ஆசிரியர் தகுதித்தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு இடைநிலை பயிற்சி முடித்தவர்களும், பட்டபடிப்புடன் பி.எட். முடித்தவர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக பணி அமர்த்தப்படுகிறார்கள். இது தொடர்பான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. இதன்படி இதற்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வுகள் முறையே அக்டோபர் 6, 7-ந் தேதிகளில் நடைபெறும். தேர்வு முடிவு நவம்பரில் வெளியாகிறது. ஆனால் காலி பணியிடங்கள் எத்தனை என்று தெரிவிக்கப்படவில்லை.

Comments