இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்

இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம் 
​இந்திய ரயில்வே மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. தற்போது ரயில்வேயில் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ரயில்வே தேர்வு செய்ய உள்ளது. இந்த 90 ஆயிரம் இடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் விளம்பரம் செய்தது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் எதிர்பார்க்காத வகையில் இதுவரை இரண்டரை கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் அஷ்வனி லோஹானி கூறுகையில், ''கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பணியில் இருந்து ஏராளமானோர் ஓய்வு பெற்ற நிலையில், புதியவர்களை தேர்வு செய்ய முடிவு செய்தோம். 90 ஆயிரம் பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களை தேர்வு செய்வது சவாலான பணிதான். என்றாலும் திறமையானவர்களை தேர்வு செய்வோம்'' என்றார். இரண்டரை கோடி பேர் என்பது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையைவிட அதிகம். 90 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவிபெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுநேர காவலாளி ஆகிய பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்காததால் 4 பேரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், மனுதாரர்களின் நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டார்.

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும் | 
புதிய பாடத்திட்டத்தில் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும். மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும்

வினாத்தாள் வெளியான விவகாரம்: தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் | 
தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 12-ம் வகுப்புக்கான பொருளாதார தேர்வு கடந்த 26-ந்தேதி நடந்தது. இதைப்போல 10-ம் வகுப்பு கணித தேர்வு 28-ந்தேதி நடந்தது. இந்த 2 தேர்வுகளுக்கான வினாத்தாளும், தேர்வு தொடங்குவதற்கு முன்னரே வெளியானது. இதை உறுதி செய்த சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம், 2 தேர்வுகளையும் ரத்து செய்தது. இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அதன்படி ரத்துசெய்யப்பட்ட 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நடைபெறுவதாக மத்திய இடைநிலை கல்வி செயலாளர் அனில் ஸ்வரூப் நேற்று கூறினார். அதேநேரம் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வு குறித்து அவர் கூறுகையில், '10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வை பொறுத்தவரை, அந்த வினாத்தாள் கசிவானது டெல்லி மற்றும் அரியானாவுடனேயே மட்டுப்படுத்தப்பட்டது. எனவே மறுதேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த 2 மாநிலங்களில் மட்டுமே நடத்தப்படும். அது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். அப்படி மறுதேர்வு நடத்துவதாக இருந்தால், அது ஜூலை மாதத்தில் நடத்தப்படும்' என்றார். இதைப்போல இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்று கூறிய அனில் ஸ்வரூப், எனவே அங்கும் மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவித்தார். உள்நாடு மற்றும் வெளிநாடு வினாத்தாள்களுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு எனவும் அவர் கூறினார். இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை வந்தது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை' என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு உருவாக்கப்பட்டு உள்ள தேசிய திறனாய்வு நிறுவனத்துக்கு (என்.டி.ஏ.) முதல் இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வினீத் ஜோஷியை மத்திய அரசு நியமித்து உள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ., ஏ.ஐ.சி.டி.இ. போன்ற அமைப்புகள் நடத்தி வந்த மேற்படி நுழைவுத்தேர்வுகளை இனிமேல் இந்த தேசிய திறனாய்வு நிறுவனமே நடத்தும். இதற்காக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அமைப்புகளை தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து விடுவிப்பதுடன், மாணவர்களின் திறன்களை கண்டறியும் வகையில் தேர்வுகளில் அதிக நம்பகத்தன்மை, தரநிலை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை என்.டி.ஏ. மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு

விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு   
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:- 2009-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவில் எந்த வித நடைமுறையும் பின்பற்றாததால் ஒரே பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை விட முதுநிலை பட்டதாரிகள் மொத்த ஊதியம் ரூ.200 குறைவாக இருந்தது. 8-வது ஊதியக்குழு அமல்படுத்திய பின் பட்டதாரி ஆசிரியர்களை விட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.3 ஆயிரம் குறைவாக பெறுகிறார்கள். இந்நிலையை போக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு கொடுப்பது போல அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்து 150 வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை 'லேமினேசன்' செய்ய அரசு ஆலோசனை | 
புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை 'லேமினேசன்' செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- படங்கள் அதிகரிப்பு வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும். லேமினேசன் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை 'லேமினேசன்' செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். | DOWNLOAD

அடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

அடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல் | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரிக்கும் பாட புத்தகங்களில் அடுத்த ஆண்டு (2019-20) முதல் கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவிலான "கியூ ஆர் கோடு" என்ற புதிய வசதி இடம்பெறும் என்றும், நவீன கேமரா செல்போன் மூலம் அந்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டி சுமை ரூ.6,600 கோடியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.4½ லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ரூ.7½ லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கான வட்டி சுமையை அரசு ஏற்கும் என்று கூறினார். மேலும் கல்விக்கடன் பெறும் மாணவர்கள், படிப்பை முடிக்கும் காலத்துடன் மேலும் ஒரு ஆண்டு வரை கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவேண்டியது இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். அவ்வாறு பள்ளிகளில் சேர அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே மாதம் 18-ந்தேதி கடைசிநாள் ஆகும். தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும். வட்டார வளமையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை மாவட்டம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல் | அட்டை வடிவிலான பஸ் பாஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தக வடிவிலான பஸ் பாஸ் வழங்கக்கோரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: க.ஸ்ரீபரத்G_SRIBHARATH சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை யில் சிறப்பாசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலே நடைபெற்று வந்தது. தற்போதுதான் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வு முடிந்து, உத்தேச விடைகளும் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு, 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சிறப்பாசிரியர் தேர்வெழுதிய சுமார் 200 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்களன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறப்பாசிரியர் தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, "தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் பட்சத்தில், `ஒரு காலியிடத்துக்கு 2 பேர்' என்ற விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு


ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு | தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன்படி விதித்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தில் முகவரி மற்றும் வயது சான்றாக 'ஆதார் அட்டை' சமர்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், உரிமத்தில் விலாச மாற்றம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு வெவ்வேறு படிவங்கள் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது, தற்போது அந்த அனைத்து பணிகளையும் ஒரே படிவத்தில் (படிவம்-2) பூர்த்தி செய்ய திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் பொதுமக்கள் ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது

வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது | அரசு பள்ளிகளில் தற்காலிகமாக வேலைபார்க்கும் பள்ளி ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.66 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டனர். பாலகுமார்-கலையரசி சென்னை திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 47). இவரது மனைவி கலையரசி (35). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற ஆசிரியர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ரூ.66 லட்சம் மோசடி நான் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். என்னை போல தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பாலகுமாரும், அவரது மனைவி கலையரசியும் தங்களுக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், தற்காலிக ஆசிரியர் வேலையை நிரந்தரமாக்கி தருவதாகவும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி நானும், தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் 75 ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ரூ.66 லட்சம் பணம் வசூலித்து, பாலகுமாரிடம் கொடுத்தோம். அவர் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை பெற்றுத்தரவில்லை. ரூ.66 லட்சத்தையும் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி | வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. தேர்வு கடந்த 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. 10-வது வகுப்பு தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 10-ம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியானது கடந்த 26-ந் தேதி, 12-வது வகுப்புக்கு பொருளாதார தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதாக வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. ஆனால், அதை சி.பி.எஸ்.இ. மறுத்தது. தாங்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் சரிபார்த்து விட்டதாகவும், வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று 10-ம் வகுப்பு இறுதி தேர்வாக கணித தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த தேர்வின் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக செய்தி பரவியது. மறுதேர்வு இதை சி.பி.எஸ்.இ.யும் உறுதி செய்துள்ளது. மேற்கண்ட 2 தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும் அறிவித்தது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கூறியிருப்பதாவது:- சில குறிப்பிட்ட தேர்வுகளில் நடந்த நிகழ்வுகளை சி.பி.எஸ்.இ. கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ. தேர்வுகளின் புனிதத்தன்மையை கட்டிக் காக்கவும், மாணவர்களுக்கு நியாயம் வழங்கவும் 10-வது வகுப்பு கணிதம், 12-வது வகுப்பு பொருளாதாரம் ஆகிய தேர்வுகளை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதியும், இதர விவரங்களும் இன்னும் ஒரு வாரத்தில் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.நீதீமீ.ஸீவீநீ.வீஸீ) அறிவிக்கப்படும். இவ்வாறு சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார். அதிர்ச்சி அதே சமயத்தில், 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:- நாங்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினோம். யாரோ செய்த தவறுக்காக, மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? வினாத்தாளை வெளியிட்டவர்களை கடுமையாக தண்டிக்கட்டும். ஆனால், செய்யாத தவறுக் காக மாணவர்களும் தண்டிக்கப்படுவது, துரதிருஷ்ட வசமானது. 10-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது. பெரும்பாலானோர் நன்றாக எழுதினோம். இனிமேல், மறுதேர்வு வினாத்தாள் எப்படி இருக்குமோ தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். சில மாணவர்கள், கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வதற்காக, ரெயில் டிக்கெட் பதிவு செய்து வைத்திருந்தனர். மறுதேர்வு அறிவிப்பால், அவர்கள் ஊருக்கு செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வினாத்தாள் வெளியானதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- மாணவர்களும், பெற்றோரும் தேர்வுக்கு எப்படி கஷ்டப்பட்டு தயாராகி இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். எனவே, வினாத்தாள் வெளியானது கவலை அளிக்கிறது. டெல்லியில் ஒரு கும்பல், ஏதோ திட்டத்துடன், வேண்டுமென்றே இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான டெல்லி போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அக்கும்பல் பிடிபட்டு, சட்டப்படி தண்டிக்கப்படும். எனது அமைச்சகமும் உள்மட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. திங்கட்கிழமையில் இருந்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய நடைமுறை புகுத்தப்பட உள்ளது. எனவே, இனிமேல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாது. இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி பேசியது பற்றி கேட்டதற்கு, "மோடிக்கு எல்லா தகவல்களையும் கொடுத்துள்ளேன். மன உளைச்சல் இல்லாத தேர்வுமுறை பற்றி மோடி எப்போதுமே விவாதிப்பார். அவருக்கு இது முக்கியமான பிரச்சினை" என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. கடும் எதிர்ப்பு இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் நடப்பதால், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் மசோதா, கடந்த ஜனவரி 2-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா (ஆயுஷ்) ஆகிய மாற்றுமுறை மருத்துவர்கள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற படிப்பை முடித்த பிறகு, ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்தன. இதனால், அம்மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நிலைக்குழுவின் ஆய்வு அறிக்கை, கடந்த 20-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வு நடத்தும் முறையை கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை ஒரேமாதிரியான தேர்வாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. படிப்பு முடிந்து வெளியேறும் தேர்வு என்பதால், இந்த தேர்வு, 'தேசிய வெளியேறும் தேர்வு' என்று அழைக்கப்படும். அத்துடன், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய இத்தேர்வு ஒரு திறனறி தேர்வாகவும் கருதப்படும். ஆயுஷ் மருத்துவர்களுக்கு தடை மேலும், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' முடித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் முடிவை மாநில அரசுகளிடமே விட்டுவிட தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், போலி டாக்டர்களுக்கு ஓராண்டு வரை ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தில், மாநில அரசு பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 6 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட முடிவுகளை செயல்படுத்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

GO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. | DOWNLOAD

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு.

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு. | 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும் பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது. இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும். பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் 'கியூ ஆர்' எனப்படும் 'கியூக் ரெஸ்பான்ஸ் கோட்' அச்சிடப்படுகிறது. அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து செல்போனில்பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும் குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், 9, 10, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேரும். வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது.

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன்காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரிமானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார். இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது. இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது. இதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன்ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல் | வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார். நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முனைந்து வருகிறது. இதன் பொருட்டு வருங்கால வைப்புநிதி நிறுவனமும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதமில்லாத பரிவர்த்தனையை வழங்க முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து வைப்புநிதி சந்தாதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணை செயல்படுத்திய பிறகு வங்கிக்கணக்கு, ஆதார் எண் மற்றும் பான் எண்ணை (வ.வை.நி.நி.) உறுப்பினர் தளத்தின் மூலம் சமர்ப்பித்து தனது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் ஒப்பம் மூலம் வரும் 31.3.2018க்குள் செயலாக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது குறைபாடோ இருப்பின் வைப்புநிதி அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் முதல் கட்டமாக கோரிக்கை விண்ணப்ப படிவங்கள் வரும் 1.4.2018 முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தாவை உரிய காலத்தில் செலுத்தி நிலுவையில்லா நிறுவனம் என்ற நிலையை அடைவதற்காக தனிக்குழு உதவி ஆணையர் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் வைப்பு நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கையான வங்கிக்கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்தல், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுநாள் வரை பி.எப். சட்டதிட்டங்களுக்குள் தங்களை இணைத்து கொள்ளாத தகுதியான நிறுவனங்கள் உடனடியாக இதில் இணைத்து தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் உறுதுணையாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க விருப்பப்பட்டால் நாகர்கோவில் வைப்பு நிதி மக்கள்தொடர்பு அதிகாரியிடம் தகுந்த ஆதாரங்களுடன் கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உறுப்பினர்கள், சந்தாதாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களையும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLASS 11 PHYSICS EM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD - DHANASEKARAN

CLASS 11 PHYSICS EM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD - DHANASEKARAN | DOWNLOAD

CLASS 11 PHYSICS EM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD - SMART PHYSICS

CLASS 11 PHYSICS EM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD - SMART PHYSICS | DOWNLOAD

CLASS 12 BIOLOGY ZOOLOGY FULL PORTION ONE MARKS TAMIL-ENGLISH MEDIUM BY N.RAJKUMAR

CLASS 12 BIOLOGY ZOOLOGY FULL PORTION ONE MARKS TAMIL-ENGLISH MEDIUM BY N.RAJKUMAR | DOWNLOAD

CLASS 11 PHYSICS TM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD | அ.அபிதா பேகம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரூர்.

CLASS 11 PHYSICS TM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD | அ.அபிதா பேகம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரூர். | DOWNLOAD

CLASS 12 BIOLOGY BOTANY TAMIL MEDIUM ONE MARKS WITH ANSWERS - C.KISHORE KUMAR, M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil.,M.Sc(YOGA).,B.A(HINDI)., PG ASST IN BOTANY, GOVT.HR.SEC.SCHOOL, THATTAPPARAI, GUDIYATTAM, VELLORE DIST-632602, CELL: 9894807882

CLASS 12 BIOLOGY BOTANY TAMIL MEDIUM ONE MARKS WITH ANSWERS - C.KISHORE KUMAR, M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil.,M.Sc(YOGA).,B.A(HINDI)., PG ASST IN BOTANY, GOVT.HR.SEC.SCHOOL, THATTAPPARAI, GUDIYATTAM, VELLORE DIST-632602, CELL: 9894807882 | DOWNLOAD

CLASS 11 ECONOMICS EM (MARCH/APRIL) 2018 EXAMINATIONS (+1) ECONOMICS ANSWER KEY DOWNLOAD - MR.MOHAN.R PGT.ECONOMICS

CLASS 11 ECONOMICS EM (MARCH/APRIL) 2018 EXAMINATIONS (+1) ECONOMICS ANSWER KEY DOWNLOAD - MR.MOHAN.R PGT.ECONOMICS | DOWNLOAD

CLASS 12 ACCOUNTANCY TM TENTATIVE KEY (TM) MARCH 2018 M.MUTHUSELVAM PG ASST MLWA HSS MADURAI -625001 CELL:9842104826 | DOWNLOAD

CLASS 12 ACCOUNTANCY TM TENTATIVE KEY (TM) MARCH 2018 M.MUTHUSELVAM PG ASST MLWA HSS MADURAI -625001 CELL:9842104826 | DOWNLOAD

CLASS 12 COMPUTER SCINCE EM CHAPTERWISE_IMPARTANT_ONEMARK&IMPORTANT (c) SOWDAAMBIKAA MATRIC. HR.SEC.SCHOOL, THOTTIYAM, TRICHY

CLASS 12 COMPUTER SCINCE EM CHAPTERWISE_ IMPORTANT_ ONEMARK&IMPORTANT © SOWDAAMBIKAA MATRIC. HR.SEC.SCHOOL, THOTTIYAM, TRICHY | DOWNLOAD

PG-TRB HISTORY -IMPORTANT QUESTIONS BANK WITH ANSWERS-PART-1 - KUMAR

PG-TRB-HISTORY -IMPORTANT QUESTIONS BANK WITH ANSWERS-PART-1 - KUMAR M.A.BEd,D.T.Ed,HDCA. (ENGLISH TEACHER), SHREE BCR MATRICULATION.HR.SEC. SCHOOL KARIMANGALAM, DHARMAPURI. 9994098972.| DOWNLOAD

CLASS 10 MATHS-EM-IMPORTANT QUESTIONS-AUTHOR-MR.P.MURALITHARAN

CLASS 10-MATHS-EM-IMPORTANT QUESTIONS-AUTHOR-MR.P.MURALITHARAN | DOWNLOAD

CLASS 12 HISTORY TM STUDY MATERIALS - 1,3.6 MARKS, TIME SCALE AND BLUE PRINT - DOWNLOAD

CLASS 12 HISTORY TM STUDY MATERIALS - 1,3.6 MARKS, TIME SCALE AND BLUE PRINT - DOWNLOAD PREPARED BY S.SAKTHIVEL, P.G.ASSIST(HISTORY),GHSS,VADALUR PUDUNAGAR | DOWNLOAD

CLASS 12 ACCOUNTANCY TM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD - S.KARUNAGARANPer Child Expenditure தமிழக பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை பற்றிய விவரம் - GOVERNMENT GAZETTE வெளியீடு


தமிழக பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை பற்றிய விவரம் - GOVERNMENT GAZETTE வெளியீடு - நாள் 24-07-2017. GOVERNMENT OF TAMIL NADU 2017 [Regd. No. TN/CCN146712012.14. Dis No.197/2009. TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY No. 246] CHENNAI, MONDAY. JULY 24. 2017 Aacli 8. Hevilambi. Thiruvalluvar Aandu-2048 Part II—Section 2 Notifications or Orders of Interest to a section of the public Issued by Secretariat Departments. NOTIFICATIONS BY GOVERNMENT SCHOOL EDUCATION DEPARTMENT SPECIFIED THE PER CHILD-EXPENDITURE INCURRED ON EDUCATION BY THE STATE OF TAMIL NADU FOR THE YEAR 2016-2017 UNDER THE ACT ;6 a (M3) No 139. School Educabon (PL2). 27th June 2017 4a0 71 covavadt „wool-2048.1 No. 1142p5E/579(0/2017.— Under sub section 2 of Section 12 of the Right of Children to Free and Compulsory Educaton Ad. 2009 (Central Act 35 of 20091. me Governor of Tame Nadu hereby speates the per-child-expert:Huns incurred on edxr..aton by the State of Tamil Nadu for the year 2016-2017 as follows.- Fhb/ Areas lin Rupees) Class 1 2 3 4 5 6 7 8 Per Child Expenditure 2538521 25414 34 2561305 25622.64 25655.10 3318226 33351 33431.03 Foy Other Areas (in rupees) Cass 1 2 3 4 5 6 7 8 Per Chic Expenditure 25155.21 25184 34 25383 05 25392 64 25425 10 32897 26 33066 33146 03 T UDHAYACHANDRAN. Secretary to Government

என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு

என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு என்ஜினீயர், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மத்திய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 244 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சர்டிபிகேசன் என்ஜினீயர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட். சுருக்கமாக சி.ஈ.ஐ.எல். என குறிப்பிடப்படும் இந்த நிறுவனம் தகவல் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்புக்கான கடலடி பைப்லைன்களை உருவாக்கிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சீனியர் டெபுடி கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி பிளானிங் என்ஜினீயர் உள்பட பல்வேறு பணிகளுக்கு 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... 139 பணியிடங்கள் உள்ள அறிவிப்பில் சீனியர் கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் பணிக்கு 54 பேரும், டெபுடி கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் பணிக்கு 21 பேரும், சீனியர் சேப்டி ஆபீசர் பணிக்கு 22 பேரும், டெபுடி பிளானிங் மேனேஜர் பணிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர், டெபுடி சேப்டி மேனேஜர், சீனியர் வேர்ஹவுஸ் ஆபீசர், டெபுடி வேர்ஹவுஸ் மேனேஜர் போன்ற பணிக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 35 முதல் 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 31-1-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 31-3-2018-ந் தேதியாகும். 105 பணிகள் மற்றொரு அறிவிப்பின்படி எஸ்.சி.எம். (காண்டிராக்ட் அண்ட் பர்ச்சேஸ்) பணிக்கு 68 பேரும், எஸ்.சி.எம். (இன்ஸ்பெக்சன், புரோகியூர்மென்ட் டெவலப்மென்ட்) பணிக்கு 32 பேரும், பிளானிங் என்ஜினீயர் பணிக்கு 5 பேரும் தேர்வு செய்யப்படு கிறார்கள். இந்த பணிகளுக்கு பட்டதாரி என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31-1-2018 தேதியில் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். இவை பற்றிய விவரங்களை http://ce-il.co.in / என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 31-3-2018-ந் தேதியாகும்.

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விரிவான விவரம்

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள் 119 காலியிடங்கள் ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் பேங்க். சுருக்கமாக எஸ்.பி.ஐ. என குறிப்பிடப்படும் இந்த வங்கி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக் கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த ஆண்டும் பல ஆயிரம் கிளார்க் பணியிடங்களையும், நூற்றுக்கணக்கான சிறப்பு அதிகாரி பணியிடங்களையும் நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சில பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு 35 பேரும், டெபுடி ஜெனரல் மேனேஜர் (சட்டம்) பிரிவில் 2 பேரும், டெபுடி மேனேஜர் (சட்டம்) பிரிவில் 82 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 25 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 52 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 31-12-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி: ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ. படிப்புடன், முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டெபுடி ஜெனரல் மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பணிக்கு சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு நேர் காணல் மூலமும், மற்ற பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் சுயவிவரப் பட்டியல், அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ், அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட அவசியமான சான்றுகள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-4-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வு உத்தேசமாக 6-5-2018 அன்று நடைபெறு கிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

சுப்ரீம் கோர்ட்டில் வேலைவாய்ப்பு

சுப்ரீம் கோர்ட்டில் வேலைவாய்ப்பு | சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அட்டன்ட், ஷேம்பர் அட்டன்ட் போன்ற பணிகளுக்கு 78 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இதில் ஜூனியர் கோர்ட்டு அட்டன்ட் பணிக்கு 65 இடங்களும், ஷேம்பர் அட்டன்ட் பணிக்கு 13 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இணைய தள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 15-4-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sci.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

இ.எஸ்.ஐ. கல்லூரியில் பேராசிரியர் பணி

இ.எஸ்.ஐ. கல்லூரியில் பேராசிரியர் பணி ‘எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’ எனப்படும் இ.எஸ்.ஐ. கழக நிறுவனம் நாடு முழுவதும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. இதனுடன் இணைந்த மருத்துவ கல்லூரி களும் செயல்படுகின்றன. தற்போது பல்வேறு இ.எஸ்.ஐ. மருத்துவமனை கல்லூரிகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 186 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐதராபாத், கர்நாடகா, டெல்லி, அரியானா, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும், ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள் விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு கடந்த ஆண்டில் தனித்தனியே அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட, புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்போது விண்ணப்பித்தவர்கள் இந்த பணிகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட தகுதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்புள்ளது. விருப்பமுள்ளவர்கள் அந்தந்த பணிக்கான தகுதி விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 2-4-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esic.nic.in/re-c-ru-it-m-ent என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

ஐ.இ.எஸ். அதிகாரி மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஐ.இ.எஸ். அதிகாரி மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு யூ.பி.எஸ்.சி. அமைப்பு, ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். அதிகாரி மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வுகளை அறிவித்துள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் ஏற்படும் உயர் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியன் பொருளாதார சேவைப் பணிகள் மற்றும் ஐ.எஸ்.எஸ். எனப்படும் இந்திய புள்ளியியல் சேவைப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றொரு அறிவிப்பின்படி புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்களுக்கான தேர்வையும் வெளியிட்டுள்ளது. ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணிகளுக்கு 46 இடங்களும், புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் போன்ற பணிகளுக்கு 70 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணிகள் ஐ.இ.எஸ். பணிக்கு 14 இடங்களும், ஐ.எஸ்.எஸ். பணிக்கு 32 இடங்களும் உள்ளன. பொருளாதாரம், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஐ.இ.எஸ். பணிக்கும், புள்ளியியல், கணித புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஐ.எஸ்.எஸ். பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். 1-8-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி, 16-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். புவி ஆராய்ச்சியாளர் பணிகள் புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான காலியிடங்களில் ஜியாலஜிஸ்ட் பணிக்கு 24 பேரும், ஜியோ பிசிக்ஸ்ட் பிரிவில் 17 பேரும், கெமிஸ்ட் 6 பேரும், ஜூனியர் 23 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை தவிர ஹைட்ராலஜிஸ்ட் பணிக்கான காலியிடங்கள் பின்னர் வெளியாகும். ஜியாலஜிகல் சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோ எக்ஸ்புளோரேசன், எம்.எஸ்சி. பிசிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஜியோ பிசிக்ஸ், அப்ளைடு ஜியோபிசிக்ஸ், எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, அனலைடிகல் கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டண விவரம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-4-2018-ந் தேதியாகும். இவைகளுக்கான தேர்வு 29-6-2018-ந் தேதி நடைபெறு கிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுகிற வகையில் அமைந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக இருக்கும். இது திருப்பூர் மக்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு " பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதனால் பெற்றோரும், மாணவ-மாணவிகளும் கவலை படவேண்டியது அவசியம் இல்லை" என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

CLASS 11 BIOLOGY ZOOLOGY EM COMPLETE GUIDE 2ND LESSION CELL BIOLOGY - SADHAN DHEV S

CLASS 11 BIOLOGY ZOOLOGY EM COMPLETE GUIDE 2ND LESSION CELL BIOLOGY - SADHAN DHEV S PGT ZOOLOGY ISLAMIAH MAT HIG SEC SCHOOL KILAKKARAI CELL: 9444740418 | DOWNLOAD

CLASS 12 BIOLOGY ZOOLOGY EM FULL TEST - 1-10 - SADHANDHEV PGT IN ZOOLOGY 9444740418

CLASS 12 BIOLOGY ZOOLOGY EM FULL TEST - 1-10 - SADHANDHEV PGT IN ZOOLOGY 9444740418 | DOWNLOAD

CLASS 11 COMMERCE TM MARCH 2018 ANSWER KEY - MUTHUSELVAM M


CLASS 11 COMMERCE TM MARCH 2018 ANSWER KEY - MUTHUSELVAM M | DOWNLOAD

பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!

பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும் - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்! | தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இது குறித்து பேசிய கல்வியாளர்கள், "நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு முன் கூட்டியே அறிவித்தது. ஆனால் இதற்கான ஏற்பாடுகளில் திறமையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி முன்கூட்டியே வழங்கப்படவில்லை. மிகவும் காலதாமதாகவே கேள்வித்தாள் மாதிரி வழங்கினார்கள். இதனை பயன்படுத்தி மாணவர்களை புதிய தேர்வு முறைக்கு தயார் செய்வதில் பல்வேறுவிதமான சிரமங்கள் இருந்தன. இதனால், தற்பொழுது பிளஸ் 1 மாணவர்கள் பெரும் சிரமத்துடன் தேர்வை சந்தித்துள்ளார்கள். எனவே மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள தமிழக அரசு, பிளஸ் 1 மாணவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என்றனர். 

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், "பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட தேர்வாக 100 மணி நேரம் அல்லது 15 நாட்களுக்கு அருகிலுள்ள கிராமம் அல்லது குடிசைப்பகுதியில் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடச் செய்யலாம். இதற்கு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கலாம்" என்று கூறியுள்ளார். நாட்டிலுள்ள 38,000 கல்லூரிகள் மற்றும் 8,000 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தூய்மை இந்தியா பாடத்தை கோடை விடுமுறையில் அறிமுகப்படுத்தவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது. இதை அமலாக்குவதும் வேண்டாம் என தவிர்ப்பதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் முடிவை பொறுத்தது. எனினும் இது சுயநிதிக்கல்லூரி மற்றும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களில் அரசு தலையிடும் முயற்சியாக கருதப்படுகிறது. இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சி.பி.பாம்ரி கூறும்போது, "பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகத்தில் அரசு நேரடியாக தலையிடும் செயல் இது. அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்க்கும் அமைப்பாக கல்வி நிறுவனங்கள் இருக்க முடியாது" என்றார். தூய்மை இந்தியா போன்ற சில திட்டங்களில் சிறப்பு மதிப்பெண் அளித்தால் ஒழிய மாணவர்கள் அதில் கவனம் செலுத்தாத நிலையும் உள்ளது. எனவே யுஜிசி-யின் இந்தப் பரிந்துரையை வரவேற்கும் பேராசிரியர்களும் உள்ளனர்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். நீர்மோர் பந்தல் திறப்பு ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் எதிரில் அ.தி. மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளின் தகுதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 38 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.