TNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 06.08.2017 மு.ப. அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணி-II (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) (Group-II A Services)ல் அடங்கிய பதவிகளுக்கான 1953 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 5,56,189 விண்ணப்பதாரர்களில் 5,56,136 தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலை (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the 1953 vacancies in the posts included in Combined Civil Services Examination-II (Non-Interview Posts) (Group-II A Services) was held on 06.08.2017 FN conducted by the Tamil Nadu Public Service Commission. Out of 5,56,189 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 5,56,136 Candidates is hosted in the Commission's Website "www.tnpsc.gov.in". The Overall Rank, Communal category wise Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, Educational qualification, technical qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission's website. R.SUDHAN, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS | RESULT

Comments