தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க கலந்தாய்வு

தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க கலந்தாய்வு 6-ந் தேதி நடக்கிறது | தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க கலந்தாய்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அன்னை மருத்துவ கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டத்தில் அன்னை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 144 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர்கள் தங்களை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கடிதம் மத்திய அரசுக்கு வந்துள்ளது. இதில் உரிய முடிவு எடுக்க காலம் அவகாசம் தேவை’ என்று மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட்டு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியது. ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரபு மனோகர், பாதிக்கப்பட்ட 144 மாணவர்களையும் கவுன்சிலிங் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் கவுன்சிலிங் நடத்தி பாதிக்கப்பட்ட 144 மாணவர்களையும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மருத்துவ கலந்தாய்வு இதைத்தொடர்ந்து அந்த மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க கலந்தாய்வு வருகிற 6-ந் தேதி காலை 11 மணிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.

Comments