TNPSC - COUNSELLING FOR CCSE - II (GROUP II SERVICES) |கலந்தாய்வு 19.03.2018 முதல் 03.04.2018 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

TNPSC - COUNSELLING FOR CCSE - II (GROUP II SERVICES) |கலந்தாய்வு 19.03.2018 முதல் 03.04.2018 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2014 – 2016 - இல் அடங்கிய நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 30.04.2015-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21.08.2016 அன்று நடைபெற்றது. இப்பதவிகளுக்கான நேர்காணல் 22.01.2018 முதல் 19.02.2018 வரை நடைபெற்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் 20.02.2018 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 1094 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு நேர்காணலில் கலந்து கொண்டு தகுதி பெற்ற 2025 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தரவரிசை பட்டியல் 07.03.2018 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு 19.03.2018 முதல் 03.04.2018 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக்கடிதம் வரப்பெறாதவர்கள் அதனை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தரவரிசை மற்றும் பதவிகளுக்கான கல்வித்தகுதி காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட அனைவரும் மேற்படி பணியிடங்களுக்கு தெரிவு பெறுவதற்கான எவ்வித உரிமையையும் கோர இயலாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். பதவிவாரியாகவும், இனவாரியாகவும் உள்ள காலிப்பணியிட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் தினமும் கலந்தாய்வு முடிந்தவுடன் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிட விவரங்களை தெரிந்து கொண்டு கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission vide its Notification dated 30.04.2015 invited applications for selection of candidates for appointment by direct recruitment to the posts included in Combined Civil Services Examination-II (Interview Posts) (Group-II Services) for the year 2014-2016. The Main Written Examination was held on 21.08.2016. The Oral Test was conducted from 22.01.2018 to 19.02.2018 and the marks obtained by the candidates both in the Written Examination and at the Oral Test were hosted at the Commission's website on 20.02.2018. To fillup 1094 vacancies, 2025 eligible candidates who had attended the Oral Test are provisionally admitted for counselling. The Ranking list of candidates has been hosted in Commission's website on 07.03.2018. Counselling will be held from 19.03.2018 to 03.04.2018 at the office of Tamil Nadu Public Service Commission. The date and time of counselling are informed to all the candidates by means of notice of counselling, SMS and E-mail. The candidates who have not received the notice of counselling are requested to download the same from the Commission's web site. If the candidates fail to appear for counselling on the scheduled date, they will not be given any further chance to appear for the same. The candidates will be admitted to counselling only based on their Rank, Educational qualification and Vacancies position. Therefore, it is instructed that the provisional admission of the candidates to the counselling does not confer any right for selection. The updates with regard to the post wise / community wise vacancies are available in the Commission's web site viz www.tnpsc.gov.in After confirming the vacancies candidates are requested to attend counselling on the Communicated date. Secretary Tamil Nadu Public Service Commission

Comments