பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (02.06.2018) கடைசி நாள்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 1,40,516 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் அறிவி்த்துள்ளபடி, ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (ஜூன் 2) கடைசி நாள் ஆகும். ஆன்லைன் பதிவு தொடங்கிய கடந்த 29 நாட்களில் 1,40,516 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் ஜுன் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். அதைத்தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும்.

Comments