பாரத ஸ்டேட் வங்கிப் பணி முக்கியத் தகவல்கள் 2,000 அதிகாரிப் பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 13 முதல்நிலைத் தேர்வு: ஜூலை 1, 7, 8 முதல்நிலைத் தேர்வு முடிவு: ஜூலை 15 அன்று வெளியிடப்படும்.

பாரத ஸ்டேட் வங்கிப் பணி முக்கியத் தகவல்கள் 2,000 அதிகாரிப் பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 13 முதல்நிலைத் தேர்வு: ஜூலை 1, 7, 8 முதல்நிலைத் தேர்வு முடிவு: ஜூலை 15 அன்று வெளியிடப்படும். மெயின் தேர்வு: ஆகஸ்டு 4 மெயின் தேர்வு முடிவு: ஆகஸ்டு 20 அன்று வெளியிடப்படும். மெயின் தேர்வில் வெற்றிபெறுவோருக்குக் குழு விவாதம், நேர்முகத்தேர்வு: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும். இறுதி தேர்வு முடிவு: நவம்பர் 11 அன்று வெளியிடப்படும். பாரத ஸ்டேட் வங்கி புரோபேஷனரி ஆபிசர் (Probationary Officer) பணிக்கு 2,000 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது கல்லூரியின் இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்தாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு முறை தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளைக் கொண்டது எழுத்துத் தேர்வு. இரண்டுமே ஆன்லைன் மூலமாக நடைபெறும். முதல்கட்டத் தேர்வான முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இத்தேர்வில் அப்ஜெக்டிவ் முறை கேள்விகளும் கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் ரீசனிங், கணினி அறிவு, டேட்டா அனாலசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகியவற்றில் இருந்து 155 கேள்விகளும் (200 மதிப்பெண்) ஆங்கிலத்தில் விரிவாகப் பதிலளிக்கும் வினாக்களும் (50 மதிப்பெண்) இடம்பெறும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண்டுக்குமே அனுமதிச்சீட்டு தபாலில் அனுப்பப்படாது, விண்ணப்பதாரர்களே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை ஜூன் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். இலவசப் பயிற்சி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் (கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்றோர்) பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்துக் குறிப்பிட வேண்டும். இலவசப் பயிற்சி ஜூன் 18 முதல் 23 வரை நடைபெறும். இதற்கான அனுமதிச்சீட்டை மே 28 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தின் (www.sbi.co.in/careers) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். நேரடி அதிகாரிப் பதவிக்கு ஆரம்ப நிலையிலேயே ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.

Comments