருக்கும். அதை எப்போது நினைத்தாலும் உங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும், நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருந்தால் போதும். எனவே தேர்வு பயத்தை துரத்திவிட்டு நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள். முந்தைய காலம்போல இல்லாமல், இப்போதெல்லாம் மறு தேர்வுகள் உடனே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்கும் போது எதற்கு அச்சப்பட வேண்டும்? ஏன் தவறான முடிவை எடுக்க வேண்டும். துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்களுக்கே. * விளையாட்டும், இசையும் மன அழுத்தத்தை மாயமாக்கும் மந்திர வழிகள். உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் விளையாடி வாருங்கள். குடும்பத்தினருடன் கூடி இருந்து அரட்டையடியுங்கள். ஒரே அறையில் புத்தகங்களுடன் அடைந்து கிடக்க வேண்டாம். * நண்பர்களை அழைத்து செல்போனில் புலம்பிக் கொண்டிருப்பது, 'நான் பாஸாகி விடுவேனா?' என்று நம்பிக்கையற்று இருப்பது, 'பாஸாகாவிட்டால் அவ்வளவுதான்' என்று எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருப்பது போன்றவற்றை கைவிடுங்கள். தியானம், யோகா செய்து மனதை அமைதிப்படுத்துங்கள். "நான் ஜெயிப்பேன்" என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள். * தனிமையை தவிருங்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் உரையாடுங்கள். இந்தத் தேர்வுதான் என் எதிர் காலத்தை தீர்மானிக்கும் என்ற எண்ணத்தை கைவிடுங் கள். "நான் தனிப்பட்டவன் அல்ல, எனக்காக குடும்பம் இருக்கிறது, உதவிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், உறவுகள் இருக்கிறது. எனது சுக துக்கத்தில் அவர்கள் பங்கெடுப்பார்கள். அவர்களுக்காக நான் இருக்கிறேன்" என்ற சமூக மதிப்பை மனதில் வளர விடுங்கள். இது எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும். * 'எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு' என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமில்லை. தேர்வில் ஜெயித்து, நான் அடைய வேண்டிய லட்சியம் அது ஒன்று மட்டும்தான் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும். ஆனால் அது கைநழுவும் போது அதைவிட சிறந்த உயரத்தை எட்டும் நம்பிக்கையும் உங்கள் மனதில் இருக்கட்டும். மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் மாற்று வாய்ப்புகள் பற்றியும் சிந்திப்பதே மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும். * எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உங்கள் மீது நீங்களே நம்பிக்கை கொண்டிருங்கள். உங்களை குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே எதைப் பற்றிய அச்சமும் மனதில் எழுவதில்லை. உங்கள் பலவீனங்களை அறியுங்கள், ஆனால் அதில் மூழ்கிப்போகாமல் கடந்து வர முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் வெற்றி சிகரத்தில் ஏறிக் கொண்டிருப்பீர்கள். பயம் அகலட்டும், வெற்றிகள் குவியட்டும். வாழ்த்துக்கள்!

வருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

வருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி | வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 32 மாவட்டங்களில் 44 இடங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு - அமைச்சர் அன்பழகன்ஆன்லைன் மூலம் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2018-2019-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆன்லைன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் என அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே தொடங்கப்படும். சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையமும், பெரிய மாவட்டமாக இருந்தால் 2 உதவி மையங்களும் தொடங்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் உதவி மையங்கள் அமைக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் தனியார் கல்லூரிகளில் உதவி மையங்கள் தொடங்கப்படாது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஆன்லைன் கலந்தாய்வுக்கான தேதி விவரங்கள் அறிவிக்கப்படும். உதவி மையங்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிட்ட பின்னர் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். நடைபெறுவது எப்படி? ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது எப்படி? என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விண்ணப்பதாரர்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்குரிய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப பதிவிற்கான கட்டணத்தை (ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250) ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை எங்கிருந்தும் பதிவு செய்யலாம். என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம். தகுதி பட்டியல் தயார் செய்யும்போது ஏற்படும் சம நிலையை தவிர்க்க சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்படும். விண்ணப்ப படிவம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகவேண்டும். அங்கு தகவல்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி உதவி மையத்தை தேர்வு செய்துகொள்ளலாம். தகுதிபெற்றவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின் விண்ணப்பதாரர்கள் தங்களது குறைகளை சரிசெய்ய ஒரு வாரம் காலஅவகாசம் ஒதுக்கப்படும். அந்த சமயத்தில் விண்ணப்பதாரர் கள் தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தை அணுகி குறைகளை சரி செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண்களின்படி பல குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்தாய்வு சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்கள். கலந்தாய்வுக்கான ரூ.5 ஆயிரம் (ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ரூ.1000) முன்வைப்பு தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியபின் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்காலிக இடஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தர வரிசைப்படி ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களின் 'லாகின்' வாயிலாக அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம். விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு சுற்றில் விண்ணப்பதாரரின் விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இடஒதுக்கீடு பெறாதவர்கள் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் கொடுக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் சேர்ந்து விட வேண்டும். விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை படிப்பு, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பால் நிரப்பப்படாத இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக நடைபெறும். கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள் (இ-மெயில் அலெர்ட்) விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட இணையதள முகவரிக்கு அனுப்பப்படும். என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்களில் கணினியை விண்ணப்பதாரர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கலந்தாய்வுக்கான விண்ணப்பம், பதிவு செய்தல், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், கல்லூரி தேர்ந்தெடுத்தல் மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற வசதிகளை இந்த மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 3-ந் தேதி நடக்கிறது.மார்ச் 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 3-ந் தேதி நடக்கிறது | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 200 இடங்கள் (புதுவை 150, காரைக்கால் 50) உள்ளன. இதில் 2018-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 13.4.2018 கடைசி நாள் ஆகும். நுழைவுத்தேர்வு 3.6.2018 அன்று நடைபெறும். நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரம் அல்லது 2 வாரத்திற்கு முன்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு 27.6.2018 முதல் 29.6.2018 வரை நடைபெற உள்ளது. 2-வது கட்ட கலந்தாய்வு 25.7.2018 அன்றும், 3-வது கட்ட கலந்தாய்வு 20.8.2018 அன்றும் நடைபெற உள்ளது. இறுதி கட்ட கலந்தாய்வு 28.8.2018 அன்று நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் 30.9.2018. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள். கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0. AEEO பதவிகள் மாற்றம் இல்லை. SSA , RMSA மூடப்படுகிறது . DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும். சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. JDமற்றும் இயக்குநர் க்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதகாரம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் சிஇஓ க்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல்


அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல் | மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்ற மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது பாடச்சுமை மிகவும் கடுமையாக உள்ளது. பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப் படிப்புகளை விட மிக அதிகமாக காணப்படுகிறது. மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கு நேரம் தேவை என்பதால் இந்த பாடச்சுமை குறைக்கப்படவேண்டியது அவசியமாகும். மேலும் மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தவேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு கல்வியில் முழுமையான சுதந்திரம் தேவை. எனவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தின் பாடச்சுமையை பாதியாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 2019-ம் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும். மத்திய பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும், அதை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு மாணவர் மார்ச் மாத தேர்வில் தோல்வி கண்டால் அவருக்கு மே மாதம் தேர்வு எழுத இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது | செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு (டெட்) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5 முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடக்கும். இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்புகள் வருகிற 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 4-ம் தேதியும் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26430029 என்ற தொலைபேசி எண் மற்றும் 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு: ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு: 'மைக்ரோ சாப்ட்' நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் | அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்கி உள்ள தமிழக அரசு 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கணினி வழியில் கல்வி கற்பிக்கும் பகையில் 'ஸ்மார்ட்' வகுப்புகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தும் நிலையில், 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக '365' என்ற மென்பொருளை 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம் இலவசமாக தரவுள்ளது. 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் வடக்கு, ஒசூர், கடலூர் மாவட்டங்களில் தலா ஒரு பள்ளிக்கூடத்தையும், சென்னையில் எழும்பூர் மாகாண மகளிர் பள்ளி மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளை தத்தெடுத்துள்ளது. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 'கிளவ்ட் கம்ப்யூட்டிங்' என்ற தொழில்நுட்பத்தை பள்ளிகளில் பயன்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சரண்விடுப்பு முழுவதும் வருமான வரி வரம்புக்கு உட்பட்டதே..

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் தொகைக்கு வருமான வரி இல்லை என்று பரவி வருகிறது. அதற்கு 10E பிரிவு G.O வையும் பதிவிடுகின்றனர். 10E ல் குறிப்பிடப்படும் சலுகைகள் பணி ஓய்வு பெறுபவர்களுக்கானது. அதில் பணி ஓய்வு பெறும் ஒருவர் கடந்த பத்தாண்டுகளில் சேமித்து வைத்த சரண்விடுப்பு ஆண்டுக்கு 30 நாட்கள் உச்சவரம்பு என 10 ஆண்டுகளுக்கு 300 நாட்களுக்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. (தமிழக அரசை பொருத்தவரை ஓய்வு பெறுபவர் அதிகபட்சம் 240 நாட்கள் மட்டுமே பணமாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது). மற்றபடி service ல் உள்ளவர்கள் பெறும் சரண்விடுப்பு முழுவதும் வருமான வரி வரம்புக்கு உட்பட்டதே ஆகும்.

ரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு

ரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு | குரூப்-டி பணிகளுக்கான விண்ணப்பத்தில் தேர்வுக்கான விருப்ப மொழியை மாற்ற விரும்புவோர் ஆன்லைனிலேயே திருத்தம் செய்து கொள்ளலாம் என ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் குரூப்-டி பதவிகளில் (ஹெல்பர், போர்ட்டர் போன்ற பணியிடங்கள்) 62,907 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த வேவைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்த காலியிடங்களில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலமாக மட்டும் 2,979 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு எஸ்எஸ்எல்சி படிப்புடன் என்சிவிடி தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களும் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 31 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 19-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வில் விருப்ப மொழியை சரியாக தேர்வு செய்யாதோர் தற்போது தங்களுக்கு விருப்பமான மொழியை ஆன்லைனிலேயே தேர்வு செய்து திருத்தம் செய்துகொள்ளலாம் என சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 12-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உடல் தகுதி திறன் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது.

தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு | | தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வந்த அன்னை மருத்துவ கல்லூரியை தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு படித்து வந்த 144 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர்கள் தங்களை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 'மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கடிதம் மத்திய அரசுக்கு வந்துள்ளது. இதில் உரிய முடிவு எடுக்க கால அவகாசம் தேவை' என்று மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட்டு ஒரு வார கால அவகாசம் வழங்கியது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரபு மனோகர், பாதிக்கப்பட்ட 144 மாணவர்களையும் கவுன்சிலிங் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எச்.ராஜசேகர், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக கவுன்சிலிங் நடத்தி கல்லூரியில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதி, 'தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் கவுன்சிலிங் நடத்தி பாதிக்கப்பட்ட 144 மாணவர்களையும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு | சென்னை பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் பி.எட். படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி அறிவித்தார். சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், முதுநிலை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:- மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம் (சி.பி.சி.எஸ்.) என்ற கல்வி முறையை ஏற்கனவே கடந்த கல்விக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். உதாரணமாக வரலாறு படிப்பவர்கள் வேறு ஒரு துறையில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்து படிக்கலாம். இந்த முறை தானியங்கி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் படிப்புகளை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதில் இளநிலை, முதுநிலை படிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த படிப்புகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆன்லைன் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) விதிமுறைப்படிதான் கொண்டு வரப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நுழைவுத்தேர்வு கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- பி.எச்.டி. படிக்க ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். 2016-ம் ஆண்டு அமல்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. தொலைதூரக் கல்வியில் கொண்டு வரப்படும் பி.எட். படிப்புக்கு 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதுநிலைப்படிப்பில் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏழை விவசாயி மகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

ஏழை விவசாயி மகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு | கல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் ஆர்.முத்தழகி. இவர் 2011-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். முத்தழகி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் கிளை மேலாளரிடம் கல்விக்கடன் கேட்டு 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி விண்ணப்பம் செய்தார். எந்த பதிலும் வராததால் 2012-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி நினைவூட்டல் கடிதமும் கொடுத்தார். ஆனாலும் வங்கி மேலாளர் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து ஐகோர்ட்டில் முத்தழகி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்விக்கடன் கேட்டு முத்தழகி கொடுத்த விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து வங்கி மேலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த வங்கி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சொத்து உத்தரவாதம் கூட இல்லாமல் கோடீஸ்வர தொழில் அதிபர்கள் தரும் உத்தரவாத கடிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது. நாடு முழுவதும் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளுக்கு கடன் வழங்கும்போது வங்கி நிர்வாகம் பலவிதமான அளவுகோளை பின்பற்றுகின்றன. ஏழை மாணவர்கள் கல்வி கற்க அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் தங்களுக்கு தண்டனை கிடைக்குமே என்றுகூட அவர்கள் கவலைப்படுவதில்லை. இதற்கு சரியான உதாரணமாக இந்த வழக்கு திகழ்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அதுவும் ஒரு ஏழை விவசாயியின் மகளை கல்விக்கடனுக்காக அலைக்கழித்துள்ளனர். படிப்பு முடிந்தது இந்த மாணவிக்கு கடன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கும்படி தனி நீதிபதி 2012-ம் நவம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேவையில்லாமல் வங்கி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்காக வங்கி நிர்வாகம் இப்படி செயல்பட்டுள்ளது. ஏற்கனவே ஐகோர்ட்டில் இமயமலைபோல வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், தற்போது அந்த மாணவி 2015-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டதால் இந்த மேல்முறையீட்டு வழக்கே பயனற்று போய்விட்டது என்றும் கூறுகிறது. வங்கி நிர்வாகம், கடனை கொடுக்காமல் இழுத்தடித்தது மட்டுமல்லாமல், ஏழை மாணவிக்கு நீதியும் கிடைக்காமல் செய்துவிட்டது. தற்போது அந்த மாணவியின் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. கடனை திருப்பித் தராதவர்கள் என்ற பட்டியலில் கல்விக்கடன் வாங்கியவர்கள் அதிகம் இல்லை என்று எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பித்தராமல் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது ரூ.250 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளது. இதை கணக்கிட்டால் ரூ.48 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகங்கள் மறுக்கின்றன. விஞ்ஞானி, டாக்டர், என்ஜினீயர் என்று உயர்ந்தநிலைக்கு வரவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூட நிதி கிடைப்பது இல்லை. இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வி தேசத்தின் அழியாத சொத்தாகும். அவர்களது கல்வி அறிவு தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இதை வங்கிகள் புரிந்துகொள்ள வேண்டும். மேல்முறையீடு செய்யும் உரிமையை தவறாக பயன்படுத்தியும், மக்களின் வரிப்பணத்தையும், ஐகோர்ட்டின் நேரத்தை வீணடித்தும், இந்த மேல்முறையீட்டு மனுவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏழை மாணவிக்கு கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடித்ததற்காக வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த தொகையை 2 வாரத்துக்குள் மாணவி முத்தழகிக்கு வங்கி நிர்வாகம் வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு

 
மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு |தமிழகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இந்த தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை ஆசிரியர்களும், பெற்றோரும் தயார்படுத்தி வருகிறார்கள். இதே போல பள்ளிக்கல்வித் துறையும், தேர்வுத்துறையும் இணைந்து தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகின்றன. மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு ஒருவித தேர்வு பயம், தேர்வு காய்ச்சல் வருவதுண்டு. இந்த தேர்வு பயம், காய்ச்சல், அச்சம், மனக்குழப்பம், மனஉளைச்சலை போக்க மனநல வல்லுனர்கள், கல்வி ஆலோசகர்கள் அடங்கிய குழு மாவட்டந்தோறும் பள்ளிகளுக்கு சென்று பயத்தை போக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடிப்பதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் தங்களது வீட்டில் படித்துவரும் பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகள் பார்ப்பதை யும், விருந்தினர் வந்துபோவதையும் தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடக் கூடாது. காபி, டீ, உணவு தயாரிப்பதை குறித்த நேரத்தில் செய்து, தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேர்வு மையத்துக்கும், தேர்வு முடிந்ததும் வீட்டுக்கும் அழைத்து வர வேண்டும். இதே போல ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து மாதங்களாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருப்பீர்கள். எந்த கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும்? விரிவாக எழுத வேண்டுமா? அல்லது சுருக்கமாக எழுதினால் போதுமா? என்பது போன்ற விவரங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பீர்கள். 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மிகவும் பின் தங்கியவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வழிகாட்ட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்? தேர்வு அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது பற்றி மாணவர்களுக்கு கனிவோடு சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் பத்து மாத உழைப்புக்கு பலன் கிடைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேர்வு சமயங்களில் மாணவர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நோய், நொடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு முந்தையை நாள் புதிதாக எதுவும் படிக்காமல் தாங்கள் படித்ததை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். தேர்வு மையத்துக்கு 15 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கூறும் அறிவுரைபடி நடந்துகொள்ள வேண்டும். எவ்வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல், தாங்கள் படித்ததை வைத்து திறமையாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை மட்டும் எழுத வேண்டும். விடுபடாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவை இல்லாத வண்ண மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. குறித்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கி, குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும். தேர்வு எழுதி முடித்தபிறகு தாங்கள் எழுதிய விடை சரியானதா? தவறானதா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவே கூடாது. மாறாக, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. இதே போல தேர்வறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு தேவையில்லாத அச்சத்தை, இடையூறை உண்டு பண்ணக்கூடாது. சந்தேகப்படும் மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து பேச வேண்டும். மாணவர்கள் அமைதியாக தேர்வு எழுதி முடிக்க வேண்டும். இது தேர்வறை கண்காணிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. எனவே, அரசு பொதுத்தேர்வு என்பது அரசு அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில், பொறுப்பில் தான் அமைந்துள்ளது. தேர்வு சிறப்பாக அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியோடு பொதுத்தேர்வை எதிர்கொள்ளட்டும். கல்வியாளர் ஆர்.லட்சுமிநாராயணன் |

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு | முறைகேடுகள் நடந்ததாக கூறி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. சிவகங்கையைச் சேர்ந்த இளமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தேர்வில் முறைகேடு தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடந்தது. அந்த தேர்வை நானும் எழுதினேன். பின்னர் நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. இந்தநிலையில் விடைத்தாள்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அந்த பணிகளுக்கான மறுதேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் அந்த தேர்வை எழுதியுள்ளனர். ஆனால் 200 பேரின் விடைத்தாள்களில் மட்டும் முறைகேடுகள் நடந்துள்ளன. தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல அதுவும் தேர்வு எழுதியதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பதும் உறுதி ஆகியுள்ளது. தவறு செய்த 200 பேருக்காக தேர்வு எழுதிய அனைவரையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி நடந்த தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மறுதேர்வுக்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். தேர்வு எழுதிய எனக்கு பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. அரசு பதில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறைத்தலைவர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டதன் காரணமாக தான் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்வை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று கூறப்பட்டு இருந்தது. ரத்து செய்தது செல்லாது இதை நீதிபதி ஏற்கவில்லை. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- 'தற்போது மேற்கண்ட தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது வினாத்தாள்களிலோ, விடைத்தாள்களிலோ இல்லை. மதிப்பீடு செய்வதில் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே தவறு செய்தவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். எனவே மேற்கண்ட தேர்வை தமிழக அரசு ரத்து செய்து வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தனியாக கண்டறிவது, விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வது, சான்றிதழ் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுக்க வேண்டும்' இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார். | SITE GUIDE

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர் மாணவிகள். மேலும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 682 பேர் எழுதுகின்றனர். இவர்களில் திருநங்கை 2 பேர். பிளஸ்-2 தேர்வை சுயநிதி பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 439 பேர் எழுத உள்ளனர். இந்த ஆண்டு முதன் முறையாக பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி முடிவடைகிறது. தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 பேர் எழுதுகிறார்கள். 1,759 பேர் தனித்தேர்வர்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 80 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 81 ஆயிரத்து 361 பேர் மாணவிகள். தேர்வு குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறியதாவது:- தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் 6 தேர்வுகளை எழுத முடியாது. ஆள் மாறாட்டம் செய்தால் போலீசில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். தேர்வுக்கூடத்துக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரக்கூடாது. செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டுவரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். | SITE GUIDE

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு. 2018 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

TRB ANNUAL PLANNER 2018 - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் தீவிரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் ஆசிரியர் பதவிகளில் நிரப்பப்படும் காலியிடங்கள் எண்ணிக்கை, அதற்கான அறிவிப்பு வரும் நாள், எழுத்துத் தேர்வு மற்றும் தேர்வு முடிவு நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணை (Annual Planner) வெளியிடும் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளில் சேர விரும்புவோர் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும். அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர், வேளாண் ஆசிரியர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய பதவிகளில் 6,390 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. சிறப்பு ஆசிரியர் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டது. தேர்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்த நவம்பரில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 3 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. வேளாண் ஆசிரியர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பே வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஜனவரியில் வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஜனவரியில் கூறினார். ஆனால், இன்னும் அட்டவணை வெளியிடப்பட வில்லை. இதனால், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் அலுவலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ளது. சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பதை அறிந்துகொள்ள தினமும் ஏராளமானோர் இங்கு வந்து விசாரித்துவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''2018-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட இதர தேர்வாணையங்களின் தேர்வு நாள் குறித்த விவரங்களை ஆய்வு செய்துவருகிறோம். வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்'' என்றனர். கடந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெற்ற உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வேளாண் ஆசிரியர், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் புதிய அட்டவணையில் முதலில் இடம்பெறும் என தெரிகிறது. | DOWNLOAD

TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஏப்ரல் மாத இறுதிக்குள் 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி கடந்த 20.7.2017 அன்று தொடங்கப்பட்டது. 20.11.2017 அன்று வரைவு பாடத்திட்டம் தயாராகிவிட்டது. தமிழக அரசு எவ்வளவு விரைவாக செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். பொதுவாக, மத்திய அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது என்றால் 2 ஆண்டுகள் ஆகும் என்று சொல்வார்கள். வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ள நிலையில், தற்போது ஒன்றாம் வகுப்புக்கும் 9-ம் வகுப்புக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அச்சிடும் பணிக்காக அதற்கான குறுந்தகடுகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 6, 11-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்துக்கான குறுந்தகடுகள் இன்னும் 15 நாளில் தயாராகும். எனவே, 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். மாணவர்களின் எதிர்கால நலனையும் பெற்றோரின் விருப்பத்தையும் மனதில்கொண்டுதான் பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 'நீட்' நுழைவுத்தேர்வில் பிளஸ் 1 வகுப்பில் இருந்து ஏராளமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இல்லாத காரணத்தால் மாணவர்கள் அப்பாடங்களை சரியாக படிக்கவில்லை. எனவேதான். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தடுமாறிப்போய்விட்டார்கள். புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைக்கல்வியில் பொதுப்பிரிவில் 26 பாடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 12 பாடங்களும், 1,6,9 வகுப்புகளில் 14 பாடங்களும் இடம்பெறும். சிறுபான்மை மொழிப்பாடங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 174 பாடப்புத்தகங்கள் இருக்கும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்விகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். | DOWNLOAD

ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது

ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சென்னையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டை நோக்கி மறியல் போராட்டம் பிப்ரவரி 21-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜாக்டோ-ஜியோ சார்பில் தாஸ், மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், அன்பரசு உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடினார்கள். பின்னர் அவர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். பிறகு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கோட்டை நோக்கி மறியல் செய்ய காலை 11.20 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை செல்லவிடாமல் தடுக்க போலீசார் இரும்பு வேலி அமைத்து இருந்தனர். இரும்பு வேலியை மீறி கோட்டை நோக்கி செல்ல முயன்ற 3 ஆயிரம் பேர்களை ஏற்கனவே தயாராக வைத்திருந்த பஸ்களில் கைது செய்து ஏற்றிச் சென்றனர். முன்னதாக மறியல் போராட்டத்தின் போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:- மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமல்படுத்தும்போது 21 மாதங்கள் விட்டுப்போனது. எனவே நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும். 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். ஆனால் அமல்படுத்தவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.20 ஆயிரம் கோடி என்னாவாயிற்று?. அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த பணியில் ஜாக்டோ- ஜியோ சார்பில் 50 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரஉள்ளது. அந்ததேர்தலிலும் நாங்கள் தான் பணியாற்ற உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். தமிழக அரசு உடனே எங்களை அழைத்துப்பேச வேண்டும். பேசும் வரை தினமும் தொடர் மறியல் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்க வில்லை என்றால், போராட்டம் வேறு விதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். | FIND YOUR NEEDS HERE