ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர தேர்வுகால அட்டவணை வெளியீடு - அக்டோபர் 6, 7-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு

வருடாந்திர தேர்வுகால அட்டவணை வெளியீடு அக்டோபர் 6, 7-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு இந்த ஆண்டு 3,030 பணியிடங்கள் நிரப்பப்படும் இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி அக்டோபர் 6, 7-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. ஓராண்டில் என்னென்ன ஆசிரியர் பணியிடங்களுக்கு எப்போது அறிவிப்பு வெளியிடப்படும், எழுத்துத் தேர்வு, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்பன உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது. ஆனால், இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணை புதிய ஆண்டு பிறந்து 2 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் (பொறுப்பு) சீனிவாசன் நேற்று வெளியிட்டார். அதன்படி, வேளாண் ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய பதவிகளில் மொத்தம் 3,030 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 6,7-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்படும். வருடாந்திர தேர்வுகால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) காணலாம்.

Comments