எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு செய்முறை பயிற்சி 25, 26 தேதிகளில் நடக்கிறது

நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகைபுரிந்து ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், 25, 26 தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆகும். இது செய்முறை தேர்வு குறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை அரசுகள் தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Comments