தெலுங்கு மொழியில் இருந்த பிளஸ்-1 கணக்கு வினாத்தாள் விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் பரபரப்பு

தெலுங்கு மொழியில் இருந்த பிளஸ்-1 கணக்கு வினாத்தாள் விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் பரபரப்பு | விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குயிலாப்பாளையத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-1 வகுப்பில் 290 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கணித தேர்வு நடந்தது. இதில் 2 அறைகளில் தேர்வு எழுதிய ஆங்கில வழி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், தேர்வு மைய ஆசிரியர்களிடம் கூறினர். உடனே இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. ஆங்கில மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் வினாத்தாள் இருந்தாலும், மாணவர்கள் சிரமமின்றி ஆங்கில மொழியில் தேர்வு எழுதினர். வினாத்தாள் குளறுபடி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Comments