AADHAAR NOT MANDATORY FOR NEET - ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ‘ஆதார் எண் கட்டாயம் அல்ல’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

AADHAAR NOT MANDATORY FOR NEET - 'நீட்' உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு 'ஆதார் எண் கட்டாயம் அல்ல' சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 'நீட்' என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுத விரும்புகிற மாணவ, மாணவிகள் ஆதார் எண் அல்லது ஆதார் பெறுவதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி சி.பி.எஸ்.இ., அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அங்கு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்-முறையீடு வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "நீட் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் அல்ல" என்று உத்தரவிட்டது. மேலும், இந்த தகவலை சி.பி.எஸ்.இ., தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments