தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் பட்ட மேற்படிப்பு தொடக்கம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் பட்ட மேற்படிப்பு தொடக்கம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் | தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதலில் 100 மாணவர்கள் பயிலும் வகையில் தொடங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் 2013-ம் ஆண்டு இது 150-ஆக உயர்த்தப்பட்டது. இந்த கல்லூரியில் இருந்து இதுவரை 1,400 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். முடித்து சென்று உள்ளனர். ஆனால் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு இல்லாத நிலை இருந்தது. இதனை போக்கும் வகையில் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, பொது மருத்துவ பிரிவில் 10 இடங்களும், அறுவை சிகிச்சை பிரிவில் 10 இடங்களும், குழந்தைகள் நலம் மற்றும் மகப்பேறு பிரிவுகளில் தலா 6 இடங்களும் என மொத்தம் 32 இடங்களுடன் இந்த கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் இந்திய மருத்துவக்குழுவால் வழங்கப்பட்டு உள்ளது. இதன்தொடர்ச்சியாக பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நடைபெறும். இதன்மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மேலும் சிறந்த சிகிச்சையை பெற முடியும். மேற்கண்ட தகவல் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments