1 லட்சத்தை தாண்டிய என்ஜினீயரிங் விண்ணப்பம்.

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் உதவி மையங்களை நாடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 10 சதவீத விண்ணப்பங்கள் தான் உதவி மையங்கள் மூலம் வந்துள்ளன. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.இதனிடையே மாணவர்கள் வசதிக்காக 3 வருட கட்-ஆப் மதிப்பெண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.annauniv.edu) வெளியிடப்பட்டு உள்ளது.

Comments