2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய எளிமையான படிவம் அறிமுகம்

நடப்பு நிதியாண்டு 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு எளிமையாக்கப்பட்ட ஒருபக்கம் கொண்ட ‘படிவம்-1’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: கடந்த 2017-18-ன் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்காக, ஒருபக்கம் கொண்ட எளிமையாக்கப்பட்ட ‘படிவம்-1’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 3 கோடி பேர் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர். இதேபோல், நடப்பு 2018-19ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கும் எளிமையாக்கப்பட்ட ஒருபக்கம் கொண்ட ‘படிவம்-1’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், ஊதிய வருமானம், ஒரு வீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளவர்கள் ஆகியோர் இந்த படிவம்-1-ஐ தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு வீடு வைத்திருப்பவர்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறாமல் இதர வருமானம் பெறுபவர்கள் படிவம்-2ஐ பயன்படுத்த வேண்டும். மேலும், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படிவம்-3 அல்லது படிவம்-4ஐ தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மின்னணு முறையில் இந்தப் படிவங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். அதேசமயம், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உடைய தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரீபண்ட் கோராதவர்கள் ஆகியோர் வழக்கம்போல பேப்பர் வடிவத்தில் தாக்கல் செய்யலாம். DOWNLOAD

Comments