அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
 |DOWNLOAD |

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - ஜக்கையன் கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - ஜக்கையன் கோரிக்கை மானியக் கோரிக்கை விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஜக்கையன் (கம்பம் தொகுதி) பேசும்போது, “பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 என்ற வகையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை ரூ.15 ஆயிரம் என்ற அளவுக்காவது உயர்த்த வேண்டும். மேலும், தொலைதூரத்தில் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அதை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்” என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் வீதம் தினமும் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறார்கள். அவர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை” என்றார்.

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, வெயிலின் தாக்கத்தால் ஜூன் 1-ம் தேதிக்குப் பதில் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 1-ம் தேதி (நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9, 10-ம் வகுப்புகளுக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் சீருடைகள் மாற்றப்பட்டிருப்பதால் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் புதிய சீருடையில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு அமல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளின்போது ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை ஒழிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வசதியும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் தொடர்பாக 24,731 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது மொழிப் பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) தாள்-1, தாள்-2 என்றிருப்பதை ஒரே தாளாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுக்குமாடிக் கட்டிடம் அமைக்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோ-மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.9 கோடி செலவில் நிறைவேற்றப்படும். அரசுப் பள்ளிகளில் ரூ.6 கோடியே 23 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் தங்கள் பாடங்களோடு திறன்சார்ந்த கல்வி பெறும் வகையில் 2018-19 கல்வி ஆண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை கன்னிமாரா நூலகம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும். சிறந்த நூலக சேவை வழங்கும் வகையயில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3 நூலகங்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மாதிரி நூலகங்களாக மேம்படுத்தப்படும். மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஒன்றியத் தலைமை இடத்திலும் ரூ.1 கோடி செலவில் ஆதார் சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க, 32 மாவட்டங்களிலும் ரூ.92 லட்சம் செலவில் விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் அமைக்கப்படும். பார்வையற்றோருக்காக மாவட்ட மைய நூலகங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் பேசும் கருவி, பேசும் புத்தகம் உள்ளிட்ட பிரத்யேக வசதிகளுடன் ரூ.96 லட்சம் செலவில் தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், புதிய படைப்புகளை உருவாக்கவும் அரசுப் பள்ளிகள் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும். நூலகர்களை கவுரவிக்க வழங்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நூலகங்களில் வாசகர்களின் வருகையை அதிகரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். பாடப்பிரிவுகள் சார்ந்த 5 ஆயிரம் வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டு அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்.

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு

சமூக நலத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க திட்டம் சட்டப்பேரவையில் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தை மேட்டூர் எம்எல்ஏவும் கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை தொடங்கி வைத்தார். எஸ்.செம்மலை (மேட்டூர்): குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி சட்டம் (ஆர்டிஇ) தமிழகத்தி்ல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது. அரசு பள்ளிகள் இல்லாத இடத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளை அணுக முடியாத இடத்தில் இதை அனுமதிக்கலாம். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: மத்திய அரசு இந்த ஆர்டிஇ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கிராமப்புற நலிந்த பிரிவினருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிக்கும் விதமாக இத்திட்டம் உள்ளது. அதே நேரம், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ் வழங்கும் தொகையை நமக்கு வழங்கவில்லை. எதிர்காலத்தில் இத்திட்டத்தின்கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அரசு பரிசீலித்து வருகிறது. தங்கள் குழந்தை ஆங்கிலம் கற்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புவதால், தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். செம்மலை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைக் கொண்டு வந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கொண்டுவருவது குறித்து, சமூக நலத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். அங்கன்வாடி மையங்களில் சென்று ஆய்வு நடத்தியுள்ளோம். அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்புக்கு 5 வயதில் சேர்க்கப்படுகிறது. எனவே, அங்கன்வாடி மையங்களில் 3 வயது வரை விடுத்து, 4, 5 வயதுடையவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். செம்மலை: உடனடியாக இதற்கான நடவடிக்கையை அமைச்சர் எடுக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்ற வேண்டும். ஆங்கிலம், தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நான் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர், தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளதால் 16 மணி நேரம் உழைக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். செம்மலை: ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி தேர்வுக்காக ஒதுக்கப்படும் 50 நாட்களை 25 ஆகக் குறைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வந்தால்,பணி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். நல்லாசிரியர் விருதிலும் முன்னுரிமை அளிக்கலாம்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தகவல் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகம்தான் உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை தேசிய அளவில் 25.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 46.9 சதவீதமாக இருந்து வருகிறது. கடந்த 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை புதிதாக 65 அரசு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 7 ஆண்டுகளில் 1,732 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் காவலர்கள், பெருக்குபவர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்ட 586 பணியாளர்கள் வெளிமுகமை (அவுட்-சோர்சிங்) மூலம் நிரப்பப்படுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.400-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கப்படும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட்-1-ல் 1,883 கவுரவ விரிவுரையாளர்களும், ஷிப்ட்-2-வில் 1,661 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் நீண்ட கால பணிஅனுபவத்தை கருத்தில்கொண்டு உதவி பேராசிரியர் பணிக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிபெறும் விரிவுரையாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு முறையான பணியிடத்தில் நியமிக்கப்படுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆங்கில விரிவுரையாளர்களின் ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி | பிளஸ்-1 பொதுத் தேர்வில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர். பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் 7-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் , தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 648 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள் ஆவர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று காலை 9 மணிக்கு அரசு தேர்வுத்துறை இணையதளங்களில் ( www.tnr-esults.nic.in, www.dge.tn.nic.in , www.dge2.nic.in) வெளியிட்டது. முதல் முதலாக அரசு பொதுத் தேர்வாக இந்த வருடம் நடத்தப்பட்டது. இதுவரை பிளஸ்-2 போல 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். மேலும் தேர்வு முடிவு வெளியிடும் தேதியையும் பல மாதங்களுக்கு முன்பே அவர் அறிவித்தார். பல கேள்விகள் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அமைந்து இருந்தன. இந்த தேர்வில் மாணவிகள் 94.6 சதவீதம் பேரும், மாணவர்கள் 87.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-1 பொதுத் தேர்வில் மொத்தம் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 600-க்கு 500-க்கு மேல் பெற்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 380 பேர். அவர்களில் மாணவிகள் 25 ஆயிரத்து 412 பேர், மாணவர்கள் 10 ஆயிரத்து 968 பேர். மொத்தம் உள்ள 7 ஆயிரத்து 70 பள்ளிகளில் 2 ஆயிரத்து 54 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கண்டுள்ளன. இதில் 188 அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்களில் அவர்களுடைய தேர்வு முடிவு விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது. அவர்கள் வீட்டில் இருந்தப்படியே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாக தேர்வு முடிவை பார்ப்பதற்காக பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தது.

பிளஸ்-1 தேர்ச்சியில் ஈரோடு முதல் இடத்தை பிடித்தது

பிளஸ்-1 தேர்ச்சியில் ஈரோடு முதல் இடத்தை பிடித்தது | பிளஸ்-1 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியில் ஈரோடு முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்ச்சி சதவீதம் வாரியாக விவரம் வருமாறு:- 1) ஈரோடு-97.28 2) திருப்பூர்-96.40 3) கோவை-96.19 4) விருதுநகர், கரூர்-95.70 5) நாமக்கல்-95.59 6) தூத்துக்குடி-95.42 7) நெல்லை-95.34 8) சிவகங்கை-95.12 9) தேனி-94.68 10) கன்னியாகுமரி-94.52 11) சென்னை-94.40 12) திருச்சி-93.90 13) பெரம்பலூர்-93.83 14) மதுரை-93.48 15) ராமநாதபுரம்-93.35 16) ஊட்டி-92.39 17) திண்டுக்கல்-91.72 18) தர்மபுரி-91.40 19) சேலம்-90.92 20) திருவள்ளூர்-90.85 21) தஞ்சாவூர்-90.29 22) காஞ்சீபுரம்-90.12 23) புதுச்சேரி-89.35 24) திருவாரூர்-87.64 25) கடலூர்-87.51 26) புதுக்கோட்டை-86.75 27) கிருஷ்ணகிரி-86.17 28) அரியலூர்-85.99 29) நாகப்பட்டினம்-85.82 30) திருவண்ணாமலை-85.15 31) வேலூர்-84.95 32) விழுப்புரம்-80.21

அரசு பள்ளியிலும் ஈரோடு முதல் இடம்

அரசு பள்ளியிலும் ஈரோடு முதல் இடம் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தத்தில் அனைத்து பள்ளிகளிலும் சேர்த்து தேர்வு முடிவு ஈரோடு மாவட்டம் 97.28 சதவீதம் தேர்ச்சி எடுத்து முதல் இடம் பெற்றது. மேலும் அரசு பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதத்திலும் ஈரோடு மாவட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அது பெற்றுள்ள சதவீதம் 95.60. விழுப்புரம் மாவட்டம் மொத்தத்திலும், அரசு பள்ளியிலும் கடைசியாக இடம் பிடித்துள்ளது.

முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவீதம்

முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவீதம் பிளஸ்-1 தேர்வில் முக்கிய பாடங்கள் வாரிய தேர்ச்சி சதவீதம் வருமாறு:- இயற்பியல் - 93 வேதியியல் -92.7 உயிரியல் - 96.9 கணிதம் - 95.2 தாவரவியல்-89.3 விலங்கியல்-91.8 கம்ப்யூட்டர் சயின்ஸ் -95.3 வணிகவியல் -93.7 கணக்கு பதிவியல் 93.8

அறிவியல் பிரிவில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி

அறிவியல் பிரிவில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி பிளஸ்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் அறிவியல் பாடப்பிரிவுகளில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கலைப்பிரிவுகளில் 80 சதவீதம் பேரும், தொழிற்பாடப்பிரிவுகளில் 82.03 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் | பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விடைத்தாள் நகல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2-ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. இதில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.4 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவில் 97.3 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 96.4 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் 2வது இடமும் மற்றும் 96.2 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை 3வது இடமும் பிடித்துள்ளன. 80.21 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசியிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2,054 மேனிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோன்று 2,724 அரசு பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. | RESULT

PLUS ONE RESULT - MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.


இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துதான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ - மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம்  www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in  DOWNLOAD

சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை

சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மீதான விவாதம்: அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆணையம் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:- * அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா? * 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா? * மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? * குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்? சட்ட திருத்தம் * துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா? * பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது? இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

1, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. மீறினால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கேந்திர வித்யாலயா பள்ளிகளில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் 3 பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பில் 8 பாடங்களை பயிற்றுவிக்கின்றனர். இதனால் அப்பள்ளி மாணவர்கள் 7 கிலோ எடை வரை புத்தகப்பைகளை சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு படிப்பு மீதான வெறுப்பு உணர்வு அதிகரிக்கிறது’ என்று கூறியிருந்தார். மேலும், அந்த மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வாங்க வேண்டும். அதேபோல, அந்த கவுன்சில் உருவாக்கியுள்ள விதிகளை தனியார் பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உள்பட எதிர்மனுதாரர்கள் பலர் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பள்ளி குழந்தைகள் பளுதூக்கும் வீரர்கள் கிடையாது. சந்தோஷமாக விளையாடுவது, ஓடுவது, ஆடுவது போன்றவை குழந்தைகளின் இயற்கையான தகுதிகளாகும். ஆனால், தவறான கல்வி கொள்கைகளால், நினைவில் வைத்துள்ள தகவல்களை தேர்வில் கொட்டி தீர்த்து, தங்களது நினைவாற்றலை நிரூபிக்கும் நிலையில் குழந்தைகள் உள்ளனர். லட்சிய பெற்றோர், அதிக அளவில் கல்வி சுமையை வழங்கும் ஆசிரியர்கள், தேர்ச்சி ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல்படும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றால் அப்பாவி குழந்தைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். மகிழ்ச்சியுடன் கல்வி கற்க வேண்டிய குழந்தைகள், மன அழுத்தத்துடன், ஒருவித பயத்துடன் படிக்கின்றனர். இதனால் குழந்தைகளின் சுதந்திரமான சிந்தனை அழிக்கப்படுமே தவிர, வேறு எந்த ஒரு பயனையும் வழங்கி விடாது. ஆரோக்கியம் சீர்குலையும் குழந்தைகள் இந்த தேசத்தின் சொத்து. அவர்கள் சுதந்திரமாக, பயமின்றி கல்வி கற்க வேண்டும். அப்போது தான் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கும். ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டு, சமூக சிந்தனைகள் உள்ளிட்ட பிற விஷயங்களிலும் உள்ளது. எனவே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள புத்தகங்களை கொண்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும். தேவையில்லாத பாடங்களை நடத்தினால், அது குழந்தைகளின் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். வீட்டுப்பாடம் கூடாது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் விதமாக கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். எந்த ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், 1, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதை மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அதிகாரி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் சங்கம் உறுதி செய்யவேண்டும். பறக்கும் படை அமைத்தும் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டுமல்லாமல், மாநில கல்வி திட்டத்தின்கீழ் படிக்கும் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரையின்படி 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி மற்றும் கணிதம் பாடங்களையும், 3 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு, மொழி, கணிதம், சுற்றுச்சூழல் பாடங்களையும் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும். இதை மீறினால் தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள புத்தகங்களை மட்டுமே, தனியார் பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று 2017-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை தீவிரமாக பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும். இதை பறக்கும் படை அமைத்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் புத்தகப்பை எவ்வளவு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய, மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கொள்கை முடிவுகளை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை 4 வாரத்துக்குள் மத்திய அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்யவேண்டும். கல்வியால், அறிவாற்றல் வளர வேண்டுமே தவிர, மனப்பாடம் செய்யும் ஆற்றல் வளரக்கூடாது. அறிவாற்றலுக்கும், மனப்பாடம் செய்து வைக்கும் திறனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ, 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பே, ‘கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு கல்வியை போதிக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினித் தமிழ் பாடம் கற்றுத் தரப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப பூங்கா தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பதிலளித்துப் பேசினார். பின்னர் சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை உருவாக்க சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு நிதித்துறையில் போட்டி, புதுமை, உற்பத்தித் திறனை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சென்னையில் நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைக்கப்படும். பல்வேறு துறைகளின் திட்டங்களின் காட்சித் தோற்றத்திற்கு முன்முயற்சியாக முதலீட்டுத் திட்டமாக, முதல்அமைச்சர் முகப்பு பக்கம் (சி.எம். டாஷ் போர்டு) உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து முக்கிய துறைகளிலும் செயல் திறனை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் திறம்பட கண்காணிக்க இயலும். கூடுதல் ஆன்லைன் சேவை எல்காட் இமார்கெட் மூலம் அரசுத் துறைகளுக்கு ஆன்லைன் வழியாக அனைத்து தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த வன்பொருள், மென்பொருள் சேவை வழங்கப்படும். தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம், தொழில்நுட்ப கருத்துக்கள வசதி அமைக்கப்படும். இணையட் வழியில் அனைத்து இசேவைகளையும் அளிப்பதற்கு, கூடுதல் ஆன்லைன் சேவையை வழங்க வழிவகை செய்யப்படும். கணினித் தமிழ் தமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது. எனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப் படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக் கழகம் பயிற்றுவிக்க உள்ளது. அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும். ஓ.டி.டி. சேவை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்கள், கூடுதலாக ஓ.டி.டி. (ஓவர் த டாப்) சேவை மூலம், அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் உலகின் எந்த பாகத்தில் இருந்து, கிளவுட் கம்ப்யூட்டிங், செல்போன், டாப்லெட், கம்ப்யூட்டர், லேப்-டாப் போன்ற பல்திரை உபகரணங்கள் மூலம் கண்டுகளிக்கும் வசதி வழங்கப்படும். இதன் தொடக்கத்தில் 50 முதல் 100 தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. DOWNLOAD

சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வு முடிவு - சென்னை மண்டலம் 2-வது இடம்

சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.37 சதவீதம் பேர் தேர்ச்சி | சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்புதேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 97.37 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வை கடந்த மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை நடத்தியது. இத்தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 24 ஆயிரத்து 682 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் www.results.nic.in , www.cbs-e-r-esults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வில் டெல்லி அருகேயுள்ள குர்கான் பள்ளி மாணவர் பிரகார் மிட்டல் 500-க்கு 499 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பெற்றுள்ளார். 499 மதிப்பெண் எடுத்து உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் ஆர்.பி. பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவர் ரிம்ஷிம் அகர்வால் 2-வது இடத்தை பிடித்தார். 499 மதிப்பெண் பெற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி சர்வதேசபள்ளி மாணவி நந்தினி கார்க் 3-வது இடத்தில் உள்ளார். 499 மதிப்பெண் எடுத்து 4-வது இடத்தை கேரளா மாநிலம் கொச்சி பவான்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமி பெற்றார். முதல் இடம் பெற்றவர் முதல் 4-வது இடம் பெற்றவர் வரை 500-க்கு 499 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் சீனியாரிட்டி என்ற அடிப்படையில் அவர்களுக்கு தரவரிசை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய அளவில் மொத்தம் 14 லட்சத்து 8 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.70 சதவீத தேர்ச்சி ஆகும். திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டையூ -டாமன் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 97.37 சதவீதம் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அஜ்மீர் மண்டலம் 91.86 சதவீதம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த மாணவர் தரணி கோவிந்தசாமி 500-க்கு 497 மதிப்பெண் பெற்று அந்த பள்ளியில் முதல் இடம் பெற்றார். அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி ரித்து அலிஸ் செரியன் 500-க்கு 493 மதிப்பெண்ணும், மாணவர் பிரசாந்த் 492 மதிப்பெண்ணும் எடுத்து உள்ளனர் என்று பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி தெரிவித்தார். அவர்கள் உள்பட தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார். மேலும் அவர் கூறுகையில் எங்கள் பள்ளியில் முதல் மாணவி ரித்து எனது பள்ளி ஆசிரியை அனிதாவின் மகள் ஆவார் என்றும் தெரிவித்தார். இந்த பள்ளியில் 778 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19 பேரும், கணிதத்தில் 8 பேரும், பிரெஞ்சு பாடத்தில் 5 பேரும், அறிவியல் பாடத்தில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் கே.மோகனா, தங்களது பள்ளியில் கிஷோர் ஞானேஸ்வரன் என்ற மாணவர் 500-க்கு 492 மதிப்பெண் எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.

பிளஸ்-2 சிறப்பு ஜூன் 2-ந் தேதி வரை விண்ணப்பம். துணைத்தேர்வு கால அட்டவணை.

தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்து உள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகைபுரியாதவர்களுக்காக சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும். தனியார் பிரவுசிங் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க இயலாது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வுமையங்களுக்கு நேரில் சென்று நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
கால அட்டவணை

இதற்கிடையே இந்த தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஜூன் 25-ந் தேதி - தமிழ் முதல் தாள்.

26-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.

27-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

28-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.

29-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.

30-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ், வணிகவியல்.

ஜூலை 2-ந் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மனைஅறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியியல், அரசியல் அறிவியல்.

3-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

4-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம்.


பிளஸ்-1 தேர்வு முடிவு...விரிவான தகவல்கள்

பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை வெளியீடு மறுகூட்டலுக்கு ஜூன் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் | பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும் ஜூன் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-1 தேர்வு முடிவு பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. ஜூன் 4-ந்தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்தின் பள்ளித் தலைமை ஆசிரியரும் சான்றொப்பமிட்டிருந்தால் மட்டுமே செல்லும். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாகவும் ஜூன் 1, 2, 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். துணைத்தேர்வு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். சிறப்பு துணைத்தேர்வு ஜூலை 5-ந்தேதி தொடங்கும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனை

சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம் பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர் பிளஸ் 1 புத்தகங்கள் ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும் என தகவல் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பிளஸ் 2 பாடப்புத்தங்கள் விற்பனை நேற்று தொடங்கியது. இதற்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டர்களில் புத்தகங்களை வாங்கிச் செல்லும் மாணவர்கள். படம்: ம.பிரபு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் டிபிஐ வளாகத்தில் சிறப்பு கவுன்டர் தொடங்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக் கான பாடப்புத்தகங்கள் பள்ளி கள் திறக்கப்படும் நாளன்று (ஜூன் 1) அவர்களுக்கு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டுவிட்டன. தனியார் சுயநிதி பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும், சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத் தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 தவிர ஒன்று முதல் பிளஸ் 2 வரை மற்ற அனைத்து வகுப்புகளுக் கான பாடப் புத்கங்களையும் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், அதன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் மாணவ - மாணவிகள் வாங்கிக்கொள்ளலாம். மேலும், பாடநூல் கழகத்தின் இணையதளத்தை (www.textbookcorp.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் பதிவுசெய்து கூரியர் மூலமாக புத்தகங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக ஒவ்வொரு மாணவரும் தங்கள் வகுப்புக்குரிய ஒரு செட் புத்தகத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். ஒருவரே ஒன்றுக் கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வாங்கிவிடக்கூடும் என்பதால் மற்ற மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும், அதிக புத்தகங்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்கப்படும் வாய்ப்பைத் தடுக்கவும் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். ஒவ்வொரு புத்தகத்திலும் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யும் விற்பனை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, டிபிஐ வளாகத் தில் பிளஸ் 2 மாணவர்களின் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டரை பாட நூல் கழகம் தொடங்கியிருக்கிறது. இந்த கவுன்ட்டர் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனையகத்துக்கு அருகில் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தை ஒட்டிய பகுதி) இயங்குகிறது. இங்கு பிளஸ் 2 பாடப்புத்கங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. பிளஸ் 1 புதிய புத்தகங்கள் இந்த ஆண்டு 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகம் ஜூன் 2-வது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித் தார்.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு | இந்தியா முழுவதும் மார்ச் 4-ந்தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயச்சந்திரன் தகவல்

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயச்சந்திரன் தகவல் - 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார். பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அகராதி பாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது. 11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன. பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். பாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள். தொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது. அடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.


8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். நாளை வெளியீடு மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை ( www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in ) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். DOWNLOAD

என்ஜினீயரிங் சேர்க்கை விண்ணப்பிக்க மே 30-ந்தேதிவரை அவகாசம்

விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இப்படி விண்ணப்பிக்க மே 30-ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த தேதியை நீடிப்பு செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் போராட்டம்-கலவரம் காரணமாக இன்டர்நெட் சேவை சில மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ளதால் இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் 2-ந் தேதிவரை மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என்ற அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஹால்டிக்கெட்

ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்... தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு (டி.டியெட்) ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. பட்டய பயிற்சிக்கான முதல் ஆண்டுத் தேர்வு, ஜூலை 5-ந்தேதி தொடங்கி, ஜூலை 21-ந் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு ஜூன் 4-ந்தேதி தொடங்கி, ஜூலை 20-ந்தேதி வரையும் நடக் இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இன்று (28-5-2018) முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் சென்று தங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தேர்வு

ஆக. 11-ல் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தேர்வு டிப்ளமா படித்தோர் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலம் 805 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு தோட்டக்கலை பாடத்தில் டிப்ளமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தோட்டக்கலை சார்நிலை பணியில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிளஸ் 2-வுடன் தோட்டக்கலை யில் டிப்ளமா படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) வயது வரம்பு கிடையாது. எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடத்தப்படும். அன்று காலையில் தோட்டக்கலை பாடத் தேர்வும், பிற்பகலில் பொது அறிவு தேர்வும் நடைபெறும். இத்தேர்வுக்கு ஜூன் 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வுக்கும் பொருந்தும். நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியை (பிளஸ் 2, தோட்டக்கலையில் டிப்ளமா) தமிழ்வழி யில் படித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அதிக இடங்களை கைப்பற்றிய அரசு சாரா டாக்டர்கள்

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டைவிட அதிக இடங்களை கைப்பற்றிய அரசு சாரா டாக்டர்கள் சலுகை மதிப்பெண் கிடைத்தும் பின்தங்கிய அரசு டாக்டர்கள் சி.கண்ணன் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக் கான முதல்கட்ட கலந்தாய்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, அரசு சாரா டாக்டர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றினர். சலுகை மதிப்பெண் கிடைத்தும் அரசு டாக்டர்கள் பின் தங்கினர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு, பட்டயமேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பு (எம்டிஎஸ்) ஆகிய இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்தக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,175 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் அரசு டாக்டர்கள் 727 இடங்களையும், அரசு சாரா டாக்டர்கள் 448 இடங்களையும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் 98 சதவீத இடங்களை அரசு டாக்டர்களும், 2 சதவீத இடங்களை அரசு சாரா டாக்டர்களும் எடுத்திருந்தனர். நீட் மதிப்பெண்ணுடன், சலுகை மதிப்பெண் கிடைத்தும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான இடங்களை அரசு டாக்டர்கள் எடுத் துள்ளனர். டெங்கு பாதிப்பு இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கதிர்வேல், பொருளாளர் டாக்டர் கோபிநாத் கூறியதாவது: மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு 1,500 மதிப்பெண்களுக்கு நடந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு 1,200 மதிப்பெண்களுக்கு நடந்தது. இதேபோல் கடந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. ஆனால், இந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் உள்ளது. இதைவிட முக்கியமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டதால், நீட் தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை. அதனால், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தது. இதனால்தான் அரசு டாக்டர்களால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை. ஆனால், அரசு சாரா டாக்டர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு படிக்க அதிக நேரம் இருக்கிறது. தனியார் பயிற்சி மையம் சென்று நீட் தேர்வுக்குப் படிக்கின்றனர். அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிபெண்கள் வழங்கு முறை வேண்டாம். முன்பு இருந்ததைப் போலவே மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் அரசு இடங்களில் 50 சதவீதத்தை அரசு டாக்டர்களுக்கு திரும்பக் கொண்டு வருவதற்கான தனி சட்டத்தை, தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விதிமுறைகளை பின்பற்றவில்லை அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கச் செயலர் கார்த்திகேயன் கூறியதாவது: அரசு சாரா டாக்டர்களுக்கு கடந்த ஆண்டு கலந்தாய்வில் 2 சதவீத அரசு இடங்கள் மட்டுமே கிடைத்தது. இது துரோகத்திலும் துரோகம். இந்த ஆண்டு சுமார் 40 சதவீத இடங்கள் கிடைத்துள்ளன. இது மகிழ்ச்சியாக இருந்தாலும், இதுவும் அநீதிதான். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி தொலைதூரம், மலைப்பிரதேசம் மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் உள்ள 72 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் டாக்டர்களுக்கு மட்டும் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் தவறானது ஆனால், விதிமுறைகளைப் பின்பற்றாமல் கிராமம், நகரம், மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இது மிகவும் தவறானது. விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்தால் அரசு சாரா டாக்டர்களுக்கு 60 முதல் 70 சதவீத இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருந் திருக்கும். இவ்வாறு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்சி ?

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்சி ? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றச்சாட்டு பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சி என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் உள்ளன. பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வருவாய் மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரிகளும் (32 பேர்), கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அதிகாரிகளும் (67 பேர்) நிர்வகித்து வருகிறார்கள். இதைபோல், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளும், வட்டார அளவில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளும் (836 பேர்) நிர்வகிக்கிறார்கள். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 4,322 மெட்ரிகுலேஷன் பள்ளிகளை கவனிக்க 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் வகையில் மே 18-ம் தேதி ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் உயர்நிலைப் பள்ளிகளையும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஆய்வு செய்துவந்த இந்த அதிகாரிகள் இனி கூடுதலாக நடுநிலைப் பள்ளிகளையும், தொடக்கப் பள்ளிகளையும் கண்காணிப்பார்கள். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பதவியும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் பதவியும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவி என்பதால் அப்பதவி மாவட்ட கல்வி அதிகாரி பதவியாகவே கருதப்படும். மேலும், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியானது வட்டார கல்வி அதிகாரி என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அதிகாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மட்டுமின்றி தனியார் பள்ளிகளையும் நிர்வகிப்பார்கள். இந்த அதிரடி மாற்றங்கள் தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக் கல்வி இயக்ககத்தோடு இணைப்பதற்கான முயற்சிதான் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம்சாட்டிள்ளன. இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறும்போது, “இந்த புதிய மாற்றங்கள் மூலம் ஆரம்பக் கல்வி இயக்கத்தையே ஒழிக்க முயற்சி நடக்கிறது. 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பதவிகள் இல்லாமல் போய்விடும். அரசின் இந்த முடிவை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் கூறும்போது, “அரசின் தற்போதைய நடவடிக்கை, தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சிதான். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் இல்லாமல் தொடக்கக் கல்வி இயக்குநர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. புதிய நடவடிக்கை மூலம் தொடக்கக் கல்வி நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படும்” என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்

செயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்கு நிதி

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க உள்ளது *நடப்பு 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது *இதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தங்கள்தேவைக்கு ஏற்ப கேட்கும் போது பிரித்து வழங்கப்படும். இந்த நிதியுடன் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது *ஏற்கெனவே அமலில் இருந்த சர்வ சிக் ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக் ஷா அபியான் மற்றும் ஆசிரியர்கள் கல்வி திட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*இந்த புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் சதவிதம், மாணவர் தேர்ச்சி உள்ளிட்ட பள்ளியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல்வேறு வகைசெயல்திறன்களின் அடிப்படையில் இந்தத் தொகை பிரித்துவழங்கப்பட உள்ளது. குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் இந்த திட்டத்தால் அதிகம் பலன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது *இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதிலும் உள்ள மாநில, யூனியன் பிரதேசஅரசுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம் *ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. சிறந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டஇந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றார் *புதிய திட்டத்தின்படி எந்த செயல்திறனுக்கு எவ்வளவுதொகை ஒதுக்கப்படும் என்ற விவரம் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது *உதாரணமாக நூலக வளர்ச்சிக்கு மாதம் ரூ.5000 முதல் ரூ.20,000, விளையாட்டுப் பயிற்சிக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விவரங்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம்.

மேல்நிலை தொழிற்கல்வி மற்றும் கலை பாட பிரிவுகளில் கணினி பாடம்

தமிழகத்தில் மேல்நிலை தொழிற்கல்வி மற்றும் கலை பாட பிரிவுகளில் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இதனை கடைபிடிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 1 முதல் 12ம் வகுப்பு வரையான பாட திட்டத்தை மாற்றும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பாட திட்டம் தரமானதாகவும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாட திட்டத்திற்கு மேலானதாகவும், அதே வேளையில் மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் பாடங்களில் தமிழகத்தின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். தமிழகத்தில் 12 வகையான தொழில்கல்வி பாடங்கள் மேல்நிலை வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லவும், வேலைவாய்ப்பு பெறவும் வாய்ப்புகள் உள்ளன. இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்விக்கான பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி மற்றும் கலைபிரிவு முதன்மை பாடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. பாட மாற்ற விபரங்கள்: * கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்ற பாட பிரிவு மட்டும் இருந்த நிலையில் இப்பாடம் வரும் கல்வியாண்டு முதல் மூன்று வகையாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்பது கணினி பயன்பாடுகள் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) என்ற முதன்மை பாடமாக கொண்டு வணிகவியல்- கணக்குபதிவியல்- பொருளியல், வரலாறு- புவியியல்- பொருளியல், கணக்குபதிவியலும் தணிக்கையியலும் என அறிமுகமாகிறது. வணிகவியல் பாடத்தில் டேலி முதலியனவும் இணைக்கப்படுகிறது. * 10 தொழிற்கல்வி முதன்மை பாடங்களிலும் மூன்றாவது கருத்தியல் பாடமாக கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. * கணக்கு பதிவியலும், தணிக்கையியலும் என்ற தொழிற்கல்வி பிரிவில் முதன்மை பாடமாக கணினி பயன்பாடுகள் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. * மேல்நிலை கல்வி தொழிற்கல்வியான கணக்குபதிவியலும் தணிக்கையியலும் என்ற பிரிவில் மூன்று முதன்மை பாடங்களான வணிகவியல், கணக்குபதிவியல், கணினி பயன்பாடுகள் ஆகியவைகள் கருத்தியல் பாடமாகவும், நான்காவது முதன்மை பாடமான தணிக்கையியல் செய்முறை பாடமாகவும் சேர்க்கப்பட் டுள்ளது. * அலுவலக செயலாண்மை என்ற பாடப்பிரிவு அலுவலக மேலாண்மை செயலியல் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று முதன்மை பாடங்களான வணிகவியல், கணக்குபதிவியியல், அலுவலக மேலாண்மை செயலியல் ஆகியவைகள் கருத்தியல் பாடங்களாகவும், நான்காவது முதன்மை பாடமாக தட்டச்சு கணினி பயன்பாடுகளும் செய்முறை பாடமாக சேர்க்கப்படுகிறது. * புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கணினி பயன்பாடு மற்றும் கணினி தொழில்நுட்ப பாடங்கள் கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வு பாடங்களாக உள்ளதால் கணினி அறிவியல் பாடத்திற்கு மதிப்பெண் வழங்குவது போன்ற நடைமுறையே இதற்கும் பின்பற்றப்படும். வரும் கல்வியாண்டுக்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகின்ற நிலையில் மாணவர்கள் நலன்கருதி தொழிற்கல்வி மற்றும் கலை பிரிவுகளில் மாற்றி அமைக்கப்பட்ட முதன்மை பாடவிபரங்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். கணினி தொழில்நுட்ப பாடம் இணைக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்ட தொழிற்கல்வி பாடபிரிவுகள் 1. பொது இயந்திரவியல்-அடிப்படை இயந்திரவியல் 2. மின் இயந்திரங்களும் சாதனங்களும்-அடிப்படை மின் பொறியியல் 3. மின்னணு சாதனங்கள்- அடிப்படை மின்னணு பொறியியல் 4. கட்டட பட வரைவாளர்- அடிப்படை கட்டட பொறியியல் 5. ஆட்டோ மெக்கானிக்-அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் 6. நெசவியல் தொழில்நுட்பம்- நெசவியல் தொழில்நுட்பம் 7. செவிலியம்-செவிலியம் 8. துணிகளும் ஆடைவடிவமைப்பும்-நெசவியலும் ஆடை வடிவமைப்பும். 9. உணவு மேலாண்மையும் குழந்தை நலனும்-உணவக மேலாண்மை. 10. வேளாண்மை செயல்முறைகள்- வேளாண் அறிவியல்.

புதிய பாடத்திட்டத்தில் QR கோடு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப, கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்பரிமாண படங்கள், செல்போனில் ஸ்கேன் செய்து, அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பெறும் கியூஆர் குறியீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கடந்த ஆண்டுகளில், பள்ளிகளில் வேலை நேரங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இனி புதிய பாடத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியரும் கட்டாயம் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால், மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலத்தில் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தியதற்காக மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய பாடத்திட்டத்தின்கீழ், இந்த நடவடிக்கை தலைகீழாக மாறிவிட்டது. கட்டாயம் ஸ்மார்ட்போன் கொண்டுவர வேண்டும் என்ற சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றம் அவசியமாகிறது. தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக இனி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஸ்மார்ட்போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அல்லாமல் இணையதளத்தில் உள்ள தகவல்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக QR CODE (விரைவு குறியீடு) இருக்கும். ஸ்மார்ட் போன் மூலம் QR கோடு ஸ்கேன் செய்தால் இணையத்தில் இருந்து கூடுதல் தகவல்களை பெற்று செல்போன், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் கிளாஸ் மூலம் மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். இந்த வசதியை பெற, ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிக்கு வரும்போது ஸ்மார்ட் போன் கொண்டு வரவேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் ஸ்மார்ட் போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப் படிப்புகளுக்கு மே 28 முதல் விண்ணப்பம்..

சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு நிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019)சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி கூறியதாவது:- சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (ஹானர்ஸ்) விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் வழங்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 1 தேதி முதல் வழங்கப்படும். 3 ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.மேலும், தொலைதூரக்கல்வி வாயிலாக சட்டப் படிப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பின் அது தொடங்கப்படும். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடங்கள் அரசு உத்தரவுப்படி மட்டுமே நிரப்பப்படும். எத்தனை இடங்கள்.... தமிழகத்தில் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1411 இடங்களும், 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1541 இடங்களும் உள்ளன. இதுதவிர சீர்மிகு சட்டப்பல்கலைக் கழகத்தில் 624 இடங்களும் உள்ளன.விண்ணப்பிக்கும் முறை...சட்டப்படிப்புகளுக்கு ஆன்-லைன் வழியாகவும், விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்று விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நேரடியாக பெறலாம்.ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம

ஊதிய முரண்பாடுகள்: நாளை முதல் அரசு ஊழியர் சங்கங்களுடன் கலந்தாய்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக, கோரிக்கை மனுக்களை அளித்துள்ள சங்கங்களிடம் திங்கள்கிழமை (மே 28) முதல் கருத்துகள் கோரப்பட உள்ளன. தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிமுதல் ஊழியர் சங்கங்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துகிறது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது.இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் சிலருக்கு ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த முரண்பாடுகளை களையக் கோரி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகள் விடுத்தன. ஒருநபர் குழு அமைப்பு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழக அரசின் சார்பில், நிதித் துறை;ஈ செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சார்பில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன. இம்மனுக்களை மாநில அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், மனு அளித்த அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேச ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.நாளை முதல் பேச்சு: அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள ஒருநபர் குழுவின் தலைவர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள் கோரப்பட உள்ளன. ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ஐந்து நிர்வாகிகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டுமெனவும், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை ஒருநபர் குழுவிடம் தெரிவிக்கலாம் எனவும் அதன் தலைவர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

தொடக்க கல்வி ஆசிரியர், பட்டய வகுப்புகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் பட்டய வகுப்புகள் குறைப்பை எதிர்த்து வழக்கு தொடக்க கல்வி ஆசிரியர், பட்டய வகுப்புகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் தமிழகத்தில், ௨௦ மாவட்டங்களில் இயங்கி வந்த, தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய வகுப்புகளை, ௧௦ மாவட்டங்களுக்கு என குறைத்து, ௯ம் தேதி, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:தமிழகத்தில், ௨௦ மாவட்டங்களில், அரசின் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டு வந்த, தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய வகுப்புகள் மூடப்பட்டு, ௧௦ மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை இதனால், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், மாணவர்கள் சேரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை எளிய மாணவர்களால், கணிசமான தொகையை செலுத்தி, தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மேலும், வேறு மாவட்டங்களுக்கும் சென்றும் படிக்க முடியாது. தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்த அரசு உத்தரவு உள்ளது. இதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கல்வித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், ௫ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்

வேளாண் படிப்புக்கு 29,430 பேர் விண்ணப்பம். ஜூன், 17 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

அறிவிப்பு வெளியான ஏழு நாட்களில், வேளாண் படிப்புகளுக்கு, 29 ஆயிரத்து, 430 விண்ணப்பங்கள் வந்துள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.இந்த கல்வி ஆண்டுக் கான, இளங்கலைமாணவர் சேர்க்கை அறிவிப்பு, வேளாண் பல்கலை சார்பில், மே 14ல்வெளியிடப்பட்டது. 'வேளாண் பல்கலையின் கீழ், வழங்கப்படும் அனைத்து இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும்,ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.மே 18 முதல் ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது. ஜூன், 17 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். அறிவிப்பு வெளியான, ஏழு நாட்களில், 29 ஆயிரத்து 430 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 15 ஆயிரத்து 895 பேர், முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்களில், ஆண்கள், 6797 பேர்; பெண்கள், 9098 பேர்.கடந்த ஆண்டு, 49 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு, 50 ஆயிரத்துக்கும்மேற்பட்ட விண்ணப்பங்கள் வர வாய்ப்புஇருப்பதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் கட் ஆப் பட்டியல் மாவட்டம் வாரியாக விபரஙர்கள் வெளியீடு

அண்ணா பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக, இன்ஜி., கல்லுாரிகளின் சென்ற ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர்கள் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில்கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஒற்றைச் சாளர முறையில்நடந்து வந்த கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மே, 3ல் துவங்கியது. அடுத்த மாதம், 2ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, கூடுதல் தகவல்களை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைமற்றும் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின்,https://www.annauniv.eduஎன்ற,இணையதளத்தில், இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதேபோல, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டியின்,https://tnea.ac.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்ற ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கையில், மாணவர்கள் ஒவ்வொருகல்லுாரியிலும் சேர்ந்த, கட் - ஆப் மதிப்பெண், பாடவாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில், முன்பைவிட மிகவும் தெளிவாக, கல்லுாரி, கல்லுாரியின் கவுன்சிலிங் குறியீட்டு எண், பாடப்பிரிவு மற்றும் மாவட்ட வாரியான கல்லுாரிகள் என, தனித்தனியாக பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்த்து, தாங்கள் விரும்பும் கல்லுாரி, பாடப்பிரிவு மற்றும் கட் - ஆப் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில், வரும், 2022க்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைமானியக் குழு திட்டமிட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில், வரும், 2022க்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைமானியக் குழு திட்டமிட்டுள்ளது. தங்களிடம் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பேர், வேலை அல்லது சுய வேலை வாய்ப்பு பெறுவதைஉறுதி செய்யும்படி,உயர் நிலை கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., உத்தரவிடவுள்ளது.புதிய,சீர்திருத்தங்களை,அமல்படுத்த,யு.ஜி.சி., தீவிரம்! வேலைவாய்ப்புக்கு,முன்னுரிமை,அளிக்க,முடிவுஆண்டுதோறும், உயர் கல்வி மையங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடிவருகின்றனர். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் போதிய திறமை இன்மை உள்ளிட்ட பல காரணங்களால், வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்த நிலையை மாற்றும் நோக்கில், பல சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், யு.ஜி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில், ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி, யு.ஜி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:அனைத்து உயர் கல்வி மையங் களிலும், மாணவர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றை இலக்காக வைத்து, சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி, உயர் கல்வி மையங்களில் பயிலும் மாணவர் களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வகையில், அவர்களை, எல்லா வகையிலும் திறன் பெற்றவர் களாக உருவாக்க, பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.சமூகத்துடனும், தொழில் நிறுவனங்களுடனும், மாணவர்களுக்கு சிறப்பான வகையில் தொடர்பு இருக்க வேண்டும்.உயர் கல்வி மையங்களில் பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களில், குறைந்த பட்சம், 50 சதவீதம் பேருக்கு நிறுவனங் களில் வேலைவாய்ப்பு அல்லது சுய வேலைவாய்ப்பு கிடைப்பதை, அந்த மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களில், குறைந்தபட்சம், மூன்றில் இரு பங்கினர், அவர்கள் படிக்கும் போதே, சமூகத்துக்கு பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், கல்வி மையங்கள் செயலாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகளை, உயர் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., பிறப்பிக்கும்.உயர் கல்வி மையங்கள், தலா, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க வேண்டும்; அந்த கல்வி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளை சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.உயர் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களில்,குறைந்தபட்சம், 75 சதவீதம் பேருக்கு, தகவல் தொடர்பு, தலைமைப் பண்பு, குழுவுடன் சேர்ந்து பணியாற்றுதல், நேரத்தை சிறப்பாக பயன் படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.உயர் கல்வி மையங்களில் தேர்ச்சி பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவரின், கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் சிறப்பு சோதனை களை, அக்கல்வி மையங்கள் நடத்த வேண்டும். அந்த மாணவர், படிப்பை முடித்த பின், அவரது முன்னேற்றத்தை, சம்பந்தப்பட்ட கல்வி மையம் கண்காணித்து உதவ வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., வட்டாரங்கள் கூறின.தர மதிப்பீடு அவசியம்!தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் கல்வி மையங்கள் அனைத்தும், 2022க்குள், என்.ஏ. ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம், குறைந்தபட்சம், 2.5 தர மதிப்பீட்டு புள்ளிகளையாவது பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க, யு.ஜி.சி., ஆலோசித்து வருகிறது. அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி, அவற்றை, 2022க்குள் அங்கீகாரம் பெற்றவையாக மாற்றவும், யு.ஜி.சி., திட்ட மிட்டு உள்ளது.உயர் கல்வி மையங்களில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் தொடர்பான விஷயங்களை கற்றுத் தரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்... சிபிஎஸ் இ தேர்வில் தமிழக மாணவர்கள் கலக்கல்

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். பொருளாதாரவியல் பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது.இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல்நம்பர், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ தேர்வில் மேக்னா ஸ்ரீவத்சா என்ற மாணவி 500க்கு 499 பெற்று முதலிடத்திலுள்ளார். சிபிஎஸ்ஏ மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த வருடம் இந்தியா முழுவது பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 83.01%.மாக உள்ளது. திருவனந்தபுரம் மண்டலத்தில் அதிக தேர்ச்சி விகிதம் (97.32% ) பெற்று முதலிடத்தில் உள்ளது.தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதுசென்னை மண்டலத்தில் (93.87%) தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் (89%) டெல்லி உள்ளது.

CBSE Class 12 Result On 26/05/2018

CBSE Class 12 Result Will Be Declared On 26/05/2018