71 அரசு கலைக் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

71 அரசு கலைக் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கிலும் வேலைவாய்ப்பு நோக்கிலும் 2018-10-ம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். இதற்காக 683 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று கடந்த ஜூன் 1-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, நடப்பு கல்வி ஆண்டிலிருந்து 71 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்பில், 71 பிஎச்டி என மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளை கையாள்வதற்காக 693 உதவி பேராசிரியர் பணியிடங்களில் முதல் ஆண்டுக்கு 270 இடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அதற்காக ரூ,.26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 840 அனுமதி அளித்து உயர்கல்வித்துறை ஆணை வெளியிட்டுளளது. புதிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கு ஜூன் 27 முதல் அரசு கல்லூரிகளில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 9-ம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். 264 புதிய பாடப்பிரிவுகளையும் அவை வழங்கப்படும் கல்லூரிகளின் விவரங்களையும் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) உயர்கல்வித்துறைத்தின் கீழ் காணலாம். மாணவர்கள் இந்த வாய்ப்பை நடப்பு கல்வி ஆண்டிலிருந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Comments