இந்த ஆண்டு 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் சைக்கிள் வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
மானிய கோரிக்கை விவாதம்

சட்டசபையில் நேற்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் நந்தகுமார் (அணைக்கட்டு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

நந்தகுமார்:- பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்கள் நலன்காக்க தொழிலாளர் நலத் துறையால் அமைக்கப்படும் முத்தரப்புக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை.

அமைச்சர் நிலோபர் கபில்:- பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.33.60 வழங்கப்படுகிறது. முத்தரப்பு குழுவை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலைகளில் முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். அரசு நடத்தும் பஞ்சாலைகளில் ஊதிய பிரச்சினை எதுவும் இல்லை. அங்கு பணிபுரியும் பெண்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

மத்திய மந்திரிக்கு கடிதம்

நந்தகுமார்:- சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசும் அதை வலியுறுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றுதான் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். நானும் அத்துறையை சார்ந்த மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நந்தகுமார்:- அதேபோல், சென்னை ஆவடியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை தொடர்ந்து நடத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

அமைச்சர் க.பாண்டியராஜன்:- ராணுவ வீரர்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில், ஆவடியில் உள்ள ஆலையில்தான் உற்பத்தி திறன் அதிகம். அங்கு ஆள் குறைப்போ, அதை தனியார் மயமாக்குவதோ இல்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக உறுதியளித்து இருக்கிறார். அங்கு பணிபுரியும் 2 ஆயிரம் தொழிலாளர்களின் பணி பாதுகாக்கப்படும்.

நல வாரியத்தில் சேர்ப்பு

நந்தகுமார்:- வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணிபுரிய வரும் தொழிலாளர்களில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களை கண்காணிப்பது யார்?.

அமைச்சர் நிலோபர் கபில்:- வெளிமாநிலங்களில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்கள், அதற்கான நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். இதுவரை 17,949 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நந்தகுமார்:- 2016-ம் ஆண்டு திருச்சியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 11 தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். அந்த தொழிற்சாலைக்கு அனுமதியளித்த அரசு அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்?.

அமைச்சர் நிலோபர் கபில்:- அந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த ஆலை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சைக்கிள்

நந்தகுமார்:- கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில்தான் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இலவச சைக்கிள் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படவே இல்லை.

அமைச்சர் மணிகண்டன்:- இதுவரை 38 லட்சத்து 32 ஆயிரத்து 602 மாணவர்களுக்கு ரூ.5,600 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மடிக்கணினி வாங்குவதற்கான டெண்டர் முடிந்த நிலையில், சில நிறுவனங்கள் கோர்ட்டுக்கு சென்றதால் மடிக்கணினி வழங்க இயலவில்லை.

அமைச்சர் வளர்மதி:- கடந்த ஆண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படவில்லை என்று உறுப்பினர் குறிப்பிட்டார். சைக்கிள் தயாரித்து வழங்கிட 4 நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், சைக்கிள் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு 11 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு விடுபட்டதற்கும் சேர்த்து இந்த ஆண்டு வழங்கப்படும்.

நந்தகுமார்:- கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது கல்லூரி படிப்புக்கு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு எப்படி சைக்கிள் வழங்க முடியும்?.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டு 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் சைக்கிள் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


எளிமையான முறையில் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினி மயமாக்கப்படும் கருவூலத்துறை முதன்மை செயலாளர் தகவல்

எளிமையான முறையில் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினி மயமாக்கப்படும் கருவூலத்துறை முதன்மை செயலாளர் தகவல். சென்னை சம்பள கணக்கு அலுவலகம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி கூட்டம், தேனாம்பேட்டையில் நடந்தது. தமிழக கருவூலத்துறை முதன்மை செயலாளர் சு.ஜவஹர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன், கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சு.ஜவஹர் பேசுகையில், ‘நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.288.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்படும். சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும். இப்பணியை இந்தாண்டுக்குள் முடித்திட திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

பாடத்திட்டங்களில் கி.மு., கி.பி. முறையே தொடரும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பத்துரை, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் பாடத்திட்டங்களில் கி.மு., கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்), பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு பின்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘எப்போதும் போல் கி.மு, கி.பி. என்ற முறையே தொடரும்’ என்றார். கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் சார்பில் பல்வகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்கப்படுமா? என்றும், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் சுற்றுப் பிரகாரத்தை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘2011-2012-ம் ஆண்டிலேயே பல்வகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இருப்பினும், உறுப்பினர் குறிப்பிட்டதை முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று, தொழில் நுட்ப கல்லூரி தொடங்க மீண்டும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மேலும் திருச்செந்தூர் கோவிலில் சுற்றுப்பிரகாரம் பழைய நிலையிலேயே பழமை மாறாமல் கல் கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றார்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மே மாதம் நடைபெற்ற பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளை aucoe.annauniv.edu, coe1.annauniv.edu ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம். தேர்வெழுதிய 5 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இபிஎப் நிதியில் 75% தொகையை எடுக்க அனுமதி

வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர்கள் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒரு தொழிலாளி வேலையை ராஜினாமா செய்த ஒரு மாதத்துக்குப் பிறகு அவரது வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையில், 75 சதவீதத் தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து எழுதுதல், கொள்குறி வகை மற்றும் விவரித்து எழுதுதல் என்ற புதிய பாடத்திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டம் நீங்கலாக சென்னை உட்பட 31 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தி முடித்துள்ளது. மேற்படி துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. இது போன்று துறைத்தேர்வின் உத்தேச விடைகளை இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு, பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்ப`தாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, விரைவு தபால் மூலமாகவோ (அ) contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் | CLICK

குரூப்-2 தேர்வுக்கான இலவச கருத்தரங்கு

பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் குரூப்-2 தேர்வுக்கான இலவச கருத்தரங்கு ஜூலை 1-ந்தேதி நடக்கிறது. தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் (கிரேடு-2), சார்பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளுக்கு 1,600-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கிறது. இதையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் ஜூலை 1-ந்தேதி காலை 10 மணியளவில் குரூப்-2 தேர்வு குறித்த இலவச கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வு குறித்தும் ஒரு இலவச பயிற்சி முகாம் ஜூலை 8-ந்தேதி காலை 10 மணிக்கு வேப்பேரியில் நடைபெற இருக்கிறது. இந்த கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாமில் துறை சார்ந்த வல்லுனர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று மாணவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 044-26618056, 9940638537 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் கா.அமுதரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்: 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை சட்டசபையில் அமைச்சர் விளக்கம் 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கவன ஈர்ப்பு சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 29,297 ஆகும். இதில், 85,109 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினார்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக காத்திருப்பவர்கள். இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை. ஆர்வம் குறைந்தது கடந்த ஆண்டு 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மாணவர்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 மாணவர்களும், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங்களில் 66 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இவை தவிர, 40 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 3,360 இடங்களில் 459 பேரும், 279 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 பேரும் மட்டுமே சேர்ந்தனர். நடப்பு கல்வியாண்டில், 10 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 47 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு, மூடுவதற்கு அனுமதி வேண்டியுள்ளன. இப்படிப்பட்ட நிலையே அனைத்து மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி, அப்பயிற்சி நிறுவனங்களில் பணியிடைப் பயிற்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேர முடியாது ஸ்டாலின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேர முடியாது ஸ்டாலின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில் சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. மாநில உரிமையைப் பறிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வில், கேள்வித்தாளில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது இருப்பிடச் சான்று விஷயத்தில், வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து சான்று பெற்று படிக்கும் நிலை உருவாகியுள்ளது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்ட பிறகும் சிலர் ஆட்களைப் பிடித்து, சான்றிதழ் பெற்றுள்ளதாக தகவல் வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய 2 மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாக்கள் அனுப்பப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான டி.கே.ரங்கராஜனுக்கு இதுதொடர்பாக தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில் மத்திய ஒதுக்கீடு தவிர 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன. இருப்பிடச் சான்றைப் பொறுத்தவரை தற்போது தெளிவாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பிற மாநில மாணவர்கள் இங்கு வந்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாது. வெளி மாநிலத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள், இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருந்தால், அவர்களுக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒருவேளை பிற மாநில மாணவர்கள் அங்கும், இங்கும் விண்ணப்பித்திருந்தால், கண்டறிந்து ரத்து செய்யப்படும். இதையும் மீறி தவறு செய்தால் காவல் துறையுடன் இணைந்து வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. மசோதா நிறுத்திவைப்பு மசோதாவைப் பொறுத்தவரை, அவை ‘வித் ஹெல்டு - நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது’ என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ளது. இதுதொடர்பான தகவலை கோரியுள்ளோம்.

மாணவர்களுக்கு ஆன்லைனில் தற்காலிக புரவிஷனல் சான்றிதழ் சென்னை பல்கலை.யில் அறிமுகம்

பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தற்காலிக புரவிஷனல் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக துணைவேந் தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. துணைவேந்தர் பி.துரை சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பதிவாளர் இராம.சீனுவாசன் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணியளவில் முடிவடைந்தது. சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட விஷயங்கள் குறித்து துணைவேந்தர் துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதேபோன்று சென்னை பல்கலைக்கழகமும் அதன் இணைப்பு அங்கீகாரத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தற்காலிக புரவிஷனல் சான்றிதழ் வழங்கும் முறையை ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்கள் தங்களுக்குரிய தற்காலிக புரவிஷனல் சான்றிதழை தாங்களே பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ் 3 மாதம் செல்லத்தக்கது. அதற்குள் அவர்களுக்கு அசல் புரவிஷனல் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். இந்த புதிய திட்டத்துக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. தொலைதூரக்கல்வி தேர்வு விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலந்தாய்வில் முதல்முறையாக சிஎம்சி பங்கேற்பு

கலந்தாய்வில் முதல்முறையாக சிஎம்சி பங்கேற்பு. வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதல் முறையாக மாநில அரசின் கலந்தாய்வில் பங்கேற்கிறது. வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி தனியார் நுழைவுத் தேர்வு நடத்தி எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வந்தது. எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றது. இதனால் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, “வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதல் முறை யாக கலந்தாய்வில் பங்கேற் கிறது. அந்தக் கல்லூரிக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. மாநில அரசுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் எவ்வளவு என்பது இன்னும் முடிவாகவில்லை” என்றார்.

பொறியியல் தரவரிசை பட்டியலை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார் 10 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்

பொறியியல் தரவரிசை பட்டியலை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார் 10 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜெ.கு.லிஸ்பன் குமார் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். .பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் பொது கலந்தாய்வு மூலம் சேர 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் கடந்த 5-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தரவரிசைப் பட்டியலில் 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள மாணவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும். அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து, மாணவர் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தில் குறைகளைத் தெரிவித்து சரிசெய்துகொள் ளலாம். ஆன்லைன் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தோம். எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்க உள்ளதால், 10-ம் தேதிக்குப் பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் மாணவர் சேர்க்கையை ஜூலை இறுதிக் குள் முடிக்க வேண்டும். ஆனால், கலந்தாய்வு தொடங்க தாமதம் ஆவதால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி மாணவர் சேர்க்கையை நீட்டிக்க அவகாசம் பெறப்படும். இதனால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் முறை யில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் (சாப்ட்வேர்), தொழில்நுட்ப வசதிகள் தயாராக உள்ளன. மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் இருந்து 18,771 இடங்கள் கலந்தாய்வுக்கு வந்துள்ளன. கலந்தாய்வை 5 அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளோம். கலந்தாய்வு மூலம் மாணவர் கள் சேரும் பட்சத்தில் தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு ரூ.55 ஆயிரம், தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம், அதேபோல், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் தரச்சான்று படிப்புகளுக்கு ரூ.87 ஆயிரம், தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு ரூ.85 ஆயிரம் என கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் செய்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:15 என இருந்தது. இதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) 1:20 என திருத்தி அமைத்துள்ளது. இதற்காக, பணியில் உள்ள ஆசிரியர்களை யாரும் வேலையில் இருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்குவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஆர்க். படிப்பில் கலந்தாய்வு மூலம் 3 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். தேசிய கட்டிடக்கலை கவுன்சில் (நாட்டா) நடத்திய தேசிய திறனறி தேர்வில் 3,374 பேர் தகுதி பெற்றுள்ளனர். பி.ஆர்க். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஜூலை 2-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. அதன்பிறகு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். இதில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ், பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க அரசு பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 12 மாணவர்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று தனித்தனியாக வெளியிடப்பட்டது. இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் 1-1000 வரையிலான முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும், 1001-3000 வரை 8 பேரும், 3001-5000 வரை 16 பேரும், 5001-10000 வரை 76 பேரும், 10001-15000 வரை 157 பேரும், 15,001-25000 வரை 1,059 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு வசதியாக அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி மையங்கள் அமைத்து, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 1,337 பேர் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 பேருக்கு மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் இடம்

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 பேர் இடம் பிடித்து இருக்கின்றனர். மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளிகளில் படித்த 409 பேர் விண்ணப்பித்ததில் 390 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 991 பேர் விண்ணப்பித்ததில், 930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, 1,320 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம் கிடைத்து இருக்கின்றது. தரவரிசைப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடம்பிடித்து இருப்பவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:- 1 முதல் 1,000 வரையிலான தரவரிசையில் 4 பேரும், 1,001 முதல் 3,000 வரையிலான தரவரிசையில் 8 பேரும், 3,001 முதல் 5,000 வரையிலான தரவரிசையில் 16 பேரும், 5,001 முதல் 10,000 வரையிலான தரவரிசையில் 76 பேரும், 10,001 முதல் 15,000 வரையிலான தரவரிசையில் 157 பேரும், 15,001 முதல் 25,419 வரையிலான தரவரிசையில் 1,059 பேரும் இடம் பிடித்துள்ளனர். இதில் முதல் 3 நிலைகளில் இடம்பிடித்து இருப்பவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான இடங்கள் எத்தனை?

மருத்துவ படிப்புக்கான இடங்கள் எத்தனை? மாறுபட்ட புள்ளி விவரங்களால் மாணவர்கள் குழப்பம் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் பங்கு பெற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசு கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 574-ம், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 819-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 393 இடங்கள் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், அரசு தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட தகவலில், அரசு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 447-ம், ராஜா முத்தையா கல்லூரியில் 127-ம், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 65-ம், சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 689-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு, கடந்த 19-ந்தேதி அதிகாரிகள், அரசு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 572-ம், சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 355 இடங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இப்படியாக மருத்துவபடிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை எத்தனை? என்பது குறித்த மாறுபட்ட புள்ளிவிவரங்களால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இதில் எது சரி? என்பதை சுகாதாரத்துறை விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் எவ்வளவு?

தமிழகத்தில் அரசு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர்ந்து படிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம் வருமாறு:- அரசு கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் படிப்பதற்கு ரூ.13 ஆயிரத்து 600-ம், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிக்க ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படிக்க ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க ரூ.11 ஆயிரத்து 600-ம், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் படிக்க ரூ.6 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 370-ம், பி.டி.எஸ். படிப்புக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பெயர் விவரம்

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பெயர் விவரம் 

அரசு ஒதுக்கீடு

1) கே.கீர்த்தனா, எம்.கே.ரெட்டி தெரு, மேற்கு தாம்பரம், சென்னை. (676)

2) ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக், மல்லபுரம், தர்மபுரி. (656)

3) ஆர்.பிரவீன், தில்லை கங்கா நகர், சென்னை. (650)

4) முகமது சாயீப் ஹசன், டாக்டர் சுப்பராயன் நகர், கோடம்பாக்கம், சென்னை. (644)

5) ராகவேந்திரன், இருக்கம் தெரு, பொன்னேரி தாலுகா, திருவள்ளூர். (626)

6) எஸ்.அரவிந்த், மலயம் பாளையம், திருப்பூர். (625)

7) என்.இ.ஹரி நரேந்திரன், மேற்கு தில்லை நகர், திருச்சி. (625)

8) சி.ஆர்.ஆர்த்தி சக்திபாலா, ராம்நகர், மகாராஜாநகர் போஸ்ட், நெல்லை. (623)

9) எந்தூரி ருத்விக், மாடம்பாக்கம் மெயின்ரோடு, ராஜகீழ்ப்பாக்கம், சென்னை. (621)

10) யு.எம்.ரவி பாரதி, உப்புக்கரை பள்ளம், பவானி தாலுகா, ஈரோடு. (617)

நிர்வாக ஒதுக்கீடு

சுயநிதி மருத்துவகல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக் கான தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர் களின் பெயர் விவரம் மற்றும் நீட் தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

1) அமிதாப் பங்கஜ் சவுகான், அகமதாபாத், குஜராத். (670)

2) அர்ஜூன் சரஸ்வத், லக்னோ, உத்தரபிரதேசம். (669)

3) ஜெஸ் மரியா பென்னி, எர்ணாகுளம், கேரளா. (664)

4) ராஜ் செந்தூர் அபிஷேக், மல்லபுரம், தர்மபுரி. (656)

5) ஆபாஷ் கட்லா, பிரஜாபத் காலனி, பதிந்தா. (651)

6) பிரணவ் போஸ் பவனாரி, குகத்பள்ளி, ஐதராபாத், தெலுங்கானா. (650)

7) ஆர்.பிரவீன், தில்லை கங்கா நகர், திருச்சி. (650)

8) ரிச்சு கே.கோகாத், கோட்டையம், கேரளா. (650)

9) எஸ்.பட்டாச்சார்ஜீ, அகர்தலா, மேற்கு திரிபுரா (649)

10) சாய் சுப்ரியா ஜங்கலா, வெங்கராஜூ நகர், தொந்தபார்க், விசாகப்பட்டினம். (646)

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பெயர் விவரம் மற்றும் ‘நீட்’ தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:- தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவர்களிடம் இருந்து 28 ஆயிரத்து 67 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. அதில் 181 மாணவர்களிடம் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 469 விண்ணப்பங் கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 25 ஆயிரத்து 417 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவு விண்ணப்பங்களாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில்(மொத்த இடங்களில் 5 சதவீதம் ஒதுக்கீடு) 26 விண்ணப்பங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில்(மருத்துவபடிப்பு 7 இடங்கள், பல் மருத்துவம் ஒரு இடம்) 284 விண்ணப்பங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பிரிவில்(மருத்துவபடிப்பு 10 இடங்கள், பல் மருத்துவம் ஒரு இடம்) 469 விண்ணப்பங்களும் பெறப்பட்டு இருக்கின்றன. வருகிற 1-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக் கான கலந்தாய்வும், 2-ந்தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். இந்த ஆண்டை பொறுத்தவரையில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதேபோல், நம்முடைய இடங்களையும் விட்டுக்கொடுக்கவில்லை. 3 தனியார் மருத்துவகல்லூரிகளின் அங்கீகாரம் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருக்கிறது. அங்கு சேர்க்கை கூடாது என்று கூறி இருக்கிறார்கள். அதை பின்பற்றுவோம். கடந்த ஆண்டில் பெறப்பட்ட அதே இடங்களை மீண்டும் பெற்று இருக்கிறோம். வரும் ஆண்டில் கரூர் உள்பட 3 மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைக்க இருக்கிறது. கட்டணம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஒரு குழு அமைத்து இருக்கிறது. அந்த குழு நிர்ணயித்த கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இரட்டை இருப்பிட சான்றிதழ், போலி சான்றிதழ் சமர்பிக்கப்படுவதை தடுக்க இந்த ஆண்டு விதியை கடுமையாக பின்பற்றுவோம். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கோ, வேறு மாநிலத்தில் விண்ணப்பித்தவர்கள் தமிழக இடங்களுக்கோ விண்ணப்பிக்க முடியாது. சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதல் முறையாக வேலூர் சி.எம்.சி. மருத்துவகல்லூரியும் இணைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு முதற்கட்ட கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதற்கட்ட கலந்தாய்வு 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அகில இந்திய இடஒதுக்கீட்டு இடங்கள் போக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் 127 இடங்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவகல்லூரியில் 65 இடங்கள், சுயநிதிகல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 689 என மொத்தம் 3 ஆயிரத்து 328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இதுதவிர 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. அரசு பல் மருத்துவகல்லூரியில் அகில இந்திய இடஒதுக் கீட்டுக்கான 15 இடங்கள் போக 85 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 12 இடங்கள் போக 68 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1,045 இடங்களும் என மொத்தம் 1,198 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இதுதவிர 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு இந்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இதில் மருத்துவகல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு.

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளத்தில் ( www.tnd-alu.ac.in ) காணலாம். இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 11 மற்றும் 12-ந்தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது கலந்தாய்வுநேரம் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ‘மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான்’ சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு.

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. கல்விக்கடன் நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.சுமதி, ‘தீபிகாவின் தந்தை வாங்கிய கடனுக்கு தவணையை முறையாக செலுத்தவில்லை. வழக்குதாரர் கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த நர்சிங் படிப்பு, கல்விக்கடன் வாங்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு கல்விக் கடன் வழங்க முடியாது’ என்று வாதிட்டார். மாணவி தரப்பு வாதம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜேந்திரன், ‘வழக்குதாரர் தந்தை தவணை செலுத்தவில்லை என்ற காரணத்துக்கு கல்விக்கடனை வழங்க மறுப்பது சரியானது இல்லை. வாங்கிய கடனுக்கு தவணையை வழக்குதாரர் தான் செலுத்த போகிறாரே தவிர, அவரது தந்தை இல்லை’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- மறுப்பது நல்லது அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், பல பெரும் புள்ளிகளுக்கு பெரும் தொகையை வங்கிகள் கடன் வழங்குகின்றன. அவ்வாறு கடன் வாங்குபவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகின்றனர். இதனால், கடன் வழங்க கையெழுத்திட்ட வங்கி ஊழியர்கள் தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, இவ்வாறு கடன் வழங்குவதால், பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்படுகிறது. கடன் தொகை சிறியதோ, பெரியதோ பிரச்சினை இல்லை. கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும். இதற்காக கடன் கொடுத்து விட்டு அதை வசூலிக்க, கடன் வாங்கியவர்களின் பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதைவிட, கடன் வழங்காமல் இருப்பதே நல்லது. சரியான முடிவு எனவே, வழக்குதாரரின் தந்தை தவணை தொகையை திருப்பிச் செலுத்தாததால், இவருக்கு கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் சரியாக முடிவு எடுத்துள்ளது. நர்சிங் படிப்பு, கல்விக்கடன் திட்டத்தில் இடம்பெறாததால், வழக்குதாரர் கல்விக்கடன் பெறமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு பெற்றோர் - பிள்ளை உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு பெற்றோர் - பிள்ளை உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல். சி.கண்ணன் பெற்றோர் - பிள்ளை இடையே யான உறவுமுறை சான்றிதழை தமிழக அரசு வழங்குவதில்லை என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு அந்த சான்றிதழ் தேவையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல் லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட 43,395 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது. தேவையான சான்றிதழ்கள் இந்நிலையில் www.tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவி கள் நீட் தேர்வு எழுதிய ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் கார்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று ஆதார் கார்டு உள்ளிட்ட 9 ஆவணங் களுடன் 10-வது ஆவணமாக பெற்றோர் - பிள்ளை (விண்ணப்பதாரர்) இடையேயான உறவுமுறை சான்று கொண்டு வரவேண்டும். இதேபோல் பெற்றோர் தாங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்க தங்களுடைய பிறப்புச் சான்று, 10 அல்லது எஸ்எஸ்எல்சி, 12 மற்றும் பட்டப் படிப்புச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, ஆதார் கார்டு, வருமானச் சான்று என மொத்தம் 8 சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். உரிய சான்றிதழ் இல்லையென்றால் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பெற்றோர் குழப்பம் இந்நிலையில் பெற்றோர் - பிள்ளை இடையேயான உறவுமுறை சான்றிதழை எங்கே சென்று வாங்குவதென்று தெரியாமல் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழப்ப மடைந்துள்ளனர். இதேபோல், பெற்றோர் படிக்கவில்லையென்றால், அதற்கான சான்றிதழை யாரிடம் பெறுவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெற்றோர் - பிள்ளை இடையே யான உறவுமுறை சான்றிதழை அரசு வழங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, அந்த சான்றிதழை எங்கே சென்று எப்படி வாங்க முடியும்?” என்றனர். இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழுச் செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜனிடம் கேட்டபோது, “தமிழகத் தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் 10, 12-வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட சில சான்றிதழ்களைக் கொண்டு வந்தாலே போதுமானது. பெற்றோர் – பிள்ளை இடையேயான உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை. வெளிமாநிலத்தில் படித்தவர்களும் அனைத்து சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டியதில்லை. இதனால், பெற்றோர், மாணவர்கள் குழப்பமடையத் தேவையில்லை. தங்களிடம் இருக்கும் சான்றிதழ்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்” என்றார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை 28.6.2018 நடக்கிறது

மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), கிண்டி தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்பம்) சார்பில் ஜூன் 29-ம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்துக்கு தேவையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளன. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள வருவோர் கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். தேர்வு செய்யப் படுவோருக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும். இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள் ளது.

மின்வாரிய உதவியாளர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி

மின் வாரிய கள உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்க ளைத் தேர்வு செய்வதற்காக நடைபெற உள்ள தேர்வுக்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், மின்வாரிய கள உதவியாளர் பணியிடங்களுக்கு 900 பேரை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது. கள உதவியாளர் பணிக்கு ஐடிஐ-யில் எலக்ட்ரீஷியன், வயர்மேன் டிரேட் ஆகிய பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த கள உதவியாளர் பணிக்கு நடைபெற உள்ள தேர்வுக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தொழிற்சங்கமும், டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் இணைந்து இலவச வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த வகுப்புகள் சென்னை, கோவை, திருச்சி, விழுப்புரம், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9976064643, 9976754000, 9790390190 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக கடந்த ஆண்டு 9 மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், போலி இருப்பிடச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க, கலந்தாய்வில் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. ஆவணங்கள்: கலந்தாய்வில் பங்கேற்போர் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியில் வழங்கிய ஆளறிச் சான்றிதழ், கடைசியாகப் படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின் ஆளறிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறு மாநிலத்தில் படித்தவர்கள் இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்துவோருக்கு), குடும்ப அட்டை அல்லது கடவுச்சீட்டு, பெற்றோருக்கும் மாணவருக்குமான உறவைக் குறிப்பிடும் ஆவணம் ஆகிய அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோருக்கான ஆவணங்கள்: மேலும், அந்த மாணவரின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பட்டயம் அல்லது இளநிலை அல்லது தொழில்படிப்பை படித்ததற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் (பொருந்துவோருக்கு) ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அசலும் நகலும்: கலந்தாய்வில் பங்கேற்போர் இந்த ஆவணங்களின் அசலைக் கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும். இதுதவிர ஆவணங்களின் நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு திரும்பக் கொடுக்கப்படும்; ஆவணங்களின் நகல்களைக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் குழு: நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக ரூ. 18 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கும் உரிய கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். ஒருவேளை கல்விக் கட்டணக் குழு அதிகமான தொகையை நிர்ணயித்தால் எஞ்சிய தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும். ரூ.13 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மீதித் தொகையை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள், எம்பிபிஎஸ் படிப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை யுஜிசி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. குழு அமைப்பு: இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது யுஜிசி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.ஆர்.பி.கோபிநாதன், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் ஆர்.சி.தேகா நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக லக்னௌ மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூராமணி கோபால் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர். இந்தக் குழு 4 மாத காலத்துக்குள் கட்டண நிர்ணயம் குறித்து பரிந்துரைக்கும்' எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 31 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

பொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் அதற்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.இதற்காக சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உட் பட தமிழகம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி முடிவடைந்தது.நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு 17-ம் தேதி வரை கூடுதலாக 3 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 2,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்துள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடுத்தகட்ட நிகழ்வான தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான ஆன் லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்.

அரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்:புதன்கிழமை (27.6.2018) முதல் விண்ணப்பிக்கலாம்: ஜூலை 9 கடைசி நாள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 264 பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெற புதன்கிழமை (27.6.2018) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஜூலை 9 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் 2018-19 -ஆம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கவும், அதற்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவும் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 2018-19 -ஆம் கல்வியாண்டில் 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளை தொடங்கவும், இப்பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், அரசு கல்லூரிகளில் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது மறுகூட்டல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்குரியவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது என்று தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்கள் சேர்க்கப்படும் : தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் இன்பதுரை, தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் அரசியல் அமைப்பு குறித்து பாடம் சேர்க்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கப்படுமா என வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்

தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு!

பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு1 ஆசிரியர் என்ற விகிதத்தை 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மாற்றி அமைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் 12,000 பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இதனை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாற்றம் செய்துள்ளது. தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 லட்சத்து 73000 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் இருந்தால் போதுமானது என்று கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 ஆசிரியர்களுக்கு MEMO

புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக தொடக்கக்கல்வி அமைச்சர்!

வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மகேஷ் என்பவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், சாம்ராஜ் நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஒரு கருத்தை தெரிவித்தார். பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விரைவில், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு நடக்க இருக்கும் தேர்வுகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும். அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்படும். இதுகுறித்து பல நிபுணர்களிடமும், மனோதத்துவ மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருவதாகவும் மேடையில் பேசினார். இந்த பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

TNPSC டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

TNPSC - Status of recruitment results - published in TNPSC website | 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும். அதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும். அத்துடன் இதுவரை வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் தொடர்பான விரிவான அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் புதனன்று வெளியாகியுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி குறிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை படிப்படியாக விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தேர்வாணையத்தின் புது முயற்சியாக, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் நிலுவையிலுள்ள போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும் தோராய கால அட்டவணையினை தேர்வாணையம் அதன் இணையதளமான www.tnpsc.gov.in ல் 04.06.2018 அன்று வெளியிட்டது. மேற்படி தேர்வு முடிவுகளின் இன்றைய (27.06.2018) நிலை குறித்த விவரங்களை, விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வாணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்.


கலைக்கப்படுகிறது யுஜிசி(UGC), இனிமேல் ஹெச்.இ.சி(HEC)

பல்கலைகழக மானிய குழு என அழைக்கப்படும் யுஜிசியை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கிடையில் மருத்துவ கவுன்சில் கலைப்புக்கான வேலை மற்றும் தேசிய தேர்வு வாரியம் ஆகிய பணிகள் தொடங்கியதால் யுஜிசி தப்பித்தது. இந்நிலையில் யுஜிசிசட்டல் 1951-ல் மாற்றம் கொண்டு வந்து அதனை கலைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின் படி பல்கலை கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர்கல்வி கவுன்சில் என்ற உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தொழில்நுட்ப கவுன்சில், கல்வியியல் கவுன்சில் ஆகியவையும் கலைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. மத்திய அரசு பொருத்தவரை தற்போதைக்கு உயர்கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஒரே அதிகார மையமாக ஹெச்.இ.சி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் உயர்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், தொழிநுட்ப புகுதல் என முக்கியமான ஆராய்ச்சிகளை செய்து அதனை கல்வி மாற்றமாக அறிமுகம் செய்தலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TNPSC - Certificate Verification and Oral Test

TNPSC - Certificate Verification and Oral Test | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வு / நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.


பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர்கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர் கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் (தட்கல் உட்பட) நாளை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் பிளஸ்-1 முதல்நிலை பொதுத்தேர்வின் போது, செய்முறை தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்து தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் 35-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத மாணவர்கள், உடனடி சிறப்பு துணைத்தேர்வின்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. செய்முறை தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்து தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் 35 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், உடனடி சிறப்பு துணைத்தேர்வின் போது எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்க வேண்டும். செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், எழுத்து தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. அதிகபட்ச மதிப்பெண் 75 கொண்ட தொழிற்கல்வி செய்முறை பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்வை எழுத வேண்டும். செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வு எழுதும் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டி.பி.ஐ. வளாகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தால் மரங்கள் வெட்டப்படும் ஆபத்து புதிய கட்டிடமும் இடிபடாமல் தப்புமா?

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ரூ.40 கோடியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்பட உள்ளதால் அங்குள்ள மரங்கள் வெட்டப்படும் ஆபத்து உள்ளதாகவும், 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடமும் இடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் டி.பி.ஐ. ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். டி.பி.ஐ. வளாகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுகள் இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம், மத்திய இடைநிலை கல்வி, பள்ளிச்சாரா கல்வி இயக்குனரகம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரியும் இடங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இதன் அருகில் 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு மண்டல தேர்வுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி டி.பி.ஐ. வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.40 கோடியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டசபையில் கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்ட தகரத்தால் செய்யப்பட்ட வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒரு சில மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இந்த வேலிக்குள் மண்டல தேர்வுத்துறை அலுவலகத்தின் புதிய கட்டிடம் உள்ளது. மேலும் 30 மரங்கள், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உள்ளன. ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்பட உள்ளதால் அந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட இருக்கின்றன. 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமும் இடிக்கப்பட உள்ளன. மேலும் கட்டிடம் அருகே உள்ள சிமெண்ட் கூரையால் ஆன கட்டிடமும் காலி செய்யப்பட இருக்கிறது. மரங்களுக்கு ஆபத்து இது குறித்து டி.பி.ஐ. மூத்த ஊழியர்கள் கூறுகையில், நாங்கள் வேலைக்கு சேர்ந்த போது டி.பி.ஐ. வளாகம் சென்னையில் உள்ள பசுமை இடங்களில் ஒன்றாக விளங்கியது. இப்போது வர இருக்கும் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தை வரவேற்கிறோம். ஆனால் இதனால் 30 மரங்கள், 10 மரக்கன்றுகள் வெட்டப்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே 3 மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். மேலும் 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடமும் தப்புமா? என தெரியவில்லை. எனவே ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் | ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரம் திருத்தியமைக்கப்பட்டதன் காரணமாக பயிற்றுவிப்பு ஆசிரியர்களை ஆள்குறைப்பு செய்தல் கூடாது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் | ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரம் திருத்தியமைக்கப்பட்டதன் காரணமாக பயிற்றுவிப்பு ஆசிரியர்களை ஆள்குறைப்பு செய்தல் கூடாது.

என்ஜினீயரிங் கலந்தாய்வு கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

என்ஜினீயரிங் கலந்தாய்வு கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு. என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, என்ஜினீயரிங் படிப்பிற்கான விண்ணப்ப கட்டணத்தை கேட்பு காசோலையாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. எத்தனை பேர்? அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ‘பொறியியல் படிப்பிற்கு இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 580 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 12 ஆயிரத்து 310 பேர், 42 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் தங்களது சொந்த இணையதள வசதி மூலமாகவும், 270 பேர் கேட்பு காசோலை மூலமாகவும் கட்டணங் களை செலுத்தியுள்ளனர்’ என்று கூறினார். செயல்பட வேண்டும் அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு கட்டணத்தையும் கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், ‘கலந்தாய்வுக்கான கட்டணத்தையும் கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல கலந்தாய்வு முடியும் வரை 42 உதவி மையங்களும் செயல்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடந்தது. 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனை யாகின. இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் சுமார் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி (நாளை) வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 1-ல் வகுப்பு தொடக்கம் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரையும், 2-ம்கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையும் நடக்க உள்ளது. கல்லூரிகளில் முதலாண்டு வகுப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு

இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை காலை வெளியிடப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின் றனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி

மாணவர்களின் பாச போராட்டம் வென்றது: இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மாணவர்களின் பாச போராட்டத்தால் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு, தனது பணியை தொடங்கினார். கதறி அழுதனர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவலில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுவிப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர். கிழித்து எறிந்தார் இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர்ந்து 10 நாட்கள் பணியாற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். மாணவர்கள் ஆசிரியர் பகவானை வழிமறித்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் அமைதிபடுத்த பகவானுக்கு வழங்கிய பணி விடுவிப்பு கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்து எறிந்தார் இதையடுத்து மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அமைதியாகி கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணி விடுவிப்பு கடிதம் வழங்கப்பட்டு அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டார். பணியை தொடங்கினார் இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுபணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கட்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார்.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக் கான தரவரிசை பட்டியல் (வியாழக் கிழமை) வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல் மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட்டது. 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்து சேர்ந்தன. தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு உத்தேசமாக ஜூலை 7-ந் தேதி தொடங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதிதேர்வு மதிப்பெண் வெளியீடு

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதிதேர்வு மதிப்பெண் வெளியீடு பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதிதேர்வு கடந்த வருடம் ஏப்ரல் 30-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர் எழுதினார்கள். தேர்வு எழுதியவர்கள் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் ஆசிரியர் வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. அதை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017 PUBLICATION OF CERTIFICATE OF MARKS As per the Notification No.01/2017, dated 24.02.2017, Teacher Eligibility Test – Paper II Written Examination was conducted on 30th April 2017. 5,12,260 Candidates had appeared for the written examination, Tamil Nadu Teacher Eligibility Test – Paper – II. Now, the certificate of marks are published in Teachers Recruitment Board website. Candidates can download the certificate of marks from the Teachers Recruitment Board official website www.trb.tn.nic.in within one month. For any information candidates can contact information centre help line numbers. 044-28272455, 7373008144, 7373008134. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Dated: 25.06.2018 Chairman

புதிய பாடப்புத்தகத்தில் கி.மு, கி.பி. அகற்றப்பட்டதில் உள்நோக்கம் இல்லை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி. என்பது பொ.ஆ.மு., பொ.ஆ.பி. என்று மாற்றப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். ம.பொ.சி. அறக்கட்டளை, சிலப்பதிகார இயக்கம் சார்பில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின். 113-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தி.நகர் போக் சாலை சந்திப்பில் உள்ள ம.பொ.சி. சிலைக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிலம்புச் செல்வர் என அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றியவர். வஉசி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் நம் முன்னே உலா வருவதற்கு அவர் எழுதிய புத்தகங்களே அடிப்படை ஆகும். ம.பொ.சி.க்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும். பள்ளி புதிய பாடத்திட்டத்தில் கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்), கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்) என்பதற்கு பதில், பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்), பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு பின்) என குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து கேட்கிறீர்கள். பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த வல்லுநர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பெயர் வரக்கூடாது என்ற எண்ணமும் இல்லை, அரசியல் உள்நோக்கமும் இல்லை. பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த அறிஞர்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவர்கள். வரலாற்றை மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக் கில் இவ்வாறு மாற்றியிருக் கலாம். பள்ளி பாடப்புத்தகத்தில் கி.மு., கி.பி. என்பது பொ.ஆ.மு., பொ.ஆ.பி. என்று மாற்றப்பட்டதற்கு இதுவரை எந்தவிதமான எதிர்ப்போ, புகாரோ அரசுக்கு வரவில்லை. ஒருவேளை ஏதேனும் விமர்சனங்கள் வந்தால் அதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.