பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 9 லட்சத்து 7 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 9 லட்சத்து 7 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை திடீர் ஆய்வு | பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார் கள். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக் கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். தனித்தேர்வர்கள் 40,686 பேர். மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2,942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கண் பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. இதுபோன்றவர்கள் 2,380 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். காலை 9 மணிக்கு பள்ளிக்கூட வளாகத்தில் இறைவணக்கம், பிரார்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரார்த்தனை முடிந்ததும் மாணவ- மாணவிகள் தேர்வு எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு 10.15 மணிக்கு தொடங்கியது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். அவருடன் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, “பிளஸ்-2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி முடிந்த பின்னர் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளன. வினாத்தாள் மையங்கள், விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பாக உள்ளன. இருந்தாலும் அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார். காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே திடீரென தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். கரூர், திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 10 பேர் காப்பி அடித்ததாக பிடிபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-வது தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி முடிவடைகிறது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||