கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சி

கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சிக்கு மே 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் பயிற்சி இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தின் சார்பில், கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. மத்திய அரசின் திறன் மேம் பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் பயிற்சி இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தின் சார்பில், கைவினை பயிற்றுவிப்பாளர் (Craft Instructor) பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கான சேர்க்கை ஜுன் 30-ம் தேதியன்று, நடைபெற உள்ள அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப் படும். நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க www.nimionlineadmission.in என்ற இணையதளம் மூலம் வரும் 30-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம், தகுதி, கட்டணம், ஆன்லைன் தேர்வு, தேர்வு மையம், தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிய விவரங்களை www.nimionlineadmission.in, citsadmission.atichennai.org.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம். கூடுதல் விவரங்களை 8527568928 என்ற அலை பேசி எண், 044-22500791 என்ற தொலைபேசி எண், nimionlineadmission@gmail.com என்ற இ-மெயில் முகவரியைத் தொடர்பு கொண்டு அறியலாம். மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவிக்கிறது.

Comments