என்ஜினீயரிங் விண்ணப்ப பதிவு ஜூன்2-ந்தேதி வரை நீட்டிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்வு: என்ஜினீயரிங் விண்ணப்ப பதிவு ஜூன்2-ந்தேதி வரை நீட்டிப்பு அதிகாரி அறிவிப்பு . என்ஜினீயரிங் படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்று இருந்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை இல்லாத காரணத்தால் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரிய ராஜ் தெரிவித்துள்ளார்.

Comments