ஜூன் 16-ல் ரம்ஜான் விடுமுறை தொலைதூரக்கல்வி தேர்வுகள் தள்ளிவைப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஜூன் 16-ம் தேதி நடைபெறுவ தாக இருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவ தாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்படிப்புகளுக்கான தேர்வு கள் ஜூன் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தன. ரம்ஜான் பண்டிகை காரணமாக, அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேர்வு தேதி விவரங்களைத் தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத் தில் (www.ideunom.ac.in) இருந்து மாணவர்கள் தெரிந்து கொள்ள லாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments