தொழிலாளர் கல்வி நிலைய பட்ட, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 3-ம் தேதி கடைசி நாள்

தொழிலாளர் கல்வி நிலைய பட்ட, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 3-ம் தேதி கடைசி நாள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் பட்ட மற்றும் பட்டய படிப்புகளில் சேர ஜூலை 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), பட்டப் படிப்புகள் மற்றும் பிஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். மற்றும் ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டயப்படிப்பு) ஆகியன நடத்தப்படுகின்றன. பி.ஏ., எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மற்ற படிப்புகள் தமிழக அரசு அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தப் பட்ட மற்றும் பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இக்கல்வி நிலைய மாணவர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் மனிதவளத் துறையில் பணிபுரிகிறார்கள். நேரில் பெற ரூ.200 மேலும் தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர், தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ., எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, பிஜிடிஎல்ஏ ஆகிய பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஜூலை 3-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நேரில் விண்ணப்பம் பெற ரூ.200 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ.100 செலுத்தி (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்) பெறலாம். தபாலில் பெற தபால் கட்டணமாக ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டும். தபாலில் பெற விரும்புவோர் The Director, Tamilnadu Institute of Labour studies, Chennai-5 என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளரும் இணைப் பேராசிரியரு மான ரா.ரமேஷ்குமாரை 9884159410, 044-28440102ஸ 28445778 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சலிலும் தகவல் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments