தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2018-ம் நாட்காட்டி ஆண்டில் (காலண்டர் இயர்) இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மையத்தில் நேரடியாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளலாம். இந்த மையம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். மேலும், கீழ்க்காணும் இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் தொலைதூரக் கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். www.ideunom.ac.in www.unom.ac.in அட்டவணை வெளியீடு மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் எம்.எல். தனித்தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக்கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments