சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று 26.6.2018 வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று 26.6.2018 (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் 26-ம் தேதி (இன்று செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். www.results.unom.ac.in, www.ideunom.ac.in, www.egovernance.unom.ac.in ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Comments